வெள்ளி, 14 ஜூன், 2024

CINEMA TALKS - BILLA 2 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படத்துக்கும் இந்த படத்துக்கு முன்னால் வெளிவந்த விஷ்ணுவர்தனின் பில்லா படத்துக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன ! கதை என்ற அடிப்படையில் கமேர்ஷியல் தமிழ் சினிமா டெப்லேட்களை உடைத்து ஹாலிவுட் அமெரிக்க க்ரைம் டிராமாக்களை போல ஒரு கதையை கொடுத்து இருக்கிறார்கள். மியூசிக் மற்றும் ஸ்டண்ட்ஸ் வேற லெவல். கதை இன்னுமே டெவலப் பண்ணி இருக்கலாம் இருந்தாலும் கொடுத்த ப்ரொடக்ஷன் பஜ்ஜேட்க்கு எவ்வளவு சிறப்பாக படம் எடுக்க முடியுமோ அவ்வளவு நன்றாக படம் எடுத்து உள்ளார்கள் ! அசல் படத்தை போல டிஸப்பாயிண்ட்மெண்ட் இந்த படம் கொடுத்துவிடாது என்றாலும் மிகவும் புதுமையான படம் இந்த பில்லா-2 , இலங்கை தமிழ் அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த டேவிட் பில்லா எப்படி தப்பான ஆட்களை சந்தித்து அவர்களுடைய வலையில் சிக்கினாலும் வேதனைப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடலுக்கே ராஜாவாக மாறுகிறார் என்பதுதான் படத்தின் கதை ! பெரியவர்களுக்காக இந்த படம் பொருத்தமானதாக இருக்கலாம். குழந்தைகள் இந்த படத்தில் எதுவுமே புரிந்துகொள்ள முடியாது. தேவையே இல்லாமல் வேர்ல்ட் பில்டிங்குக்கு கொஞ்சம் காட்சிகளை சேர்த்தது போல உள்ளது. கதைக்கும் தேவைப்படுகிறதா என்பது சந்தேகம்தான். மொத்தத்தில் பில்லா - 1 கதை என்றால் பில்லா - 2 தான் வாழ்க்கையின் ரியாலிட்டி ! 

கருத்துகள் இல்லை:

generation not loving music