Sunday, December 31, 2023

GENERAL TALKS - இந்த ஒரு வருடம் ! - KATRATHUM PETRATHUM


நம்ம வாழ்க்கையில் நாம் எப்போதுமே மரணத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையை பார்த்து பயப்படாமல் துணிந்து சாதிப்போம். நம்ம வாழ்க்கையில் கடைசி வரைக்குமே கெட்டவர்களை சந்திக்காமல் வாழப்போவது இல்லை. பொதுவாகவே எல்லா மோட்டிவேஷன் என்று சொல்லும் கருத்துக்களும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்க எப்படி முன்னேறலாம் என்றுதான் கருத்துக்களை வைத்து இருக்குமே தவிர்த்து கெட்டவர்களை எப்படி தோற்கடிக்கணும் என்பதற்கான முறையான யோசனையை கொடுப்பது இல்லை. இங்கே நிறைய துறைகள் இருக்கிறது. கெட்டவர்கள் பெரும்பாலும் கெட்ட விஷயங்களை எதுக்காக பண்ணனும் ? அவங்க வாழ்க்கையில் காரணத்தோடு அல்லது காரணமே இல்லாத ஒரு பாசிட்டிவ் விஷயத்தை அடுத்தவர்களுக்கு ஒரு நெகட்டிவ்வை கொடுத்து செய்ய வேண்டும் என்று பண்ணுவதுதான் கெட்ட விஷயம் ! இங்கே பணம் மட்டுமே இருந்தால் என்ன கெட்ட விஷயம் வேண்டுமென்றாலுமே செய்யலாம் என்றுதான் இந்த உலகம் சென்றுக்கொண்டு இருக்கிறது. இதனால் நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால் இங்கே மெச்சூரிட்டி என்பது அடுத்தவர்களை குறை சொல்லாமல் உங்களுடைய வேலைகளை சரியாக செய்தால் எல்லாமே சரியாக நடக்கும் என்று புரிந்துகொள்வதுதான் என்ற கருத்தை அப்படியே விட்டுவிடுங்கள். நம்ம வாழ்க்கையில் இருக்கும் இந்த அடுத்தவர்கள் நம்ம வாழ்க்கையை வைத்து செய்துகொண்டு இருக்கிறார்கள். கரண்ட் சப்ளையே இல்லையாம். ஆனால் மெஷின் வேலை செய்யலன்னு மெஷின்னை போட்டு அடிப்பானுங்களாம். பிரச்சனை இந்த அடுத்தவங்க அப்படின்னு சொல்லப்படும் நபர்கள்தான். இவனுங்க பண்ணும் கொடுமைகளால்தான் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றீர்கள். புது வருஷம் 2024 உருவாகப்போகிறது என்பதால் இந்த அடுத்தவர்களை எப்படியாவது தூரமாக கடலில் தூக்கி போட்டுவிடுங்கள் அல்லது கண்ணுக்கு தெரியாத உலகத்தில் அடைத்துவிடுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் சரியாக வேலை பார்ப்பார்களோ அவர்கள்தான் உங்களுக்கு முன்னேற்றம் கொடுப்பார்கள். உங்க வாழ்க்கையில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். அடுத்தவர்கள் உங்களை பாதித்தால் நீங்களும் அந்த அடுத்தவர்களை பாதிக்க வேண்டும். எப்போதுமே பிரச்சனையை வயலன்ஸ் வைத்துதான் சரிபண்ண வேண்டும் என்று இவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். இங்கே நீங்கள் மரணத்துக்கு நெருக்கமாக இருங்கள். உங்களை அடிக்கும் ஒரு ஒருவரையும் பெர்சனலாக நீங்கள்தான் திரும்ப அடிக்க வேண்டும். அமைதியின் பாதை அன்பின் வானம் என்ற கருத்து எல்லாம் அதிகாரத்துக்கு வேலைக்கு ஆகாது. ஃபிக்ஷன்களில் முழுமையான நல்லவர் மற்றும் முழுமையான கொடியோர் என்று இருப்பார்கள். இங்கே உண்மையான வாழ்க்கையில் நல்ல செயல் மற்றும் கொடிய செயல் என்று இரண்டு விஷயமும் கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் செய்துதான் ஆகவேண்டும். நல்லவன் கெட்டவன் என்பது பார்க்கும் மேஜாரிட்டியின் பெர்ஸ்ப்பெக்டிவ்தான். நீங்கள் நிஜமாகவே ஃபியூர் கிளீன் ஆன்மாவாக இருந்தாலும் நீங்கள் நிஜமாகவே டைம் டிராவல் பண்ணி பார்த்தாலும் சுத்தமாக யாருக்கும் எந்த பாவமும் செய்யாமல் நல்லவராக வாழ்ந்த ரெகார்ட்ஸ் இருந்தாலும் சுமாராக 2 லட்சம் பேர் நீங்கள் சாகவேண்டும் என்று ஆசைப்பட்டால் மேலும் மற்ற யாருக்குமே நீங்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை என்றால் என்னதான் பண்ணுவார்கள். உங்களை நாக்கு தள்ள தொங்கவிட்டு காலிபண்ணி விடுவார்கள். மனித இனம் பிறந்ததில் இருந்தே இந்த போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடக்கிறது, பணம் இருப்பவர்கள் விளையாடும் இந்த விளையாட்டில் பணம் இல்லாதவர்கள் உயிர் பிழைக்கும் இந்த போரில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பண்ணுங்கள். சரியானது தவறானது என்று விதிமுறை பார்த்து நத்தை போல நகர்ந்துகொண்டு இருக்க வேண்டாம். மின்னல் போல தாக்குங்கள். இந்த போரை யாராவது முடித்தே ஆகவேண்டும். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...