Monday, June 24, 2024

GENERAL TALKS - விதியை எதிர்த்து விளையாடும் விளையாட்டு

 



விதியோடு விளையாடும் இந்த விளையாட்டுகளில் சந்தோஷம் சர்க்கரை ஆனால் கஷ்டங்கள்தான் சத்துணவு , சந்தோஷங்கள் இருக்கும்போது இந்த உலகமே நம்ம உள்ளங்கைக்குள்ளே அடங்கியது போல இருக்கும். ஆனால் எல்லாமே ஒரு வகையான போதையை போன்றதுதான். உண்மையில் கஷ்டங்கள் மட்டும்தான் நமக்கான வெற்றியை கொடுக்கும். மேலும் போனஸாக பின்னாட்களில் இன்னுமே வெற்றியை அடைய போதுமான அறிவு திறனையும் கொடுக்கும். இன்னைக்கு தேதிக்கு பணம் என்ற வகையில் என்னுடைய இழப்பு அதிகம். இதனை ஒரு வியாபார நஷ்டமாக எடுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் என்னுடைய தவறுகளுக்கு இந்த தண்டனை மிகவுமே பெரியது. இந்த பணம் எனக்கு கிடைத்துவிடும் என்று நான் நம்பிக்கை வைத்து இருந்தேன். நம்பிக்கை நாசமாக போய்விட்டது. மறுபடியும் வாழ்க்கை பூச்சியத்துக்கு குறைவாக மைனஸ்ஸில் சென்றுகொண்டு இருக்கிறது. இங்கே என் மேல் தவறு என்று என்னால் என்னை குறை சொல்ல முடியாது. விதி தன்னுடைய கேவலமாக சித்து விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்துவிட்டது. இனிமேல் நான்தான் கவனமாக இருக்க வேண்டும். கற்பனையான விதியிடம் இருந்து நம்மால் எதுவுமே எடுத்துக்கொள்ள முடியாது ஆனால் உண்மையாக இருக்கும் நம்மிடம் இருந்து நாம் சம்பாதித்த அனைத்து விஷயங்களையும் விதி நன்றாகவே எடுத்துக்கொள்ளும். இன்றைக்கு தேதிக்கு நான் கற்றுக்கொண்ட கருத்து என்னவென்றால் ஒரு போராட்டம் என்றால் சரியென்றும் தவறென்றும் பார்க்காமல் எல்லாமே செய்து போராடவேண்டும். சரியான விஷயங்களை மட்டும் செய்வது கூட இனிமேல் வரப்போகும் நாட்களில் நாம் தோற்றுப்போக காரணமாக இருக்கலாம். எதுக்கு வெற்றியை அடைய வேண்டும் ? சந்தோஷத்துக்காகவா ? இல்லை. வெற்றியை அடைய போராடுவதற்கான காரணம் என்னவென்றால் எந்த ஒரு போராட்டத்திலும் இருப்பவர்கள் எல்லாவற்றையும் இல்லாதவர்களிடம் இருந்து பறித்துக்கொள்வார்கள். இல்லாதவர்களுடைய வாழ்க்கையில் இழப்புகள் அதிகமாக இருக்கும். இந்த இல்லாதப்பட்ட மக்கள் வெற்றி அடைய வேண்டும். அப்போதுதான் இந்த இழப்புகளை ஈடுகட்ட முடியும். இந்த நேரடியான புத்திசாலித்தனம் என்னை வியக்க வைக்கிறது. இதனை விடவும் சிறப்பாக யோசித்து என்னால் விதியை வென்றுவிட முடியுமா ? நான் ஆதரவு கொடுத்தவர்களை நான் தரையில் விட்டு செல்ல மாட்டேன். இந்த ஒரு விஷயத்துக்காக விதியை நான் வெற்றி அடைந்தே ஆகவேண்டும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...