Wednesday, June 12, 2024

CINEMA TALKS - OH KAADHAL KANMANI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்த காலத்தில் புதிய தலைமுறை காதல் என்பது இரண்டு பேர் சேர்ந்து கல்யாணம் பண்ணி வாழ முடியாது என்றால் அந்த காதலர்களுக்கு போதுமான காலமும் சூழநிலைகளுமே அமைந்துவிட்டால் கணவன் மனைவியாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு வருடம் சேர்ந்து வாழ்வதுதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? லிவ் - இன் - டுகேதர் என்ற வாழ்க்கை அமைப்பை பற்றி நிறைய விஷயங்கள் நிறைய படங்களில் சொல்லி இருந்தாலும் இந்த படம் மிகவும் அழகாக மிகவும் புதுமையாக உள்ளது. மணி ரத்னம் அவர்களுடைய கேமரா ஆங்கில்ஸ் மற்றும் விஷுவல் ப்ரேஸேன்டெஷன் இந்த படத்தில் வேற லெவல். சும்மா அடைத்து வைத்து ஒரு பெரிய வீட்டை காண்பித்து பணக்கார வீடு என்றும் குடும்பம் என்றும் இவர்களின் கதை என்றும் வாரிஸூடு படத்தினை போல மொக்கை மொக்கையாக போட்டு கிளைமாக்ஸ்ஸில் ஹீரோவின் அப்பாவை தீர்த்துக்கட்டிவிட்டு அது எல்லாம் ஒரு படம் என்று எந்த தைரியத்தில் ரிலீஸ் பண்ணுகிறார்கள் ? - இந்த படத்தை பாரத்தாவது இவர்கள் புரிந்து தெளிந்துகொள்ளட்டும், காதல் ஒரு சாதாரணமாக இருக்கும் டாபிக்தான். இந்த காதலுக்கு இவர்கள் கொடுத்த கேரக்ட்டர் டிசைன்னும் கதையை நகர்த்தி செல்லும் நிதானமான திரைக்கதையும் வேறு ஒரு காதலின் யுனிவெர்ஸ்க்கே அழைத்து சென்றுவிட்டது. லொகேஷன்கள் மற்றும் பேக்ரவுன்ட் செட்டிங் வேற லெவல். சல்மான் மற்றும் மேனன் இந்த படத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பாலிவுட் பொதுவாக சோதப்பும் ஒரு டாபிக்கை கதைக்களமாக எடுத்து கோலிவுட் வெளியீடு பண்ணியிருக்கும் இந்த திரைப்படம் இன்னொரு லெவல்லுக்கும் இன்னொரு லெவல். கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள். ஒரு வீடியோகேம் விளையாடுவதை போல சுறுசுறுப்பான காதல் சொல்லும் விளையாட்டு இந்த படத்தில் உங்களுக்காக காத்திருக்கிறது. "விடலை புள்ள நேசத்துக்கு ! செவத்த புள்ள பாசத்துக்கு ! அழகர் மலை காத்து வந்து தூது சொல்லதோ" காலத்து காதல்தான் காதல் என்றால் காலம் மாறிவிட்டது ! 


No comments:

Post a Comment

GENERAL TALKS - சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிளான் போட வேண்டும் !

ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினால...