திங்கள், 4 ஆகஸ்ட், 2025

CINEMA REVIEW - THUNDERBOLTS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




சினிமா பிரபஞ்சம் (MCU) பல வருடங்களாக DC உடன் போட்டி போட்டு ஹீரோக்களைக் கொண்டாடி வரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.  ஆனால இந்த படத்தில், ஹீரோக்கள் அல்லாத – சில நேரங்களில் வில்லன்களாக இருந்த குறை சொல்லக்கூடிய சின்ன கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்து உருவாகிறது ஒரு புதிய சூப்பர் ஹீரோ குழு.  படத்தில் முக்கியமாக வரும் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஏற்கனவே MCU-வில் தனித்தனி படங்களில் பங்கேற்றவர்கள். கதை எப்படி என்றால் சந்தர்ப்பம் மற்றும் சூழிநிலையால் ஒரு சாதாரணமான மனிதனாக இருந்த BOB என்ற இளைஞர் வீதியால் கொடிய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வில்லன் போல மாறுகிறார். இந்த சோதனையை தனக்கு சாதகமாக ஒரு கடுமையான இரகசிய சேவை குழுவை உருவாக்குகிறது வேலன்டினா - என்ற அரசியல் புள்ளியின் அமைப்பு !  இது சூப்பர் ஹீரோக்கள் இணைந்த அமைப்பு இல்லை. ஆனால் அவர்கள் தங்களின் வேறுபாடுகளை வென்று, பாப் மூலமாக கடுமையான ஒரு அபாயத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் வழியில் திட்டங்களை போட்டு பாப்பை கட்டுப்பட்டுக்குள்ளே கொண்டு வருகிறார்கள். மற்றபடி சண்டைக்காட்சிகள் மிகவும் தரமானது. முந்தைய மார்வெல் படங்களைவிட சிறந்த ஸ்டண்ட் வொர்க் அமைக்கப்பட்டுள்ளது. திறன் மிக்க யெலெனா பெலோவா (ப்ளோரன்ஸ் பியூ) மீண்டும் பாராட்டத்தக்க நடிப்புடன் காட்சி கொடுக்கிறார். பக்கி பார்ன்ஸ் சமூக பாதுகாப்புக்காக பண்ணும் போராட்டங்கள் அழுத்தமாகக் காட்சியளிக்கப்படுகின்றன.  படம் கண்ணுக்கு தெரிந்த மார்வெல் பாணியை விட இருண்ட, தீவிரமான சூழலுடன் உருவாகியுள்ளது. படத்தின் குறைகள்: கதையின் நடு பகுதியில் வேகக் குறைவு. சில காட்சிகள் தேவையற்ற வசனங்களோடு காட்சியளிக்கின்றன. வேலன்டினாவின் வில்லத்தனம் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டாஸ்க்மாஸ்டர் மீதான ரசிகர் எதிர்பார்ப்பு மீண்டும் நிராசையாக்கப்பட்டு பாதிக்கப்படுவதை உணர முடிகிறது. இசை மற்றும் பின்னணி இசை இந்த படத்தின் கதையை மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப பின்னணி இசை கொண்டு மெதுவாக அழுத்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நினைவில் நிற்கும் இசைகள் என்று இல்லையெனினும், சண்டைக் காட்சிகளில் ரசிகர்களின் மனபதட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் மார்வெலின் வழக்கமான வியக்கத்தக்க ஹீரோ திரைப்படம் அல்ல. இது மனநல போராட்டங்கள், அரசியல் அமைப்பின் நெருக்கடிகள் மற்றும் ஒருவரின் ஆளுமை எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்சிப்படுத்தும் ஒரு இருண்ட கூட்டு திரைப்படம். சிறந்த நடிப்புகள், சுருக்கமான நகைச்சுவை மற்றும் சில புதிய சிந்தனைகளுடன் இது மார்வெல் திரைப்பட பிரபஞ்சத்தின் புதிய பக்கத்தை திறக்கிறது. (மார்வெல் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம்; மேலும் வழக்கத்திலிருந்து விலகிய ஒரு முயற்சி). - படம் நன்றாக இருக்கிறது !

கருத்துகள் இல்லை:

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16

  நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...