இந்த படத்துடைய பெரும்பாலான காட்சிகள் பிளாஸ்டிக்கான காட்சிகள் , கண்டிப்பாக குழந்தைகள் பார்க்கும் அளவுக்கு படம் இல்லை. நிறைய வயது நிறைந்த ஆடியன்ஸ்களுக்கான கதைக்களம் இருக்கிறது. களம் மட்டும்தான் இருக்கிறது கதை இல்லை. வெறும் 3 வரி ! வாலிபன் தன்னோடு சேலஞ்ச் பண்ணிய ஒரு களரி சண்டைக்காரனை தோற்கடிக்கிறார் ! - ஒரு மணி நேரம் ! வாலிபன் வெள்ளைக்காரர்களுடன் சண்டை போட்டு ரத்தம் சதையுமா களத்தில் இறங்கி தோற்கடிக்கிறார் ! - ஒரு மணி நேரம் ! வாலிபன் சகோதரி போல நினைக்கும் தன்னுடைய தம்பியின் மனைவியை சேர்த்து வைத்து தவறாக பேசி வில்லன்கள் சதியாக பண்ணி தம்பியையும் தம்பியின் மனைவியையும் சாகடிக்கிறார்கள் ஷேப் ஷிப்ட்டிங் பண்ணக்கூடிய சூப்பர் வில்லனை கடைசி 30 செகண்ட்டில் காண்பித்து இருக்கிறார்கள் ! பொதுவாக மொக்கை மொக்கையாக போடும் படங்களுக்கு எப்படி இவ்வளவு பட்ஜெட் கிடைக்கிறது. ஆனால் சூப்பர் படங்களுக்கு பட்ஜெட் எதனால் கிடைப்பது இல்லை என்று எனக்கு புரியவில்லை ! இதுக்காக மலைக்கோட்டை வாலிபன் படம்தான் அடுத்த பொன்னியின் செல்வனா ? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. திரைக்கதை அவ்வளவு மெதுவாக நகர்கிறது. இசை நன்றாக தூங்கவைக்கிறது. வரலாறு புனைகதை என்றாலும் திரைக்கதையோ காட்சிகளோ மக்களுக்கு புரிந்துகொள்ளும் அளவுக்கு கொடுத்து இருக்கலாம். நிறுத்தி நிதானமாக வைக்கபபட்ட ஆங்கில் ஷாட்கள் மற்றும் தெளிவான லொகேஷன் கேமரா வொர்க் என்று எல்லாம் பண்ணியும் கேமராவை 30 செகண்ட்டுக்கு மொக்கையாக வேலை வெட்டி இல்லாமல் வைத்துவிட்டு இதுதான் ஆர்ட் பிலிம் என்று சொல்வது தவறு ! மூன்று வரிகளை மூன்று மணி நேரம் தேய்த்து தேய்த்து எடுத்து இருக்கின்றார்கள் !
No comments:
Post a Comment