Saturday, June 29, 2024

GENERAL TALKS - கொஞ்சம் சஜ்ஜேஷன்ஸ் இருக்கிறது !



இந்த வாழ்க்கையில் நான் சஜ்ஜேஸ்ட் பண்ணும் அடிப்படை விஷயங்கள் ! 1, ஒரு விஷயத்தை எப்போதும் 100 சதவீதம் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இல்லை மேலோட்டமாக தெரிந்துகொண்டால் மட்டுமே எனக்கு போதுமானது என்று நீங்கள் நினைப்பது கண்டிப்பாக தவறானது. மேலோட்டமான தெரிதல் அப்போதைக்கு சமாளிக்க போதுமானதாக இருந்தாலும் பின்னாட்களுக்கு பிரயோஜனம் இல்லாதது. 2. நீங்கள் அடைப்படையில் காலத்தை செலவு செய்துதான் வாங்குவதால் உணவு , இருப்பிடம் , பயணம் , பழக்க வழக்கங்கள்  போன்ற நிறைய விஷயங்கள் உங்களிடம் எவ்வளவு காலம் கொடுக்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்பதால் ஒரு ஒரு நாளிலும் ஒரு நாளின் 24 மணி நேரத்தை வாங்க 499 ரூபாய பணத்தை நீங்கள் செலவு பண்ண வேண்டும் ! இப்படி காஸ்ட்லியாக கிடைக்கும் காலத்தை வேஸ்ட் பண்ணவேண்டாம். காலத்தை வேஸ்ட் பண்ணுவது காசை வேஸ்ட் பண்ணுவதற்கு சமம் என்பது உண்மையான கருத்து. உங்களுடைய காசு உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. 3. உங்களுடைய வாழ்க்கையில் யாரையுமே நண்பராக வைத்து இருக்க வேண்டாம், எல்லோரையும் பிரித்தே வைத்துக்கொள்ளுங்கள். கடந்த 20000 ஆண்டுகளில் மனித பரிமாணம் உயிருக்கு உயிராக போட்டிப்போட்டு மோதும் ஒரு இனமாகத்தான் இருந்து வருகிறது ! உங்களுடைய உயிரை நீங்கள் காப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய வாழ்க்கையின் ஒரு சின்ன துளியை கூட இன்னொருவருடைய கட்டுப்பட்டுக்கு கொடுக்க வேண்டாம். இங்கே நிறைய ஆதரவு கொடுத்து ஏமாந்து போகும் ஆட்களாக இருந்துவிடாதீர்கள். உங்களுடைய இழப்புகள் அதிகமாக இருக்க போகிறது ! 

 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...