திங்கள், 10 ஜூன், 2024

MUSIC TALKS - NILAVAI KONDUVAA KATTILIL KATTI VEI MEGAM KONDUVAA SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு 
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
மெல்லவா?, உனை கிள்ளவா? இல்லை அள்ளவா? நீ வா

வரவா?, வந்து தொடவா? உன் ஆடைக்கு விடுதலை தரவா?
அவசரம் கூடாது அனுமதி பெறும் வரையில்
பொதுவா நான் சொன்னா நீ சொன்ன படி கேட்கும் ஆளு !
இது போன்ற விசயத்தில் உன் பேச்சு உதவாது

மெல்ல இடையினை தொடுவாயா?
மெல்ல உடையினை களைவாய ?
நான் துடிக்கையில் வெடிக்கயில் முத்தங்கள் தருவாயா?
போதுமா?, அது போதுமா? ஆசை தீருமா?

மாமா, என் மாமா இந்த நிலவை ஊதி அணைப்போமா?
காணாத உன் கோலம் கண்கொண்டு காண்கின்றதே
இதழால் உன் இதழால் என் வெட்கம் துடைத்துவிடுவாயா?
அங்கத்தில் வெட்கங்கள் எங்கெங்கு சொல்வாய
தேன் எங்கெங்கு உண்டு என்று பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல் பேரின்பம் வாராதய்யா
இன்பமா, பேரின்பமா அது வேண்டுமா?

நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
நிலவை பிடித்தேன் கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன் மெத்தை விரித்தேன்

காயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
காயும் சூரியனை கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட இந்திரனை நம்பினேன்

இன்று முதல் இரவு 
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
மெல்லவா?, உனை கிள்ளவா? இல்லை அள்ளவா?  நீ வா


கருத்துகள் இல்லை:

இணையதள கருத்துக்கள் ! EP.1

ஒரு மனிதராக பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் தனிப்பட்டதாக மட்டுமல்ல, பொருளாதாரத்துடனும் ஆழமாக இணைந்துள...