Sunday, June 16, 2024

GENERAL TALKS - தெளிவாக முடிவு எடுப்பதும் சரியான முடிவு எடுப்பதும் !

 



எப்போதுமே தங்களுடைய மனதுக்குள்ளே தெளிவாக நடந்துகொள்ளும் மக்களை எல்லோருக்கும் பிடிக்கும். இருந்தாலும் வாழ்க்கை என்றால் கெட்ட விஷயங்களில் தொடுதல் இல்லாமலே வாழ்ந்துவிட முடியாது. உங்களை எதிர்ப்பவர்கள் கொடியவர்களாக இருந்தால் அவர்களை விட அதிகபட்ச கொடியவராக நீங்கள் இருந்தால் மட்டும்தான் ஜெயிக்க முடியும் அதுதான் இயற்கை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ,? இந்த உலகத்தில் மனித இனம் 2.7 மில்லியன் ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய விளைவாக பரிணாமம் உருவாகி இவ்வளவு சிறப்பான நிலையை அடைந்து உள்ளது. நம்முடைய அம்மா , அப்பா , தாத்தா , பாட்டி என்று பல வருடங்களாக தொடர்ந்து ஒரு தலைமுறை தலைமுறையாக வாழ்க்கை உருவாக்கிக்கொண்டு வருகிறது. இவர்களில் யாருமே தவறான பாதையில் செல்ல கூடாது அன்பே சிவம் , அன்பே விஷ்ணு , அன்பே கௌசிக் , என்று கதையை விட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தால் அவர்களுடைய உயிரை அவர்களால் காப்பாற்றிக்கொள்ள முடியுமா ? இல்லை . அடிப்படையில் காலம் நம்மை வில் அம்பு தூக்கி வேட்டையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என்று கட்டாயம் செய்தால் வில் அம்பை தூக்கிதான் ஆகவேண்டும். இன்னொரு தலைமுறையை அழித்துதான் ஒரு தலைமுறை தன்னுடைய வாரிசுகளை மண்ணில் காப்பாற்றிவிட்டு செல்கிறது. வாழ்க்கையோ வன்முறையை தேர்ந்தெடுத்த தலைமுறைகளுக்கு மட்டும்தான் சந்தோஷமான நிம்மதியான சாவை கொடுத்து இருக்கிறது. வன்முறையை தேர்ந்தெடுக்க மாட்டேன் என்று பலவீனமாக இருக்கும் மக்களை முடிந்தவரையில் மண்ணுக்கு உள்ளே அனுப்பிவிட்டு கடமையை முடித்து கொள்கிறது. இப்பது கெட்ட விஷயங்களை தொடாமல் வெளிப்படையாக வாழ்ந்த மனிதர்களை பார்க்கலாம். இவர்களுடைய வாழ்க்கையில் குப்பையாக கொள்கைகளை மட்டும்தான் வைத்து இருப்பார்கள் ஆனால் வலிமையாக போராட மாட்டார்கள். இயலமையில் சிக்கி தரித்திரமான பூமிக்கு பாரமான ஒரு வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது ? என்னதான் பண்ணுவது ?

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...