Friday, June 14, 2024

MUSIC TALKS - KARUPPANA KAIYALA ENNA PUDICHAAN KAADHAL EN KAADHAL POO POOKUDHAMMA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய்புடுச்சி ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா

சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம்புல்லு ஆடை இப்போ மேயுதம்மா 
பார்வையாலே ஆயுள்ரேகை தேயுதம்மா
இவள் காதல் இப்ப ஜோலிய தான் காட்டுதம்மா

கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே !

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டம் இல்லையே !
ஒரு கன்னியால கண்டம் - ன்னு தெரியவில்லையே !
ஆத்துக்குள்ள மீன பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் 

சிவப்பாக இருப்பாளே  சிவப்பாக
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா 
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா

உருக்கிவைச்ச இரும்பு போல உதடு உனக்கு 
அதை நெருங்கும் போது கரண்டை போலே ஷாக் எனக்கு
வெட்டும் புலி தீப்பெட்டிப்போல் கண்ணு உனக்கு 
நீ பாக்கும்போது பத்திக்குச்சு மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூ இருக்கு 
உன் பூப்போட்ட பாவாடை மேல் எனக்கு கிறுக்கு

கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய்புடுச்சி ஆட்டுதம்மா 
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
காதல் இப்ப ஜோலிய தான் காட்டுதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...