POST ID : 2024.06.17.03.1
நம்மிடம் அதிகமான வேலை வாங்கி ஆனால் குறைவான தொகையை கொடுத்து பெரும் தொகை எடுத்துக் கொள்பவர்கள் மட்டும் தான் இந்த காலத்தில் பணக்காரராக இருக்கிறார்கள். இந்த கருத்தை ஆராய்ச்சி பண்ணும்போது மானதுக்குள்ளே தோன்றும் கேள்வி என்னவென்றால் உண்மையில் விதி நம்மை தோற்கடிக்கிறதா ? இந்த தோல்வி நாம் திறமை இல்லாமல் இருந்ததால் நடந்தது என்று நம்மை நம்பவைக்க நம்மை திறமையற்ற ஆட்களாக மாற்றுகிறதா ? இவை அனைத்துமே எதிர்ச்சியாக நடப்பது போல் எனக்கு தோன்றவில்லை வேண்டுமென்றே தோற்கடிக்க வேண்டும் என்று ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் சதுரங்கத்தின் காய்களைப் போல நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உலகத்தில் நடக்கும் ஒரு ஒரு சின்ன சின்ன விஷயங்களும் நேருக்கு நேராக கஷ்டப்படும் நிலையில் இருந்து மேலே வருபவர்களுக்கு எதிராக நடப்பது போலத்தான் இருக்கிறது. கடவுள் எப்போது வெற்றிடைபவர்களுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் என்ற மொக்கையான கான்செப்ட்டை மாற்றுகிறாரோ அப்போதுதான் உலகம் நன்றாக இருக்கும். கடவுள் தேவையான விஷயங்களுக்கு எடுத்துக் கொள்வதற்கான சக்தியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறார். ஆனால் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போதே உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து தேவையான சக்திகளை கஷ்டப்பட்டு உழைத்து பெற்றாலும் பிரயோஜனம் இல்லாதவாறு கஷ்டப்பட்ட மனிதர்களின் கண்களை குருடாக மாற்றி விடுகிறார். கடைசியில் அறியாமையின் இருளுக்குள் மனிதர்கள் மூடிவிட்டார்கள் என்றும் அறிவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிளேடு போடும் வசனங்களை விடுகிறார். எதிர்த் தரப்பில் செய்யப்படும் இந்த செயல் தர்ம சங்கடமானது மேலும் நடைமுறைக்கு சாத்தியப்படாதது இந்த செயலின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை அடையக் கூடியது மனித இனம்தான் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள் ! இந்த குப்பை செயல்பாட்டை உடனடியாக மாற்றுங்கள். அதுதான் பூமிக்கு நல்லது.
No comments:
Post a Comment