Saturday, June 29, 2024

MUSIC TALKS - HEY DUSHYANDHAA HEY DUSHYANDHAA UN SAGUNTHALA THEDI VANDHAAL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள் 
ஹேய் துஷ்யந்தா நீ மறந்ததை உன் சகுந்தலா மீண்டும் தந்தாள் 

கள்ள பெண்ணே என் கண்ணை கேட்கும் கண்ணே 
என் கற்பை திருடும் முன்னே நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய் என் நெஞ்சை கொத்தி தின்றாய் 
எனக்கு உன்னை நினைவில்லையே

பூங்காவில் மழை வந்ததும் புதர் ஒன்று குடை ஆனதும் 
மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்ததை 
மறந்தது என்ன கதை ?

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்

அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகத்தில் 
இரு பேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில் 
வருடித்தந்தாய் மனதை திருடிக்கொண்டாய் வயதை 
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை

ஆளாலங்ககாட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே 
உன்னை போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

அந்த நீல நதிக்கரை ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி நேரம் 
நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம்

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா உன் சகுந்தலா தேடி வந்தாள்

பார்த்த ஞாபகம் இல்லையோ ? பருவ நாடகம் தொல்லையோ ?
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ ? மறந்ததே இந்த நெஞ்சமோ ?

ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா ஹேய் துஷ்யந்தா 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...