Sunday, June 23, 2024

MUSIC TALKS - YEMATHI YEMAATHI IMAIYALE VIZHI SAATHI PAARTHAALE RASATHTHI ADI AATHI ADI AATHI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி ஓடி வரச்சொல்லும் உன் பார்வை
துரு துரு துருவென பார்த்தாளே தூண்டிலை மனசுக்குள் போட்டாளே
இதயத்தில் சுவர்களில் அழகாக அவளது ஓவியம் வரைந்தாளே

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 
ஒரு பார்வை நெய்யூத்தி உயிர் மேல விளக்கேத்தி
போறானே என்னை மாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி
பாதம் நடந்து வந்த பாதை முழுவதிலும் வாசமடிப்பதென்ன வானவில்லே
ஆசைகள் தான் கூத்தாடுது நெஞ்சமெல்லாம் பூத்தாடுது

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 

கதவிடுக்குல விரலாக அவள் விழியாலே உயிர் நசுங்கியதே
பகல் இரவென தெரியாமல் ஏதும் புரியாமல் தினம் நகர்கிறதே
நொடி முள்ளைப் போல் இமை துடிக்கிறதே
நொடிக்கொரு முறை உன்னை கேட்கிறதே
படித்துறை பாசியில் நடப்பது போல் 
கால்களும் காற்றினில் வழுக்கிடுதே
ஹோ .. ஏழேழு ஜென்மங்கள் பேராசை வேண்டாமே
உயிர் தேடும் பெண்ணின் மடியில்
ஒரு நொடி வாழ்ந்தால் அது போதும்
சொல்லாமலே நெஞ்சாடுது 
உன் மோகனம் கண் தேடுதே

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி


இவ மனசுல எனக்காக உள்ள இடம் பார்க்க மனம் அலைபாயும்
தினம் பலமுறை குளிச்சாலும் உடல் நெருப்பாக இங்கு அனல் காயும்
ஒரு விதை விழுந்து வனமாகும் அதிசயம் நேரில் பார்த்தேனே
ஒரு துளி விழுந்து கடல் ஆகும் உற்சவம் நானும் கண்டேனே
வரவேற்பு வளையம் போல் புருவங்கள் அழைக்கிறதே
வரவேற்று எந்தன் நெஞ்சை வதைகள் தினமும் செய்கிறதே
கண்ணால் ஒரு காய்ச்சல் வரும் முச்சந்தியில் மோட்சம் வரும்

ஏமாத்தி ஏமாத்தி இமையால விழி சாத்தி
பார்த்தாலே ராசாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி 
ஒரு பார்வை நெய்யூத்தி உயிர் மேல விளக்கேத்தி
போறானே என்னை மாத்தி அடி ஆத்தி அடி ஆத்தி

No comments:

Post a Comment

GENERAL TALKS - நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் கலப்பு உலோகங்கள் !

  1. Steel (Iron + Carbon) 2. Stainless Steel (Iron + Chromium + Nickel) 3. Bronze (Copper + Tin) 4. Brass (Copper + Zinc) 5. Sterling Silve...