Friday, June 14, 2024

MUSIC TALKS - AATHANGARAI MARAME ARASAMARA ILAIYE AALAMARA KILAIYE ATHIL URANGUM KILIYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே '
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ ?
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ ?
மெளனத்தில் நீ இருந்தா யாரை தான் கேட்பது இப்போ ?

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே

ஓடை கரை உழவு காட்டுல ஒருத்தி 
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி 
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா ?
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா ?
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது 
அட ஓடை தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே
மாமனே உன்னை காணாமல் 
மத்தியில் சோறும் உண்ணாம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலும் 
கதவு தான் சத்தம் போட்டாலும் 
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே

ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம் 
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே
தாவணி பொண்ணே சுகம் தானா ?
தங்கமே தழும்பும் சுகம் தானா ?
பாதையில் சின்ன பாதம் சுகம் தானா ?
தொட்ட பூ எல்லாம் சுகம் தானா ?
தொடாத பூவும் சுகம் தானா ?
தோப்புல ஜோடி மரங்கள் சுகம் தானா ?

ஐத்தையும் மாமனும் சுகம் தானா ?
ஆத்துல மீனும் சுகம் தானா ?
ஐத்தையும் மாமனும் சுகம் தானா ?
ஆத்துல மீனும் சுகம் தானா ?
அன்னமே உன்னையும் என்னையும் 
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகம் தானா ?
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாள் ஆச்சு !
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோள் ஆச்சு !

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே 
ஆலமரகிளையே அதில் உறங்கும் கிளியே

ஓடை கரை உழவு காட்டுல ஒருத்தி 
யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி 
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா ?
தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா ?
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது 
அட ஓடை தண்ணி உப்பு தண்ணி ஆகாது

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...