Monday, June 17, 2024

GENERAL TALKS - ஃபோன்களை எப்படி தரமானதாக வாங்குவது ! - 1




புதிதாக ஒரு போன் வாங்குகிறோம் அந்த போனுக்காக பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை குறைந்த பட்சமாக செலவு செய்கிறோம்.  இருந்தாலும் , அந்த போன் கிட்டத்தட்ட ஒரு வருடம் கூட உழைக்காமல் வெறும் மூன்று மாதங்களுக்குள் காலியாகி விட்டால் நம்முடைய மனதை எந்த அளவுக்கு வருத்தப்படும் என்பதை கற்பனை பண்ணி பாருங்களேன். ஒரு சில செல்ஃபோன் தயாரிப்பு நிறுவனகள் தயாரிக்கும் தரமற்ற ஃபோன்கள் சின்ன அடிபட்டாலே நன்றாக பாதிப்பு அடையக் கூடியது.  ஃபோன்களை பற்றி அதிகமாக தெரியாமல் ஃபோன்களை வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள்தான் அந்த போன்கள் மலிவான விலையில் கிடைத்தாலும் இன்டர்நேஷனல் பிராண்டுகளுக்கு இணையான தரத்தில் இருக்கக்கூடும் என்ற துணிவான நம்பிக்கையில் வாங்குகிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு சில வாடிக்கையாளர்கள் பிராண்டு தயாரிப்பு என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் என்னவென்று  தெ ரியாமல் வாழ்வதை போல முன்யோசனை இல்லாமல் எந்த ஒரு கம்பெனியில் போன் வாங்கினாலும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கிவிட்டு பின்னாட்களில் ஃபோன் காலியாகவே நல்லடக்கம் பண்ணிவிடுகிறார்கள். இந்த ஃபோன்களை எப்படி தரமாக வாங்குவது என்று இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம் ! நீங்கள் எப்போது ஃபோன் வாங்கினாலும் போதுமான விமர்சனங்களை பார்த்து வாங்கியவர்களின் அன்பாக்ஸிங் மற்றும் பயன்பாடு வீடியோ பார்த்தாலே பாதி வேலை முடிந்துவிட்டது ! இவைகளை அடுத்தும் கொஞ்சம் வேலைகள் இருக்கிறது. இப்போது உங்களுக்காக நான் எனக்கு தெரிந்த பேசிக் விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...