Saturday, June 15, 2024

GENERAL TALKS - கடலில் கலந்த ஒரு பாட்டில் உப்பு நீர்தான் மனிதனின் பாவங்கள் !


என்ன பண்ண சொல்லறீங்க ? வேற என்னதான் பண்ண முடியும் ? போதுமான சக்திகள் கிடைக்கவே இல்லை. இருக்கக்கூடிய சக்திகளும் மொத்தமாக தினம் தினம் தேய்ந்து கொண்டு இருக்கிறது. இது எல்லாமே தப்பான விஷயம். இந்த போராட்டத்தை நாம் வெற்றி அடைந்தாக வேண்டும். அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்த காரணத்துக்காக மனது துரோகம் அடைந்தது தான் நடந்தது. இந்த நாட்களில் எனக்கு நிறைய வெற்றி கிடைத்து இருக்க வேண்டும். இந்த வெற்றிகள் கிடைத்து இருந்தால்தான் என்னால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். இத்தனை விஷயங்களில் பல வருடமாக போராடி வெறும் கையோடு விட்டுக்கொடுத்து தோற்றுப்போகும் வாழ்க்கை கிடைத்ததால் நாம்தான் பாவம். மிகவும் பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சின்ன தூசுக்கும் சிறியதாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம்முடைய சக்திகளை நாம் எப்படியாவது மேம்படுத்த வேண்டும். நடந்த எல்லாமே நாசமாக போக ஒரு வகையில் நாமும் காரணமாக மாறிவிட்டோம். நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து கஷ்டப்படுக்கொண்டே இருப்பதால் கஷ்டங்கள் வந்துவிட்டால் சோர்ந்து போகின்றோம். கொஞ்சம் நேரம்தான் தூக்கம் கிடைக்கிறது. தூக்கத்தில் கனவுகளில் எல்லாவற்றையும் மறந்து கஷ்டங்கள் இல்லாமல் வாழலாம். ஆனால் அது ஒரு வாழ்க்கை கிடையாது. அது ஒரு வகை போதை. உண்மையில் கஷ்டப்பட வேண்டும். சோர்வு இருந்தால் எந்த காரணம் கொண்டும் ஓய்வு எடுக்க கூடாது. இந்த விஷயத்தில் நான் இப்படி வார்த்தைகளாக கஷ்டப்பட வேண்டும் முன்னேற வேண்டும் என்று கதை விடுவது எல்லாம் மிகவும் சுலபமானது தான். நிறைய காலம் தேவைப்படுகிறது. நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் நிறைய மேம்பாடு தேவைப்படுகிறது. இவை அனைத்துமே நிறைய பணம் இருந்தால்தான் கிடைக்கும். வாழ்க்கை நரகமாக மாறுகிறது. கஷ்டங்கள் வந்தால் கடலுக்குள் மூழ்காமல் இருக்க கைகளை அசைத்து கடல் நீரில் போராடலாம் ஆனால் நம்முடைய சக்திகள் குறைந்து போகும் பட்சத்தில் கைகளை அசைத்து கூட போராட சக்திகள் இல்லாமல் போய்விடும். ஜெயிக்கப்போவது நாமாக இருக்க வேண்டும். நம்மை தவிர்த்து யார் வெற்றி அடைந்தாலும் வாழ்க்கை மிகவும் தவறாக போய்விடும். போதாக்குறைக்கு நம்மோடு அட்டை பூச்சிகளை போல ஒட்டிக்கொள்ளும் பிரச்சனைகள் நம்முடைய இரத்தத்தை உறிஞ்சும் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பதால் ஆரம்பத்தில் இருக்கும் வேகம் போக போக தேய்ந்து கொண்டே இருக்கும். இப்படி கேவலமாக பாவங்களை செய்யும் ஆட்களே சந்தோஷமாக இருக்கும்போது நாம் எதனால் சந்தோஷத்தை அடைய போராட கூடாது. இந்த விஷயங்கள் எல்லாம் நிறைய மோசமான செயல்களை செய்து தேவைப்படும் பொருட்களை ஈட்டினால் இந்த விஷயங்களை சமாளித்து விடலாம் என்பதால் எதுவுமே தவறு கிடையாது. நாம் செய்யும் விஷயங்கள் கடல் தண்ணியில் கலக்ககூடிய ஒரு பாட்டில் உப்பு தண்ணீர்தான் என்பதால் என்ன பாவங்களை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று இவ்வளவு கவலைக்கிடமான நிலைமையை உருவாக்கியது யார் ? நான் என்ன பண்ணினால் நம் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் !

No comments:

Post a Comment

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...