Saturday, June 15, 2024

CINEMA TALKS - TRAIN YOUR DRAGON - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


ஃபேன்ட்டஸியான ஒரு உலகத்தில் மனிதர்களும் டிராகன்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கொண்டு இருக்கும் போது எப்படி ஒரு டிராகனுக்கும் ஒரு மனிதனுக்கும் நடைபெறும் ஒரு நட்புறவு அந்த கிராமத்தை மாற்றுகிறது என்பது தான் இந்த படத்தை கதை. பொதுவான டிராகன் எதிர்ப்புக் கொள்கையிலே சிறிய வயதில் இருந்து வளர்ந்த ஒரு சிறுவன் ஒரு கட்டத்தில் ஒரு கருப்பு  டிராகன்க்கு உதவி செய்கிறான் அந்த சிறுவனும் அந்த கருப்பு டிராகனும் நட்பு அடிப்படையில் சேர்ந்து இருக்கும்போது வருங்காலத்தில் நடைபெறக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தை தடுக்கக்கூடிய பொறுப்பு அவர்களுக்கு கிடைக்கிறது எப்படி அந்த ஆபத்திலிருந்து தான் வாழும் கிராமத்தைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதை. கதை மேலோட்டமாக எளிமையாக இருந்தாலும் விசுவலாக இந்த படத்தை நன்றாக எடுத்து இருக்கிறார்கள் வேகமான திரைக்கதையில் நன்றாக எமோஷனல் வேல்யூ கொண்டு வர முயற்சி செய்து இருக்கிறார்கள். பின்னணி மியூசிக் மட்டும் அனிமேஷன் டாப் நாட்சாக இருக்கிறது. குங்ஃபூ பாண்டா போன்ற அதிகமான காமெடியும் கொடுக்காமல் அல்லது குபோ அண்ட் டூ ஸ்ட்ரிங்ஸ் படத்தை போன்று அதிகமான மொக்கையும் கொடுக்காமல் இவை இரண்டுக்கும் நடுவே கொஞ்சம் மீடியமாக கொடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம் !

No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...