Friday, August 31, 2018

CINEMATIC WORLD - SPECIAL MENTIONS - கார் ரேஸ் மட்டும்தான் இவருடைய உலகம் !! - PEGASUS TAMIL REVIEW !




இன்டர் நேஷனல் கார் ரேஸ் நிகழ்ச்சிகளில் அடுத்து அடுத்து தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகளை அடைந்த வெற்றி கார் ரேஸ் வீரர் ஒரு கட்டத்தில் ஒரு மோசமான சம்பவத்தால் அவருடைய லைசன்ஸ் கேன்ஸல் செய்யப்பட்டு இனி வரும் இன்டர்நேஷனல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையை அடைகிறார், அது மட்டுமே இல்லாமல் அவருடைய ஸ்பான்சர் செய்த நிறுவனங்களால் கடனுக்கு உள்ளாக்கப்பட்டு அவருடைய பேர் புகழ் பணம் என்று எல்லாவற்றையும் இழக்கிறார், இருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் சந்திக்கும் அனைவரிடமும் கிடைத்த உதவிகளால் மறுபடியும் ரேஸ் இல் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்று வாழ்வா சாவா என்ற நிலையில் அவர் காலந்துகொஉள்ளும் இந்த போட்டியில் வெற்றியை அடைகிறாரா என்பதுதான் ஸ்வரஸ்யமான இந்த திரைப்படத்தின் திரைக்கதையாக இருக்கிறது, இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி கடைசியில் மனதை தொடுகிறது, வாழ்க்கையில் தோல்விக்களை சந்திக்கும் சராசரி நடுத்தர மனிதனின் மனநிலையை கொஞ்சம் வேறு ஒரு பரிமாணத்தில் இந்த படத்தின் திரைப்படம் கொடுத்து இருப்பது இன்னமும் ஒரு சிறப்பம்சம் என்றே சொல்லலாம். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக அதிக தொலைவு மலைப்பகுதி கார் ரேஸ் காட்சிகள் மிகவும் பிரம்மாண்டமாக நிஜத்தில் எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு எனலாம். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய ஸ்போர்ட்ஸ் படங்களை பார்க்கலாம் ஆனால் இந்த படம் ரொம்பவுமே வித்தியாசமாக இருக்கும். படத்துடைய கிளைமாக்ஸ் சாபம் !! இந்த படத்தையும் விட்டுக்கொடுக்கவில்லை. அது என்ன கிளைமாக்ஸ் சாபம் என்று கேட்கிறீர்களா ? CLIMAX CURSE ஒரு பெரிய TOPIC கண்டிப்பாக தனியாக FUTURE ல  - ஒரு கட்டுரை போடுகிறேன். இந்த BLOG ஐ சப்ஸ்க்ரைப் பண்ணுங்க !!



SIMPLE TALKS - LIFE IS AWSOME




"சரித்திரத்தை ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க. அது நமக்கு கத்துக்கொடுத்தது ஒண்ணுதான். HISTORYன்னு ஒரு விஷயம் உருவாக யாராவது ஏதாவது பதிவு பண்ணியிருக்க வேண்டும்.. இங்கதான் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். 2013 களில் பட்டன் ஃபோன்கள் வைத்து இருப்பது அரிது, ஆன்ட்ராய்ட் ஃபோன்கள் அதனினும் அரிது, அப்போதுதான் இந்த கேம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது,. அதுதான் CANDY CRUSH SAGA.. நண்பர்கள் இந்த விளையாட்டை விளையாடும்போது ஒரு ஒரு லெவலாக முடிக்க நிறையவே கஷ்டப்பட வேண்டியிருந்தத்து. இந்த ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டு அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாக இருந்தது. அப்போது எல்லாம் EDGE இணையதளம். அதிகபட்ச இணைய வேகமே 30 முதல் 40 கிலோபைட் வரைக்கும்தான். (ஃபேஸ்புக்கில் ப்ரோஃபைல் பிக்சர் அப்லோட் பண்ணவே 15 நிமிடங்கள் தேவைப்படலாம்) - இந்த இணைய வேகத்தில் யு ட்யூப் காணொளிகள் எல்லாம் கனவில் கூட நடக்காத விஷயம். ஆனால் ஆன்ட்ராய்ட் சரித்திரத்தை மாற்றிய இன்னொரு விளையாட்டு CLASH OF CLANS. அந்த காலத்தில் வாட்ஸ்ஆப் அறிமுகத்தை கடந்து இன்டர்நெட் பயன்படுத்த இன்னொரு காரணம் இருந்தது என்றால் அது இந்த CLASH OF CLANS-தான், இந்த விளையாட்டு. அருமையான கிராபிக்ஸ் அமைப்பு மற்றும் அட்டகாசமான கேம்-பிளே வசதிகளுடன் ஆன்லைன் விளையாட்டுகளின் உலகத்தில் ஒரு மைல்கல்லை உருவாக்கிய விளையாட்டு என்றால் மிகையாகாது. 2013 - 2014 காலங்களில் மறக்க முடியாத ஸ்மார்ட்ஃபோன் விளையாட்டுக்கள் என்று இந்த விளையாட்டுக்களை கண்டிப்பாக சொல்லலாம். ஃபேஸ்புக் அக்கவுண்ட் அல்லது ஜிமெய்ல் அக்கவுண்ட் உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஸ் டேட் பாங்க் அக்கவுண்ட் உருவாக்குவது போல அவ்வளவு கடினமானது என்று நினைத்துக்கொண்டு இருந்த காலம் அது. ஃபோன்க்கு RINGTONE வெக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு பாடல் பதிவிறக்கம் செய்ய நெட் பேக் மொத்தமும் முடிந்துவிடும் மாயாஜாலங்கள் அந்த காலத்தில் நடக்கும். அதெல்லாம் வேற லெவல் நினைவுகள். இன்றைக்கும் யோசித்து பார்க்கவே அதிசயமாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைக்கு எல்லாம் எல்லைகளை கடந்துவிட்டது. " IMAGE CREDITS ; NATILIA SLASTIKOVA - PEXELS

LOOK FOR ANSWER INSIDE YOUR QUESTION- SIMPLE TALKS



பள்ளிக்கூடத்திலே சயின்ஸ் ப்ராஜக்ட் எக்ஸிபைசன் நடக்கும். ஒரு பையன் பேகிங் சோடா வல்கானோ (BAKING SODA VOLCANO) செஞ்சு இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியதாக சந்தோஷமாக இருப்பான். இன்னொரு பையன் ஒரு சிறிய மோட்டார், மின்கல இணைப்பு, பிளாஸ்டிக் விசிறி இறக்கைகள், அட்டை இருந்தால் ஒரு குட்டி காற்றாலை (WINDMILL) மாடல் செய்து வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத மின்சாரத்தை உருவாக்க ஒரு மைல் கல்லை கடந்துவிட்டதாக நினைப்பான். ஆனால் உண்மையில் கனவுகள் காண்பது மிகவும் அவசியமான ஒரு விஷயம். ஒரு வார்த்தையை புரிந்துகொள்ள வேண்டும். செமெண்ட் நிறுவனத்தின் விளம்பர காட்சியில் இடம்பெற்ற இந்த வாரத்தை மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆன வார்த்தைகள் என்று சொல்லலாம். "பெரிய கனவுகளுக்காக கவனமாக இருங்கள்" என்பதுதான். உங்களுடைய கனவு "ஒரு கம்பெனி இன்டர்வியூவில் வெற்றி அடைந்தது ஐந்து இலக்க சம்பளம் வாங்க வேண்டும் என்றால் அந்த கணவுக்காக செய்யவேண்டிய செயல்கள் அதிகம். அதே போல உங்களுடைய கனவு ஒரு மிகப்பெரிய கம்பெனியை உருவாக்க வேண்டும் என்றால் அதற்காக செய்ய வேண்டிய முயற்சிகள் அதனை விடவும் அதிகம், ஆனால் கனவுகள்தான் இந்த உலகத்தில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளன. இங்கே எந்த துறையை தேர்வு செய்தாலும் துறையை சார்ந்த போட்டிகள் நிச்சயமாக இருக்காதான் போகிறது, அந்த போட்டிகளை எப்போதுமே எதிர்கொள்ள தயாராக இருங்கள், உங்களுக்காக வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும் என்று நினைக்கவேண்டாம். வெற்றிகரமான வாழ்க்கையை எடுத்துக்கொள்ளுங்கள். 

Image Credits : Photo by Katrina Wright on Unsplash

Thursday, August 30, 2018

HOW TO FAIL IN LIFE - TAMIL - EXPLAINED IN TAMIL


வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி ? - HOW TO FAIL IN THIS LIFE - EXPLAINED IN TAMIL





இங்கே எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியடைவது எப்படி என்று கட்டுரை எழுதுவார்கள் ? ஆனால் நான் கொஞ்சம் DIFFERENT ஆக வாழ்க்கையில் தோல்வி அடைவது எப்படி என்று ஒரு சின்ன நகைச்சுவையான கட்டுரை எழுதுகிறேன் - இந்த கட்டுரையின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் ஒரு பொசிட்டிவிடியுடன் சந்திக்க வேண்டும் என்பதே - அதுதான் காரணம். 


1. பயனற்ற விஷயங்களில் நேரத்தை செலவு செய்யுங்கள் : 

வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் நேரமாக இருந்தாலுமே வேஸ்ட் பண்ண கூடாது. ஆனால் இன்னைக்கு காலையில் எழுந்து கண் விழித்ததும் ஸ்மார்ட்ஃபோன் பார்க்கும் உலகம். வீடியோ கேம்களில் அதிகமாக டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். வீடியோ கேம்ஸ் நல்ல விஷயம்தான் ஆனால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு மேல் விளையாடினாலும் சலிப்பு தெரியாமல் இருப்பதால் கடைசியில் நீங்களே யோசிச்சு பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாவே நேரத்தை ஸ்பெண்ட் பண்ணிட்டேனோ அப்படின்னு உங்களுக்கே மனதுக்குள் தோன்றும். இன்னொரு விஷயம் சீரியல்ஸ் - கொஞ்சம் கொஞ்சம் நல்ல சீரியல்கள் - நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் - ஃபேமஸ் ஆன நிகழ்ச்சிகள் கூட இருக்கிறது. தொலைக்காட்சி தொடர்கள் எனக்கும் கொஞ்சம் பிடிக்கும் என்பதால் சமீப காலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் எப்போதாவது புதிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சம் நல்ல கருத்துக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சி சீரியல்கள் பொழுதுபோக்குதான். குறைவான செலவில் அதிகமாக நேரத்தை செலவு செய்ய இது எல்லாமே பெஸ்ட் ஐடியா !!


2. பயனற்ற காணொளிகளை பாருங்கள் 

OKEY.. இந்த பயனில்லாத காணொளிகள் எல்லாம் வேண்டாம் என்றால் நிறைய பயனுள்ள விஷயங்கள் யுட்யூப் இணையத்தளத்தில் இருக்கிறது. உதாரணமாக சாதித்தவர்களின் இன்டர்வியூக்கள். நிறைய இடங்களை சுற்றிப்பார்க்கும் VLOGS, புது புது TOPICS பற்றிய பேச்சு, நியூஸ் சேனல்கள். இன்டர்நெட் கோர்ஸஸ் - LANGUAGE SPEAKING - தகவல்கள் - TED ED - DOCUMENTRY - INFOTAINMENT என்று நிறைய பயனுள்ள விஷயங்கள் இருக்கிறது. ஒரு இன்டர்வியூ பார்க்கும்போது வெற்றி அடைந்தவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் எப்படி சாதித்தார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்- அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும்போது இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் . இன்னொரு நல்ல விஷயம் ஆடியோபுக்ஸ் கூட கேட்கலாம். இல்லையென்றால் இணையதளங்களில் பயனுள்ள கட்டுரைகள் படிக்கலாம். 

3. LONG TERM PLANS - இருக்க வேண்டாம் - இன்னும் சொல்லப்போனால் PLANS - இருக்கவே வேண்டாம். 

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் - உதாரணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஒரு துறையை அதாவது DEPARTMENT -ஐ தேர்ந்தெடுக்கும்போது கண்டிப்பாக போட்டிகள் நிறைய இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த போட்டியும் பொறாமையும் இருக்கும் உலகத்தை நாம் பார்த்துதான் ஆகவேண்டும். பொதுவாக வெற்றி அடைபவர்கள் எல்லோருமே அடுத்து என்ன பண்ணலாம் ? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருக்க மாட்டார்கள். இங்கே சொல்லை விட செயலுக்குதான் அதிக மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் எதிர்காலம் சார்ந்த கனவுகளையும் கற்பனைகளையும் நிறைய சேர்த்துக்கொண்டாலும் அந்த கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக செயல்கள் இருக்க வேண்டும். போதுமான திட்டம் இல்லாமல் அனுபவம் சார்ந்த முயற்சிகளும் வெற்றியை கொடுக்கும் இருந்தாலும் திட்டமிடல் எப்போதுமே நல்லது. 

4. மனதுக்குள் மாற்றங்களை உருவாக்குவதை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம் 

வாழ்க்கையில் நம்முடைய மனதை எப்போதுமே நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த விஷயம் எனக்கு பிடிக்கும் - இந்த விஷயம் எனக்கு பிடிக்காது என்று மனதுக்குள் நிறைய விஷயங்களை விருப்பு வெறுப்புகளாக கொண்டிருந்தாலும் வெற்றி அடைந்த மனிதர்களை கேட்கும்போது மனதை மாற்றிக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்து இருப்பார்கள். ஒரு படம் பார்க்கிறோம். அந்த படத்தின் காட்சிகள் சோகமாக இருப்பதால் அந்த படம் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கிறது. வாழ்க்கையும் அப்படிதான். உண்மையான வாழ்க்கையை பாருங்கள் இங்கே ஒரு ஒரு மனிதருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சரிசெய்ய முடிவில்லை என்பதாலோ அல்லது அந்த பிரச்சனையை சரிசெய்ய விருப்பம் இல்லை என்பதாலோ அப்படியே விட்டுவிட்டால் பின்னாளில் பிரச்சனை பெரியதாக மாறிவிடும். இதனால்தான் வாழ்க்கை உங்களுக்கு ஒரு செயலை கொடுத்தால் அந்த செயலை செய்துவிடுங்கள். இல்லையென்றால் பிரச்சனைதான். மனதை எப்போதுமே மாற்றிக்கொள்ளுங்கள். 

5. இங்கே ஒருஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும் 

கொஞ்சம் யோசித்து பாருங்கள் வாங்கும் சம்பளத்தை விட கடன் தொகை அதிகமாக இருக்கும் நிலையில் அடுத்த ஸ்டெப் எடுக்க வேண்டும் என்றால் கவனமாகததான் எடுக்க வேண்டும். ஒரு திரைப்பட இயக்குனராக முயற்சிக்கும் ஒருவர் பேப்பர் பேனா எடுத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதும்போது ஒரு கிரியேட்டிவான கதைக்களத்தை உருவாக்க முடியவில்லை என்றால் அங்கே அவர் தெரிந்துகொள்ள வேண்டியது கதைகளை எழுதுவதில் வெற்றியை அடைய முடியவில்லை என்றால் இன்னும் நிறைய துறைகள் இருக்கிறது , வேறு துறைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயல்பட்டாலும் சாதிக்க முடியும் என்பதுதான். மோட்டிவேஷன் என்று ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம் ஆனால் உண்மையான வாழ்க்கையில் ஃபாலோ செய்வது மிகவும் கடினமானது. உதாரணத்துக்கு பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் ஒரு ஒருவருடைய தனிப்பட்ட செயலால் மட்டுமே முடியாது. நிறைய பேருடைய செயல்களும் சேர்ந்ததுதான். வாழ்க்கையில் எப்போதும் பொசிட்டிவிடி இருக்க வேண்டும். 

Sunday, August 26, 2018

MOTIVATION IS CRAP - TAMIL TALKIES - மோட்டிவேஷன் ஒரு குப்பை !!




இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது படையெடுத்து வெற்றி வேல் வீர வேல் என்று சொல்லிக்கொண்டு மோட்டிவேஷன் கிடைத்ததும் பிரச்சனைகளுடன்  சண்டை போட்டு ஜெய்த்துவிடலாம் என்று கிளம்பிவிடுவீர்கள் !! ஆனால் மோட்டிவேஷன் இப்படித்தான் ஏதாவது கதையை அளக்கும் :

கதை :

உங்களால் தவிர்க்க முடியாத விஷயங்களை நீங்கள் செய்தாக வேண்டும். வாழ்க்கை மிகவும் கடினமானது இதனை மறுக்க யாராலும் முடியாது. ஆனால் பிரச்சினைகள் கடினமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பிரச்சினைகளை சரி செய்யவே முடியாது என்ற அவசியம் கிடையாது. இந்த உலகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. நிறைய நேரங்களில் அந்த தீர்வுக்கு வேறு ஏதாவது காரணங்கள் தேவைப்படலாம். பணம் அறிவு செயல்திறன் என்று எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இந்த விஷயங்கள் இருந்தால் தான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலைமை உருவாகிறது. மோட்டிவேஷன் என்று இல்லாமல் பொதுவாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். இந்த உலகத்திலேயே சிறந்த சொல் செயல் என்பதை மறக்க வேண்டாம். தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் மட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று எண்ண வேண்டாம். காலத்தையும் இடத்தையும் சரியாக பயன்படுத்த முடிந்தால் வெற்றி நம் கையில். இந்த உலகம் மிகவும் பெரியது நிறைய பேருக்கு நிறைய ஆசைகள் தனத்துக்கு தனியான அறையில் அலுவலக வேலைகள் செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். இந்த உலகமே மிகவும் பெரியது என்று சொல்லுவார்கள் பிரச்சனைகளை எல்லாம் சமாளிக்க முடியாது என்று சொல்லுவார்கள் ஆனால் இதெல்லாம் தவிர்க்க முடியாதது இல்லை. 

உண்மை :

இப்போ மேல இருந்த விஷயத்துல கொஞ்சம் கூட எனக்கு புரியல !! உண்மையில மோட்டிவேஷன் ஒரு குப்பை ! உங்க பைக் போகவேண்டிய இடம் சேரணும்னா GPS தான் தேவை ! மோட்டிவேஷன் மாதிரி ஒரு கற்பனையை நம்பி வாழ்க்கையை பறிகொடுக்க வேண்டாம் !! SWEET சாப்பிடுவதற்க்கு பதிலாக GLUCOSE பவுடர் சாப்புடுவதுதான் MOTIVATION ! அதனாலதான் MOTIVATION IS CRAP ன்னு சொல்லறேன் !! உண்மையான உலகத்தை தெரிஞ்சுக்க நீங்க நிறைய INFORMATION கத்துக்கணும் ! அதுக்குதான் நானும் BLOG ஸ்டார்ட் பண்ணி கடையை நடத்திக்கிட்டு இருக்கேன் ! இந்த BLOG ஐ SUBSCRIBE பண்ணுங்கோ !

இந்த உலகத்தில் என்னதான் நடக்குது !!

இந்த உலகத்தை பார்த்தால் எனக்கு அளவுக்கு அதிகமான கோபம்தான் வருகிறது. நான் எந்த நிலைமையில் இருக்க வேண்டியவன் என்று எனக்கு தெரியும் ஆனால் நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. அந்த ஒரு காரணத்தால் உலகம் இவ்வளவு சேதாரம் அடைவதை என்னால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. நான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் சரியென்றும் தவறென்றும் எதுவுமே பார்த்தது இல்லை. பாவம் புண்ணியம் எதுவுமே பார்த்தது இல்லை. நான் எனக்கு அந்த நொடிக்கு என்ன செயல் செய்ய வேண்டுமோ அந்த செயலை மட்டும்தான் செய்கிறேன். அடிப்படையில் கடவுளுக்கு என்னை பிடிக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு விதமான கொலைகார அரக்கத்தன்மை எனக்குள் இருக்கிறது. யாராலுமே இமாஜின் பண்ண முடியாத அளவுக்கு நான் இந்த வருடம் முன்னேறி இருக்க வேண்டும் ஆனால் எங்கே தப்பு நடந்தது ? எனக்கு சப்போர்ட் இல்லை. அதுதான் பெரிய தவறு என்று நான் கருதுகிறேன். ஆனால் வேறு வாய்ப்புமே இல்லை. இங்கே அடிப்படையில் இருந்தே நான் பாலைவனத்தில் முளைத்த ஆலமரம் போலத்தான் இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் அவ்வளவு வேஸ்ட்டாக போகிறது. இங்கே என்னுடைய மண்டைக்குள் என்னதான் நடக்குது. போதுமான சக்தி என்னிடம் இல்லையா ? நான் எனக்கு எதிராக எது இருந்தாலும் கொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். இப்படி நான் பண்ணவில்லை என்றால் எனக்கு எதிராக இப்போது இருக்கும் விஷயம் என்னையே கொன்றுவிடும். நான் இந்த கொலைக்களத்தை வெறுக்கிறேன். எனக்கென்று ஒரு அமைதியான இடம் கிடைத்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. என்னுடய விதி என்னும் புத்தகத்தில் என்ன செயல் எந்த நேரத்தில் எழுதப்பட்டு இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும் என்ற கதைகளை நான் நம்பவில்லை. நான் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஆனால் கடவுள் ஒரு இடத்தில் சப்போர்ட் கொடுத்துவிட்டு இன்னொரு இடத்தில் எகைன்ஸ்டாக டார்ச்சர் கொடுக்கிறார். கடவுளும் ஒரு ஸைக்கோ போல நடந்துகொள்கிறார். அவருடைய வேலையை அவரால் பார்க்க முடிவது இல்லை. அவருடைய சக்திகள் மட்டுமே எனக்கு இருந்தால் என்னால் நிறைய சாதிக்க முடியும் ஆனால் சக்திகள் எல்லாமே தகுதி இல்லாத இடத்தில்தான் இருக்க வேண்டும் தகுதியான இடத்தில் இருக்க கூடாது என்ற நிபந்தனையை கொடுத்ததுமே கடவுள்தானே !

SUPERHERO MOVIES - TAMIL - EXPLAINED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

உங்களுக்கு மார்வால் vs டி ஸி பற்றி தெரியுமா ? இந்த இரண்டு நிறுவனங்களின் வரைகலை புத்தகங்களின் கத்தப்பத்திரங்கள்தான் இப்போது சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக ஸ்பைடர் மேன் , அவெஞ்சர்ஸ், எக்ஸ் மென் கதாப்பத்திரங்கள் MARVEL நிறுவனத்தின் காமிக் புத்தகங்களை அடிப்படையாக கொண்டது, பேட் மேன் , சூப்பர் மேன் , ஜஸ்டிஸ் லீக் , சூசைட் ஸ்குவாட், பிளாஷ் கதாப்பாத்திரங்கள் டி ஸி வரைகலை புத்தகங்களின் அடிப்படையாக கொண்டது. 2000 களுக்கு முன்னால் சூப்பர் மற்றும் பேட் மேன் திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன, அப்போது எல்லாம் MARVEL கத்தப்பத்திரங்கள் அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் என்றால் BLADE திரைப்படங்கள் மட்டும்தான் இருந்தது. இங்கதான் ஜூராசிக் பார்க் திரைப்படங்கள் உருவாக காரணமான ஒரு மாயாஜாலாமான தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. விசுவல் எஃபக்ட்ஸ் மற்றும் சி ஜி ஐ அனிமேஷன். 2000 முதல் 2007 வரை ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளி வந்து வசூல் சாதனை படைத்தது. எக்ஸ் மென் திரைப்படங்களின் தொடக்கமும் இந்த கால கட்டத்தில்தான் ஆரம்பம் ஆனது. ஆனால் கிறிஸ்டோபர் நோலான் அவர்களின் தி டார்க் நைட் TRIOLOGY பேட் மேன் கதாப்பத்திரத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையே கொடுத்தது எனலாம். சூப்பர் ஹீரோ படங்களுக்கே ஒரு கௌரவத்தை கொடுத்த படம் THE DARK KNIGHT - இப்போது MARVEL -ஐ பார்க்கலாம், ஒரு சிறந்த திரைப்பட வரிசையை உருவாக்க முயற்சி செய்த MARVEL நிறைய கடினமான பொருளாதார தடைகளை கடந்து IRON MAN , CAPTAIN AMERICA , THOR , மற்றும் THE AVENGERS திரைப்படங்களை வெளியிட்டது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் வசூல் சாதனை நிறைய நம்பிக்கையை கொடுத்தது. ஃபாக்ஸ் நிறுவம் எக்ஸ் மென் திரைப்படங்கள் வசூல் சாதனைகள் உருவாக்கும்போது DEADPOOL போல சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்தன. ஜாக் சனைடர் அவர்களின் இயக்கத்தில் சூப்பர் மென் திரைப்படமான மேன் ஆஃப் ஸ்டீல் - டி ஸி உலகத்தின் திரைப்படங்களின் வரிசையை உருவாக்கியது. டி ஸி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் அனிமேஷன் திரைப்படங்களும் நன்றாக இருக்கும். MARVEL க்கும் அனிமேஷன் தொடர்கள் இருக்கிறது. கடைசியாக வெளிவந்த ஜாக் சனைடர் ஜஸ்டிஸ் லீக் , ஷசாம் திரைப்படங்கள் DC க்கும் வெற்றிகளை கொடுத்துள்ளது. அவெஞ்சர்ஸ் திரைப்படங்களின் கதைக்களம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்டு கேம் திரைப்படங்களில் ஸ்டோரி ஆர்க் நிறைவு செய்து இன்னமும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. சோனியின் ஸ்பைடர் மேன் வரைகலை புத்தக கதாப்பத்திரங்களின் அடிப்படையில் வெனம் போன்ற திரைப்படங்களின் வெற்றிகளையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். வருங்காலத்தில் நிறைய தரமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் எதிர்பார்க்கலாம். இப்போது எல்லாம் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யுரியஸ் திரைப்படங்கள் கூட லார்ஜர் தென் லைஃப் என்ற லெவல்க்கு சென்றுவிட்டது. 



THE 2 MOST MAGICAL WORDS IN ALL LANGUAGES - READ THIS




இந்த உலகத்திலேயே ரொம்ப மேஜிக்கலான மாயாஜாலாமான வார்த்தைகளை தெரிஞ்சுக்கனுமா ? இந்த இரண்டு வார்த்தைகள்தான் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மாற்றங்களுக்கு முக்கியமான காரணம். வெறும் இந்த இரண்டு வார்த்தைகள் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பது உங்களுக்கு கொஞ்சம் நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால் கூட புரிந்துவிடும். அது என்ன ஹாரி பாட்டர் படங்களில் வருவது போன்று பறக்கும் துடைப்பத்தில் அமர்ந்து பறந்து செல்ல வைக்கும் வார்த்தைகள் என்று யோசிக்க வேண்டாம். இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. முதல் வாரத்தை "LIKE" மற்றும் இரண்டாவது வாரத்தை "DISLIKE" - இந்த வார்த்தைகளை பொறுத்துதான் வாழ்க்கையில் நிறைய முடிவுகள் எடுத்து வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கிகொள்கிறோம். உதாரணத்துக்கு ஒருவருக்கு திரைப்படம், இசை, நடனம் என்று வேறு வேறு துறைகளில் பணிபுரிய விருப்பம் இருக்கலாம், ஆனால் அந்த துறையில் போதுமான வெற்றியை அடைய முடியாமல் போகலாம். அதுவே அதே மனிதருக்கு பங்கு சந்தையில் அல்லது எலக்டிரானிக்ஸ் துறையில் அதிக திறமை இருக்கலாம் , ஒரு வேளை அவருக்கு பிடித்த அந்த துறைகளை விட்டுவிட்டு பிடிக்காத இந்த துறைகளை தேர்ந்தெடுத்து வேலை செய்தால் வாழ்க்கை அருமையாக இருந்திருக்கலாம், நெட்பிலிக்ஸ்-ல் ஸ்டிரேஞ்சர் திங்க்ஸ் பார்க்கலாமா ? அல்லது தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியல் பார்க்கலாமா ? இல்லையென்றால் இணையத்தில் ல் "MADAN GOWRI" அவர்களின் காணொளியை பார்க்கலாமா ? என்று எந்த முடிவு எடுத்தாலும் விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கிறோம், இது நல்ல விஷயம்தான் இருந்தாலும் பொழுதுபோக்கு அல்லது அதிகமான பயன்களை கொடுக்காத விஷயங்களில் நேரத்தை செலவிடுவதன் மூலமாக நேரத்தை அதிகமாக இழந்துவிட்டால் நேரம் மறுபடியும் கிடைக்காது, இதனால்தான் LIKE அல்லது DISLIKE என்ற வார்த்தைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டாம். இடம் பொருள் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பதே சிறந்த விஷயம் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அலைபேசியில் பணம் செலுத்தும் காலகட்டங்களில் வங்கியில் சென்று படிவம் எழுதுவது ஒரு BORING ஆன விஷயமாக இருக்கலாம் ஆனால் இந்த உலகத்தில் சில விஷயங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அவைகளை விருப்பு வெறுப்புகளை கடந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

Sunday, August 19, 2018

CINEMATIC WORLD - 004 - RISE OF THE GAURDIANS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! ❤❤❤





"பனியை கட்டுப்படுத்தும் சக்தியுள்ள மாயாஜால கதாநாயகன்தான் நம்ம  ஜேக் ஃப்ராஸ்ட் . இவருக்கு அம்னீசியா இருந்து  பாதிக்கப்பட்டுள்ள மனிதனாக இருப்பதால்  கடந்தகாலத்தின் நினைவுகள் என்று எதுவுமே இல்லாமல்  மேலும் யாருடைய கண்களுக்கும் தெரியாமலும் இருக்கும் சூப்பர் ஹீரோவாக இருக்கிறார். இப்படி குட்டி பசங்களுக்கு ஹெல்ப் பண்ணிக்கொண்டே அவரது கடந்தகாலத்தின் நினைவுகளையும் தேடும் ஜேக் ஃப்ராஸ்ட்க்கு சொந்தம் என்று யாருமே இல்லை என்ற கவலை இருக்கிறது,  இன்னொரு பக்கம் இந்த கிறிஸ்துமஸ் நேரத்தை பயன்படுத்தி பயமுறுத்தி சக்திகளை அதிகப்படுத்தும் பிட்ச் பிளாக் என்ற கருப்பு நிற இருள்  வில்லனின் உலகத்தை அழிக்கும்  திட்டத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற நம்ம  ஸான்டா க்லாஸ் , ஈஸ்ட்டர் பென்னி , டூத் பியாரி இன்னும் சொல்லப்போனால் அவருடைய கிப்ட்களை கொடுக்கும் மொத்த அமைப்புக்குமே  ஜேக் ஃப்ராஸ்ட்ன் உதவி தேவைப்படுவதால் இந்த கூட்டணி இணைந்து பயத்தின் அரசன் பிட்ச் பிளாக் பண்ணும் சதித்திட்டங்களை  முறியடிக்க பண்ணும் போராட்டங்கள்தான் இந்த படத்தின் கதைக்களம். கிளைமாக்ஸ்ல இவர்கள் பண்ணும் பாதுகாப்பு முயற்சிகள் வெற்றிபெற்றதா கடந்த கால நினைவுகள் திரும்ப கிடைத்ததா என்பது நீங்கள் படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.ஒரு நல்ல WEEKEND படம் ஃபேமிலியுடன் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இந்த படம் உங்களுக்கு நல்ல சாய்ஸ் . இந்த திரைப்படத்தின் கதை ஒரு நல்ல கிறிஸ்துமஸ் ஃபேண்டஸி படமாக இந்த படத்தை கொடுத்துள்ளது.. இந்த திரைப்படம் 2012 ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த ஆண்டு பெரிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இல்லை என்றாலும் நம்ம சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நல்ல படம் இந்த படம். கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் நல்லா இருக்கும் !!

]

Friday, August 17, 2018

CINEMATIC WORLD - 003 DESPICABLE ME - TAMIL REVIEW - திரை விமர்சனம் !! ❤❤❤


கதாநாயகன் GRU உலகத்தின் மிகப்பெரிய சூப்பர்வில்லன் ஆக வேண்டும் என்பதை மட்டும் அவருடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டு இருப்பவர் . இவருடைய அசிஸ்டண்ட்ஸ்தான் மினியான்ஸ் - இப்போது அவர் ஒரு பெரிய வில்லன் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது . ஒரு ஹை - டேக் மாயாஜால அறிவியல் கருவியை வேகட்டார் என்ற சூப்பர்  வில்லனிடம் இருந்தது நாசூக்காக ஆட்டையைப்போட்டால் அடுத்த பிளான்னாக நிலாவுக்கு சென்று அந்த நிலாவையே சின்ன சைஸ்ஸில் மாற்றி பூமிக்கு எடுத்துவந்துவிடலாம் என்ற ஆசைதான் அவருக்கு இருக்கிறது. நேரடியாக வெக்டர் வீட்டுக்கு சென்று அந்த சிறப்பு கருவியை எடுக்கும் முயற்சிகள் சோதப்புகிறது. பாதுகாப்பு மிக கடினமாக இருப்பதால் ஒரு ஐடியா பண்ணுகிறார். டொனேஷன் கேட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகளை வைத்து குட்டி ரோபோட்களை வீட்டின் உள்ளே கொண்டு போனால் அந்த கருவியை கொள்ளையடித்து விடலாம் என்று ஒரு பிளேன் போட்டு அந்த பிளேன்னில் வெற்றியும் அடைகிறார் ஆனால் அந்த குழந்தைகள் மேல் அதிக அன்பு வைத்து இருப்பதால் அவருடைய லட்சியங்களையும் மீறி அந்த குழந்தைகளுக்காக ஆதரவாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.  MARGO , EDITH , AGNES என்ற இந்த குழந்தைகளை VECTOR கடத்தியதால் ஹீரோவாக மாறுகிறார். தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் கிளைமாக்ஸ் கொடுக்கிறது. மிகவும் புதிதாக இருக்கிறது திரைப்படத்தின் கதை. மினியான்ஸ் இந்த கதையில் ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட் - இந்த குட்டிபையன்கள்  இல்லையன்றால்  திரைப்படத்தின் கதை MEGAMIND போல மாறியிருக்கும். இந்த திரைப்படம் 2010 ம் ஆண்டு வெளிவந்தது. மேலும் நல்ல பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் குவித்தது. 


CINEMATIC WORLD - 002 - EDGE OF TOMORROW - TAMIL REVIEW - திரை விமர்சனம்


அறிவியல் திரைப்படங்கள் / EDGE OF TOMORROW - திரை விமர்சனம் !!!

இந்த படத்தின் கதை :

பூமியின் மீது ஒரு சக்திவாய்ந்த வேற்றுகிரகத்திலிருந்து வந்த உயிரினங்கள் படையெடுத்து போரிடுகின்றனர். நிறைய மனிதர்கள் களத்தில் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் நிறைய ஆட்கள் தேவை என்னும் பட்சத்தில் அமெரிக்காவின் பல இடங்களில் இருந்து காவல் படைக்காக நிறைய பேர் அனுபப்படுகின்றனர். 

ஆனால் இந்த பிரச்சனைகளை பற்றி மேலோட்டமான முறையில் மட்டுமே தெரிந்துகொண்ட ஒருவராக இருந்தாலும் இன்னும் சொல்லப்போனால் போதுமான போர் அனுபவம் இல்லாமல் இன்று வரைக்கும் நிர்வாக பொறுப்பில் இருந்து மட்டுமே வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாலும் இப்போது கடுமையான  இந்த போராட்டத்தில் கதாநாயகன்  வில்லியம் கேஜ் சண்டை போடுவதற்காக அனுப்பப்படுகிறார்.  


நேரடியாக ஹெலிகாப்டர் மூலம் களம் இறக்கப்பட்டு அங்கே சண்டை போடும் ராணுவத்துடன் இணைந்து போரிடும்போது இப்போது மற்றவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஒரு இப்போது பூமியை கைக்குள் கொண்டுவர முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கும் ஒரு பெரிய ஏலியன் உயிரினங்களின் படையெடுப்பில் என்ன செய்வது என்றே தெரியாமல் அவரால் முடிந்தவரைக்கும் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கவே கதையில் பெரிய டுவிஸ்ட் வருகிறது. 



ஒரு பெரிய நீல நிற இரத்தம் உள்ள MIMIC என்ற ஏலியன் உயிரினத்தின் இரத்தத்தால் தாக்கப்பட்டு கரைந்து போனதால் உயிர் தியாகம் செய்தாலும் அடுத்த நாள் மறுபடியும் காலை பொழுதில் கண்கள் விழிக்கிறார். அந்த நாளின் அனைத்து சம்பவங்களும் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே இருக்கிறது !! காரணம் என்ன ? இங்கேதான் கதையில் ஒரு பெரிய சர்ப்ப்ரைஸ் !! இந்த உயிரினங்கள் மனிதர்களை விட ரொம்ப ரொம்ப புத்திசாலிகள். இவைகளில் தலைமை தாங்கும் நீல நிற MIMIC களில் ஒரே ஒரு MIMIC இறந்து போனாலும் அந்த நாளையே மறுபடியும் இன்னொரு முறை TIME TRAVEL பண்ணி மாற்றும் மாயாஜால சக்தி இந்த MIMIC களின் இரத்ததில் இருக்கிறது. இப்போது கதாநாயகன் உடம்பில் இந்த இரத்தம் இருப்பதால் கதாநாயகன் இப்போது டைம் டிராவல் பண்ண முடியும் !!


இந்த படம் வெளிவந்த காலத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் பக்காவான ஆக்ஷன் கலந்த ஒரு அருமையான படமாக இருந்தது. TOM CRUISE மற்றும் EMILY BLUNT இன் கேரக்டர் அமைப்பு வேற லெவல். பொதுவாக ஏலியன்களின் நேரடியாக அட்டாக் பண்ணும் காட்சிகளை நிறைய படங்களில் பார்த்து இருப்போம். ஆனால் இந்த படத்தில் பார்க்க புதுமையாக இருக்கும். இன்னுமே நிறைய விஷயங்களை படத்தில் OPEN ENDING -ல் தான் விட்டு இருக்கிறார்கள் ஆனால் படம் பாக்கும்போது சயின்ஸ் ஃபிக்ஷன் பிரியர்களுக்காக ஒரு STORYLINE கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ படமா என்று கேட்டால் அப்படி சொல்ல முடியாது ஆனால் ஒரு தரமான SCI-FI ஆக்ஷன் அனுபவத்தை இந்த படம் உங்களுக்கு கொடுக்கும். இந்த படத்துடைய அடுத்த பாகம் LIVE - DIE - REPEAT படம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் ப்ரொடக்ஷன்னில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பார்க்கலாம். 



CINEMATIC WORLD - 001 - INTERSTELLAR - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!



இந்த திரைப்படத்தில் கதை என்னவென்றால் பூமியில் கொஞ்சம் கொஞ்சமா பூமியை அச்சுறுத்தும் தூசுப்புயல் போன்ற ஒரு விஷயத்தால் விவசாயம் பண்ணவே முடியாத அளவுக்கு பூமியில் இருக்கும் தாவரங்கள் மற்றும் பயிர்கள் எல்லாமே  பாதிப்பு அடைகின்றன. இப்படியே போனா என்னப்பா அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று யோசித்து இனிமேல் இன்னொரு பிளானெட்க்குதான் போகணும் என்று முடிவு பண்ணுகிறார்கள்.  ஒரு விண்கலம் அமைத்து ஸ்பேஸ்ல பூமியை போன்ற வேறு  ஒரு கிரகத்தை கண்டறிந்து அங்கே செல்லும் முயற்சியில் ஆராய்ச்சி குழுவின் உதவியுடன் கதாநாயகரின் விண்வெளி குழுவின் விண்கலத்தின் மூலமாக செல்கின்றனர். ரொம்ப தூரத்துக்கு அப்பால் பூமியை போன்ற கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு கிரகத்துக்கு WORMHOLE எனப்படும் போர்டல்களின் மூலமாக செல்ல முயற்சிக்கின்றனர் .. (SPACE TIME என்று ஒரு CONCEPT இருக்கிறது , தெரியாமல் பார்த்தால் மண்டை காய்ந்துவிடும்)

இந்த முயற்சியில் அந்த கிரகத்தை சென்றடைந்த பிறகு ஏற்படும் திருப்பங்களும் அதை தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும் தான் இந்த INTERSTELLAR திரைப்படத்தின் கதை .. அறிவியல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சயமாக பிடிக்கும் இன்டர்ஸடெல்லார் படத்தில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் டெக்னிகல் பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து இந்த படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன பராக்டிக்கல் எஃபக்ட்ஸ்ஸும் வேற லெவல். ஒரு ஏலியன் உலகத்தை மிகவும் தெளிவாக இந்த படம் மட்டும்தான் காட்டியுள்ளதா என்று நீங்கள் கேட்டால் கம்பேர் பண்ண நிறைய படங்கள் இருக்கதான் செய்கிறது. உதாரணத்துக்கு ப்ரோமித்தியஸ் [PROMETHEOS] மற்றும் ஏலியன் - கோவேன்னன்ட் [ALIEN - COVENENT] படங்கள் உண்மையிலேயே வேற லெவல்லில் வேர்ல்ட் பில்ட்டிங் கொடுத்து இருக்கும் ஆனால் இந்த படங்களில் நிறைய கிரிஸ்டோபர் நோலன் ஸ்டைல் திருப்பங்கள் எதிர்பார்க்க முடியாது , இந்த படத்தில் இருக்கும் தூசுப்புயல் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய அலைகள் கொண்ட சுனாமியால் விண்வெளிக்கப்பல் தாக்கப்படும் காட்சிகள் எல்லாமே வேற லெவல்லில் இருக்கும், பொதுவாக சயின்ஸ் படித்தவர்கள் இந்த டுவிஸ்ட் புரிந்துகொள்ள முடியும். XYZ என்று மூன்று ஆக்ஸிஸ் இல்லாமல் நான்காவதாக டைம் ஆக்ஸிஸ் மூலமாக டைம்மில் வேரியேஷன் கொண்டுவந்து இருப்பது உண்மையிலேயே வேற லெவல். ... இப்படி எல்லாம் நம்ம தலைவனால் மட்டும்தான் யோசிக்க முடியும் !!

இன்டர்ஸ்டெல்லார் திரைப்படம் , ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும். இந்த படம் ஸ்பேஸ் படங்களுக்கு ஒரு மைல் ஸ்டோன் என்றும் சொல்லலாம். டைம் என்பதும் பரிமாணம் என்பதும் கொஞ்சம் கம்பிளிகேட்டெட் ஆன கான்செப்ட்கள் ஆனால் கடைசி காட்சியில் விஷுவல்களாக கொண்டு வந்தது ரொம்பவே சூப்பராக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ரொம்பவுமே சிறப்பான விஷூவல் எஃபெக்ட்ஸ் இந்த படத்துக்கு இன்னமும் ஒரு பெரிய சப்போர்ட் ஆக இருக்கிறது. இந்த மாதிரி நிறைய தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை வெளிவந்த நிறைய படங்களின் விமர்சனங்களை தெரிந்துகொள்ள நம்முடைய வலைத்தளம் NICE TAMIL BLOG - ஐ கண்டிப்பாக சந்தா பொத்தான் மற்றும் ஃபாலோ பொத்தான்களை அழுத்தி சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளவும். இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும். வலைப்பூவின் கமிட்டி சார்பாக வாழ்த்துக்கள். 
 



Tuesday, August 14, 2018

BATTERY OF HEART - SOME TAMIL MOTIVATION TALKS - யோசிங்க !! யோசிங்க !!



ஹார்ட்-லே பேட்டரி சார்ஜ் தான் ஆல் இஸ் வெல் - தோல்வியா டென்ஷனா சொல்லிடு ஆல் இஸ் வெல். இந்த உலகத்தில் தோல்வி அடையற எல்லோரையும் பார்க்கும்போது அவங்களுடைய தோல்விக்கு யார் காரணம் என்று பார்க்கும்போது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் அந்த வாழும் சூழநிலையுமே காரணம். ஒரு முயற்சியை தொடங்கும்போதே நீங்கள் செல்ல கூடாத திசைகள் . கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு என்று சொல்ல நிறைய பேர் இருந்தால் கடைசியில் என்னதான் செய்ய முடியும் ? நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றால் இங்க நடக்கக்கூடிய எந்த ஒரு சம்பவத்துக்கு பின்னாலும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கும். அதுதான் அறிவியல். என்னைக்குமே நம்ம நம்பிக்கையை விட்டுக்கொடுக்க கூடாது. மனசுக்கு கஷ்டமாக இருக்கலாம். வாழ்க்கை ரொம்பவே மோசமாக இருக்கலாம். இங்க யாரிடம் உதவி கேட்டாலும் அவர்களால் செய்ய முடிந்தும் செய்ய முடியாமல் போகலாம். இந்த உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். வாழ்க்கையில் கொஞ்சம் இண்டரெஸ்ட்டிங் ஆன புதிய புதிய சம்பவங்கள் நடக்கவில்லை என்றால் நம்ம வாழ்க்கைக்கும் தொலைக்காட்சி சீரியல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது இல்லையா ? இந்த உலகத்தில் பிறந்ததில் இருந்து இன்றைக்கு வரைக்கும் பார்க்காத ஒரு சம்பவம் நாளைய நாள் நடக்கலாம். ஆனால் அந்த நாளைய நாள் நல்ல விஷயம் நடந்தாலும் இல்லையென்றால் கெட்ட விஷயம் நடந்தாலும் எல்லாவற்றையும் எதிர்பார்த்து தயாராக இருக்க வேண்டும். தி எக்ஸ்ட்ராவரடினரி ஜர்னீ ஆஃப் ஃபகிர் என்ற தனுஷ் நடிப்பில் வெளிவந்த படத்தில் தமிழ் மொழியில் பார்க்கும்போது ஒரு காட்சியில் ஒரு வசனம் வரும் (இந்த படத்துடைய தமிழ் மொழி பதிப்பு ஆங்கில மொழியை விட நன்றாக இருக்கும்.. இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்) - "உன்னுடைய வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு" - இதுதான் வாழ்க்கையின் உண்மை. வாழ்க்கை என்றால் இப்படிதான் இருக்கும். சினிமாட்டிக் ஆன முன்னேற்றம் எல்லாம் வாழ்க்கையில் அதுவாக நடக்கத்துங்க , நாம்தான் நடத்திக்காட்ட வேண்டும்.

SUPER ULTRA MEGA AWESOME SECRET OF SUCCESS ! HERE, YOU CAN READ IT FOR FREE !!!




இந்த பிரபஞ்சத்தில் சக்ஸஸ் எனப்படும் வெற்றியாக இருந்தாலும் ஃபெய்லியர் என்று அழைக்கப்படும் தோல்வியாக இருந்தாலும் அப்படி ஒரு விஷயமே இல்லவே இல்லை. அதுதான் உண்மை, இப்போது புரியும்படியாக சொல்லப்போனால் சாலையில் போகும்போது டிராபிக்ல சிக்கறதாக இருக்கட்டும், எக்ஸாம் நடக்கும்போது இங்க் பேனா கை நழுவி கீழ விழுந்து உடைஞ்சு போறதா இருக்கட்டும் இல்லையென்றால் ஒரு விண்கல் பூமி மேல் விழுவதாகவே இருக்கட்டும் இது எல்லாமே வாழ்க்கையில நடக்கற சம்பவங்கள். அதுபோலதான் ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடிஞ்சால் சக்ஸஸ் , இல்லை முடியாமல் போனால் ஃபெய்லியர். இங்கே பிரச்சனை எங்கே ஆரம்பம் ஆனது என்றால் தமிழ் சினிமால வெளிய வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருக்கும் காட்சிகள் போலவே நான்கு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் என்ற எண்ணம்தான். வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்க வேண்டும். 

எதுக்கு சமமாக பார்க்க வேண்டும் ? காரணம் என்னவென்றால் இரண்டுமே வெறும் சம்பவங்கள். இல்லை வெற்றிகள் காலம் முழுக்க நிலைக்கும் தோல்வி அடைஞ்சா காலம் முழுக்க குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். யாருமே உதவ மாட்டார்கள். யாருக்குமே நம்மை பிடிக்காது. அதனால வெற்றி அடைய வேண்டும், வாழ்க்கையை பார்க்க வேண்டும் அப்படியெல்லாம் சொல்லலாம். ஆமாம். கரெக்ட் தான். ஆனால் பிரச்சனை நீங்க அடைஞ்ச தோல்வியில் இருக்கா ? இல்லையின்னா அதை தெரிந்துகொள்ளும் மனிதர்களிடம் இருக்கா ?

ஒரு பிரச்சனையை முடிக்காமல் அதனை மிகைப்படுத்தி சொல்லுவதில் என்னதான் சந்தோஷம் இருக்கிறதோ தெரியவில்லை. இந்த உலகம் கம்ப்யூட்டர் பக்கம் போகுது. அனைத்து தகவலையும் கணினியால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அது மட்டும் இல்லாமல் எந்த தகவலையும் எந்த நேரத்திலும் அக்செஸ் பண்ணி எடுத்துக்கொடுக்கவும் முடியும். பத்து வருஷத்துக்கு முன்னாடி தகவலை கேட்டால் கூட கம்ப்யூட்டர் எடுத்து ரெடியாக வைத்துக்கொண்டு எத்தனை நகல் பிரிண்ட்அவுட் எடுக்கணும்னு கேட்கும் ! ஆனால் மனிதர்கள் அப்படியா ? வாழ்க்கை என்றால் மிஸ்டேக் பண்ணவேண்டும். சும்மா கம்ப்யூட்டர் மாதிரி இருக்க வேண்டும் என்று இளைய தலைமுறைய திட்ட கூடாது. அப்படின்னா கணினியிடம் மனித இனமே தோற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ள முடியுமா ? 

முதலில் தோல்வி எல்லாம் தோல்வியும் இல்லை, வெற்றி எல்லாம் வெற்றியும் இல்லை.. ஒரு நெகட்டிவ் ஆன சம்பவம் நடந்தால் அது தோல்வி . அதுவே பாசிட்டிவ் ஆனா சம்பவம் நடந்தால் அது வெற்றி, வெறும் ஒரு முதல் ரேங்க் வாங்கிய மாணவனை பாராட்டும் இந்த உலகம் அதே கல்வி நிறுவனம் எதனாலே அவனோடு படித்த 49 " முதல் மதிப்பெண் வாங்காத மாணவர்களை உருவாக்கியிருக்கிறார்கள் " என்று கோபப்படவில்லை ? அதனால்தான் இந்த ரேங்க்கிங் சிஸ்டம் தப்பு. மாணவர்கள் படிக்கும் விஷயம் அவர்களுக்கு புரிய வேண்டும், அந்த விஷயங்களால் நடைமுறை வாழ்க்கையில் பலன்கள் இருக்க வேண்டும், உலகம் முழுவதும் அக்சப்ட் செய்யபபட்டால் அதுதான் சரியான விஷயம் என்று சொல்ல முடியாது. அதை விட பெட்டர் ஆன விஷயங்கள் இந்த உலகத்தில் இனிமேல் உருவாகும். கடைசியாக 80 வயதில் நோய்வாய்ப்படும்போது இளமையில் கிடைத்த வெற்றிகளும் தோல்விகளும் பெரிய விஷயம் இல்லை. உடல் நிலையை சரிசெய்துகொள்வதுதான் பெரிய விஷயம். ஆனால் இதுதான் உலகம், இப்படிபட்ட உலகத்தில்தான் வாழ வேண்டும். அப்படின்னு கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறார்கள். உண்மையில் ஒருவருடைய தனிப்பட்ட நலனை கடந்து அடுத்தவர்கள் நலனுக்காக முக்கியத்துவம் கொடுத்தாலே போதும் வாழ்க்கை ரொம்பவே அருமையாக இருக்கும். 

இன்றைக்கு காலையில் பசிக்கிறது என்றால் உங்களுக்கு தேவை சாப்பாடு, உங்கள் சோசியல் மீடியா அக்கவுண்ட் ஓபன் பண்ணவேண்டும் என்றால் உங்களுக்கு தேவை பாஸ்வேர்டு. அடுத்த நாள் வேலை பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு தேவை தூக்கம். இந்த லைஃப்ல கடைக்கு சென்று பொருள் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு தேவை பணம், இங்கே எந்த வகையிலும் வெற்றி எனும் சம்பவமோ தோல்வி எனும் சம்பவமோ பெரிய மாற்றங்களை கொண்டுவரவில்லையே ? அப்புறம் எதுக்காக வெற்றி அல்லது தோல்விகளை மிகைப்படுத்த வேண்டும். ஒருவரை பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற ஏற்றத்தாழ்வு நிலைகள் இருக்கும் வரைக்கும் வெற்றிகளும் தோல்விகளும் இது போன்று மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களை உருவாக்குவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. 

Monday, August 13, 2018

ஒரு முக்கியமான விஷயம் - ஒரு பக்க கதை.






இந்த உலகத்தில் அட்வைஸ் மட்டும்தான் இலவசமாக கிடைக்கும் அதனால இந்த அட்வைஸ் கொஞ்சம் கேட்டுக்கொள்ளுங்கள்.. வாழ்க்கை மிகவும் சிறியது.. இங்க சந்தோஷமும் வேலைக்கு ஆகாது. சோகமும் வேலைக்கு ஆகாது. இமேஜினேஷன் ஆன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சம்பளமே இல்லாமல் வேலைக்கு போறதுக்கு சமமானது. காரணம் என்னவென்றால் கிடைக்கபோவது முக்கியமே இல்ல. அதுக்கு அப்பறம் குறிப்பிட்ட டைம்ல ஒரு வேலைய முடிக்க சொல்வார்கள். உதாரணத்துக்கு 123 பக்கம் எழுத வேண்டும் என்றால் கண்டிப்பாக 5 மணி நேரத்துக்கு மேல் தேவைப்படும் ஆனால் வெறும் ஒரு மணி நேரத்தில் எழுத சொல்வார்கள். இந்த மாதிரி டைம் லிமிட் இருக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். இதை விடவும் பெரிய கொடுமை வேலையே செய்ய முடியாத இடத்தில் வேலையை செய்ய சொல்வது. கொட்டும் மழையில் உப்பு வியாபாரம் செய்ய சொல்வது போன்றது. இது எல்லாம் எதற்காக பண்ண சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. இங்கே கெட்டவர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். சினிமா படங்கள் போல கான்கரீட் சுவரை ஒரே அடியில் உடைப்பது எல்லாம் நிஜ வாழ்க்கையில் இருக்காது, இந்த உண்மையான வாழ்க்கை ஒரு ஸ்டீல் சுவரை உடைப்பதுக்கு சமமான விஷயம். இந்த உலகத்தில் அன்பை விலை கொடுத்து வாங்கலாம். கோபம் காட்டி வாங்கலாம். கெஞ்சியும் வாங்கலாம் அப்படி எல்லாம் வாங்கிய அன்பு நிலைக்கவே நிலைக்காது. உண்மையா நிலைக்கும் அன்பு இந்த மனம், உடல், செயல் என்று எதனை சார்ந்தும் வராது. அது ஒரு மாயாஜாலம். அறிவியலால் சொல்ல முடியாத ஒரு ரேண்டம்னேஸ். பொழுது போக்கு என்றால் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள மட்டும்தான். இந்த காலத்தில் சீரியல்களை பாருங்கள், ஒரு குடும்பம், அங்கே ஒருவருக்கு பிரச்சனை. அந்த பிரச்சனை முடித்து வெக்கப்பட்டதும் அடுத்த பிரச்சனை. அந்த பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனை. இப்படி சென்றுகொண்டே இருக்கும். ஒரு மேஜிக் செய்து பிரச்சனைகளை சந்திக்கும் அந்த கதாப்பாத்திரத்துக்கு வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகையாக கொடுத்துவிட்டால் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். அவ்வளவுதான் இந்த உலகத்தில் வாழ்வின் ரகசியம். அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். அறிவுக்கு பஸ் டிக்கெட் கொடுத்து வெளியூர் அனுப்பிவிட்டு பிரச்சனையை சரி செய்ய முயற்சி செய்வது கொஞ்சம் கடினமானது. கட்டுரை நிறைவு செய்யப்பட்டது. அவ்வளவுதான். இப்படிக்கு உங்கள் - WRITER OF THE DREAMS

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...