ஒருவருக்கு ஒருவர் சம்மந்தமே இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும் கதாநாயகனும் கதாநாயகியும் விதியால் நிச்சயதார்த்தம் பண்ணப்பட்டாலும் கல்யாணமே நமக்கு வேண்டாம் என்று கல்யாணத்தை நிறுத்தி பிரிந்து போகத்தான் பார்க்கின்றார்கள். இருந்தாலும் எப்படி காலம் நகர நகர இவர்களுடைய இந்த பிரிவுக்காக செய்யும் செயல்களே இவர்களுக்குள்ளே நெருக்கத்தை உருவாக்குகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை. அடிப்படையில் டும் டும் டும் படத்தின் மேலோட்டாமான கதைதான் என்றாலும் மிடில் கிளாஸ் நகர்ப்புற வாழ்க்கையின் பின்னணியில் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள். ஸாங்க்ஸ் மற்றும் படத்தொகுப்பு தேவைப்படும் அளவுக்கு இருக்கிறது. வசனங்கள் கலகலப்பாக ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னுமே நிறைய ப்ரொடக்ஷன் வேல்யூ கொடுத்து இன்னுமே கதையில் நன்றாக ஃபோகஸ் பண்ணி இருந்திருக்கலாம். இருந்தாலும் கிடைத்த மினிமம் பட்ஜெட்டில் புதிதாக யோசித்து இப்படி கொஞ்சம் நல்ல ப்ரேஷன்டெஷனை கொடுக்க படக்குழுவினர் சிறப்பாக முயற்சி பண்ணி இருப்பது ரொமான்டிக் காமெடியில் ஒரு நல்ல அட்டெம்ட்தான் ! இந்து கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான் !
No comments:
Post a Comment