Wednesday, June 12, 2024

GENERAL TALKS - பட்டய கிளப்பும் மீடியா மான்ஸ்ட்டர்கள் !

 



இந்த காலத்து மீடியாக்கள் எல்லாம் செய்திகளை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு பேசுகிறது என்று சொல்லலாமா ? இன்றைக்கு பெரும்பாலான மக்கள் தொலைக்காட்சி மற்றும் இன்டர்நெட் மூலமாக மட்டும்தான் உலக நடப்புகளை தெரிந்துக்கொண்டு இருக்கின்றார்கள் ! இன்டர்நெட் கூட நம்பலாம் ஆனால் தொலைக்காட்சிகளை நம்பவே கூடாது ! ஒரு வெப்ஸைட் இருக்கிறது ! இந்த வெப்ஸிட்டில் ஒரு சில டேம்ப்லேட் வீடியோகேம்கள் இருக்கிறது. விருப்பப்பட்டால் நம்முடைய பேரை வீடியோ கேம்களின் ஸ்டிக்கேரில் ஒட்டி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் ! ஒரு குட்டி பையன் அவனுடைய கேம்மை அவனுடைய பெயரில் மட்டும் மறு-பெயரிட்டு உதாரணத்துக்கு "ராகுல் செஸ் . APK" , "ராகுல் - பபுல் ஷூட்டிங் . APK" என்று ரீ-நேம் செய்து  பயன்படுத்தி இருக்கிறான் ! அதுக்கு இந்த டிவி தொலைக்காட்சிகள் 13 வயது சிறுவன் வீடியோகேம் தயாரிப்பு பண்ணிவிட்டான் என்று போலீஸ் அதிகாரிகளிடம் விருது வாங்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டார்கள் ! தண்ணீரில் ஓடும் என்ஜின் . பறக்கும் ட்ரோன் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கிறேன் என்று வீட்டில் கிடைக்கும் கம்பிக்கு எல்லாம் வேலிடிங் அடித்து ஓடவிட்டு விபத்துகளும் உயிர்ச்சேதமும் நடப்பது இந்த மீடியாக்கள் ஃபேமஸ் ஆகியவேண்டும் என்ற காரணத்தால் மக்களுக்கு பப்ளிசிட்டி மோகத்தை அதிகரித்து விட்டதால்தான் என்றால் யாரால் மறுக்க முடியும் ! இவர்கள் எப்போதுமே துணிவு படத்தில் இடம்பெற்ற காட்சிகளை போல கிடைத்த தகவல்களில் இருந்து தனக்கு சாதகமாக பணம் சம்பாதிக்க காரணம் விளம்பரங்கள்தான். திரைப்படங்கள் , நாடகங்கள் , போன்றவைகளை 1.1 X வேகத்தில் தெரியாதபடி ஸ்பீட் அப் செய்து 30 செகண்ட் விளம்பரத்துக்கு இடம் கொடுக்க ஆசைப்படும் இவர்களிடம் மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும் ! ராஸ்ப்பெரி பி என்ற 3000/- ரூபாய்க்கு விற்கும் கணினி சிப் ஒன்றை கொஞ்சம் வேலை பார்த்ததால் சாட்டிலேட் கண்டுபிடித்தான் சிறுவன் என்று முதலமைச்சர் கையால் அவார்ட் வாங்கி கொடுத்துவிட்டார்கள் இந்த மீடியாக்கள் என்றால் உண்மையான படிப்பறிவு மிக்க இஞ்ஜினீயர்கள் வெளிநாட்டுக்கு போய் வேலை பார்த்து சம்பாதிக்க முயற்சிப்பதில் ஆச்சரியம் எதுவுமே இல்லையே ? 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...