Monday, June 17, 2024

இந்த வலைப்பூ அப்டேட் பண்ணப்பட வேண்டியது உள்ளது !

 



இந்த வலைப்பூவை நிறைய விஷயங்களால் அப்டேட் பண்ண வேண்டும் :


1.  இந்த வலைப்பூ நான் தொடங்கும்போது எதுக்காக தொடங்கினேன் என்றால் எந்த விதமான சேவை நோக்கத்துக்காகவும் மக்கள் பயன்பாட்டுக்காகவும் நான் தொடங்கவில்லை. வணிக நோக்கத்தோடு நிறைய பணம் சம்பாதிக்கத்தான் தொடங்கினேன். மேலும் சொந்தமாக நிறுவனத்தை தொடங்கதான் நான் பணத்தை சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வலைப்பூ எனக்கு போதுமான வருமானத்தை கொடுக்கவில்லை என்றாலும் என்னுடைய செலவுகளில் 10 சதவீதம் கவர் பண்ண இந்த வலைப்பூ எனக்கு சப்போர்ட் பண்ணி உள்ளது ! 

2. இருந்தாலும் இந்த வலைப்பூ கருத்துக்களில் இன்றைய தேதிக்கு பெரிய அளவில் ரெகுலேஷன் தேவைப்படுகிறது. இங்கே என்னுடைய சொந்த கருத்துக்கள் தப்பான வகையில் புரிந்துகொள்ளப்பட கூடாது. மக்களுடைய எதிர்ப்பு இந்த வலைப்பூவுக்கு இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். இந்த வலைப்பூ 2017 - 2024 வரை செயல்பட்டு இதுவரைக்கும் 900 பதிவுகளை கொடுத்து இருக்கிறது. பிடித்த பாடல் வரிகள் பதிவுகளை நீக்கினால் 800 பதிவுகளை நான் போட்டு இருக்கிறேன். 

3. இது எல்லாமே என்னுடைய கருத்துக்கள்தான். இந்த கருத்துக்களுக்கு முழு பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டியது நான்தான். இன்றுதான் (17-06-2024) இந்த வலைப்பூவை ரெகுலேஷன் செய்ய நான் முடிவு எடுத்துள்ளேன். நிறைய போஸ்ட்களை நான் மாற்றி எழுத வேண்டும். ஆகவே புதிய போஸ்ட்களை என்னால் பதிவு பண்ண முடியாது. இந்த செயல்பாட்டுக்கு நான் POWERBLADE-X என்று பெயரிட்டு இருக்கிறேன். இந்த பெயருக்கு தனியான காரணம் இருக்கிறது. நான் பின்னதாக சொல்கிறேன். 

4. இது எல்லாமே ஒரு எழுத்தாளராக என்னுடைய புரஃபஷனலிஸம் மேம்பட வேண்டும் என்பதற்காக செய்கிறேன். சமூக அக்கறை மற்றும் பொறுப்புகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. எப்போதுமே நல்ல மனிதனாக ஒரு கதாநாயகன் போல நடிப்பது எனக்கு பிடிக்காது. நான் என்பது நான்தான். தற்காலிகமாக நல்ல விதமாக நடந்துகொண்டாலும் உண்மையில் நான் கோபப்படும் ஒரு சராசரி மனிதன்தான். இந்த வலைப்பூவுக்கு நான் இப்போது கொடுக்கப்போகும் அப்டேட் கண்டிப்பாக இந்த வலைப்பூவின் முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் பணவரவை மேம்படுத்தும் என்றும் நம்புகிறேன். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...