Friday, June 28, 2024

GENERAL TALKS - பகலில் கொள்ளை அடிப்பது எப்படி ?




நான் என்னுடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு ஒரு சிம் கார்டு நிறுவனத்தை நம்பினேன் என்றால் ரூபாய் 2345 செலவு செய்து 336 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்து இருப்பேன் ? இந்த நிறுவனத்தின் பெயர் 'லியோ' வைத்துக்கொள்ளுங்கள். நேரடியாக இந்த நிறுவனத்தின் பெயரை தாக்கி பேச கூடாது என்பதற்காக நான் இந்த பெயரை வைத்து இருக்கிறேன். நான் பல வருடங்களாக 'லியோ' நெட்வொர்க்கை வைத்து இருக்கின்றேன். கடைசி 2 மாதங்களில் நெட் பேக் - ஒரு நாள் 1.5 GB யும் பயன்படுத்த முடியவில்லை. பின்னணியில் நான் ரூபாய் 222/- ரீசார்ஜ் செய்து 50 GB பின்னணியில் வைத்து இருக்கிறேன். ஆனால் கடந்த 2 மாதங்களாக இணைய இணைப்பு வேகம் 0.01 Mbps - இது கொடுமையானது. நான் அபார்ட்மெண்டு விட்டு வெளியே வந்து நடு தெருவில் நிற்கின்றேன் ஆனால் வேகம் இல்லை. ஒரு யூட்யூப் வீடியோ பார்க்க முடியவில்லை. நான் என்ன பண்ண வேண்டும். 'லியோ' நம்பிய பாவத்துக்கு நாசம்தான் பண்ணிக்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு மொக்கை வேகம் ஒரு மயிருக்கும் பிரயோஜனம் அல்ல. 9 மாதங்களாக போதுமான அளவுக்கு வேகம் இருந்த நெட்வொர்க் எதனால் இப்படி மொக்கை போட்டுக்கொண்டு இருக்கிறது. இது போதாது என்று விலைவாசியை அதிக்கப்படுத்தி இன்னும் அதிகமாக கொள்ளை அடிக்க பார்க்கின்றார்கள். 5G நன்றாக வேலை செய்கிறது என்று சொல்ல முடியாது. யாருமே பதிவிறக்கம் பண்ண முடியாத இணையங்களில் யூட்யூப்பில் நல்ல வேகம்தான். ஆனால் நிறைய இணையங்களில் 5G எப்போதும் 4G போல செயல்படுகிறது/ கூகுள் பேஜ் கூட இயங்கவில்லை/இப்போது வரைக்கும் கடந்த 2 மாதமாக வோடாபோன் ஐடியா நெட்வொர்க் கைகொடுத்து 1 Mbps வேகம் கொடுப்பதால்தான் வலைப்பூ பதிவுகளை என்னால் கொடுக்க முடிகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இப்படி ஏமாற்றி சாப்பிடும் நிறுவனகள் இந்த நிறுவனத்தின் பணம் சம்பாதிக்கும் முதலைகள் இறந்து போக வேண்டும். அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். இப்படிப்பட்ட அடுத்தவர்களுடைய காசை நன்றாக கரைக்கும் ஆட்கள் கண்டிப்பாக நசுக்கப்பட வேண்டிய கொசுக்கள். இவர்களுடைய இந்த ஏமாற்றி சம்பாதிக்கும் மோசமான நடத்தையால்தான் 'அல்லு' போன்ற தப்பான நிறுவனகளுக்கு அதிக பணம் கிடைக்கிறது. மக்களுக்கு கொடுப்பதாக சொல்லி பணத்தை பிடுங்கும் இந்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக மன்னிக்கப்பட கூடாது. பாயிண்ட் என்னவென்றால் நிறைய இடங்களில் நெட்வொர்க் கவரேஜ் கிடைக்கவில்லை என்றாலும் வோடாபோன் நன்றாக இணைய வேகம் கொடுக்கிறது/ ஆனால் லியோ நம்மை வெறும் கையை நக்க வைத்துவிடுகிறது/ 

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...