சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா
கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது

அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?
கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ ?
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ?
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூ உன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
ஓராயிரம் ஆண்டுகளாய் சேமித்த காதல் இது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹானா சாரல் தூவுதோ ? சஹாரா பூக்கள் பூத்ததோ ?
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ ? அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ ?
அது என்னுடன் தேநீர் கொண்டதோ ?
கனவோ ? நிஜமோ ? காதல் மந்திரமோ ?
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதல் இது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் இது
சஹாரா பூக்கள் பூத்ததோ ? சஹானா சாரல் தூவுதோ
1 கருத்து:
வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் அறிவியல் உண்மைகளை கவனித்ததுண்டா?
அரசுப்பணிகளுக்கான தேர்வுகளுக்கு ஒரு காலத்தில் நானும் தயாரானது உண்டு. அப்படியான தேர்வுகளுக்கு வினா விடையாக மனனம் செய்யும் குறிப்புகளை , திரைப்பாடலுக்குள் ரசனையான கோணத்தில் எழுதி வைத்திருக்கிறாரே என்றுதான் இவற்றை கேட்ட போது வந்த முதல் எண்ணமாக இருந்தது.
இந்த அறிவியல் செய்திகளை அவர் பாடலுக்குள் நுழைக்கும் போக்கினை எங்கிருந்து தொடங்கினார் என்பது தெரியவில்லை.
என்னளவில் நான் முதலில் கவனித்தது, 'வண்டிச்சோலை சின்ராசு' திரைப்படத்தின் 'சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே' பாடலில் இருந்துதான்.
இந்தப் பாடலில் ,
'நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனைப் பேருக்குத் தெரியும்'
என்று அந்தப் பாடலில் காதலுக்கு கண் இல்லை என்கிற சொலவடையை ஒப்பிட இந்த விஷயத்தை உள்ளே நுழைத்திருப்பார்.
அதன் பிறகு , 'ரட்சகன்' திரைப்படத்தின் 'கையில் மிதக்கும் கனவா நீ' பாடலில் ,
'நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்'
என்று ஆரம்பித்து 'காதலில்கூட எடை இழக்கும், இன்று கண்டேனடி' என அவ்வரிகளை முடித்து ஆர்க்மிடிஸ் தத்துவத்தை காதல் உணர்வில் மூழ்கி திளைப்பவனுக்கும் பொருத்தி இருப்பார்.
'வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா?'
என இராவணன் படத்தின் 'கள்வரே கள்வரே' பாடலில் காதலர்களுக்குள் நடக்கும் குறும்பான உரையாடலுக்கு தமிழ் இலக்கணத்தை மேற்கோள் காட்டியதுகூட இந்த நோக்கில் கவனிப்பை பெற்ற வரிகளே.
இப்படி நீங்கள் கவனித்த விஷயங்களை சொல்லுங்கள்.. ரசிப்போம். 😍
கருத்துரையிடுக