Monday, December 18, 2023

GENERAL TALKS - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு ?

 



இங்கே விஷயம் என்னைக்குமே சொல்லறதுக்கே கஷ்டமாத்தான் இருக்கு , நம்ம பூமியில் நம்ம மனிதர்களை காலி பண்ண வெளிக்கிரகத்தில் இருந்து விண்வெளி கப்பல் எடுத்து அதுக்கு பெட்ரோல் போட்டு ஏலியன்ஸ் எல்லாம் சண்டைபோட வேண்டும் என்று அவசியம் இல்லை ! நம்மை நாமே அழித்துக்கொள்வோம் போல இருக்கிறது. இன்னைக்கு கொஞ்சமாக கணக்கு போட்டு பாருங்களேன் ! எங்கே பார்த்தாலும் போர், போர் என்றால் என்ன வெறும் நிலத்துக்கு தகராறு , முன் விரோதம் , அப்புறம் நேருக்கு நேராக அடித்துக்கொண்டு சாவதுதான் , சப்போர்ட் பெரிதாக இருந்தால் விமானம் , ஹெலிகாப்டர்கள். நல்ல அப்டேட் பண்ணுண கம்ப்யூட்டர் AI பொம்மைகள் எல்லாம் சம்பாதிக்குது படித்த மனிதர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. ஒரு பொருளை நம்புகிறார்கள் ஆனால் உயிரோடு நடமாடும் மனுஷனை நம்பவில்லையாம். AI பொம்மைகள் சொல்லும் சொற்கள் சட்டமாக பாஸ் பண்ணப்படுகிறது. பணப்பயிர்கள் , சத்துக்கள் இல்லாத சக்கைகள் மட்டும்தான் பயிராக போடப்படுகிறது. கீரைகள் எல்லாம் பார்த்தால் காலேஜ் முடித்த இளைஞர்களுக்கு கூட பேர் சொல்ல தெரியவில்லை. பணக்காரனுடைய காரை ஒரு வசதி வாய்ப்பு இல்லாத பையன் தொட்டு பார்த்ததால் கன்னத்தில் அறைகிறான். பணமுள்ள குடும்பம் பிறப்பால் உயர்வு காட்டி பணம் இல்லாத குடும்பத்தை கடைசி வரைக்குமே பணம் இல்லாத குடும்பமாகவே வைத்து இருக்க பார்க்கிறது. இதையும் மீறி பணம் இல்லாத குடும்பம் கஷ்டப்பட்டு வளர்த்து ஒரு பையனோ பெண்ணோ ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்துவிட்டால் அவனை செய்கூலி கொடுத்து சேதாரம் பண்ணிவிடுகிறார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் பணக்கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் எல்லா தலைமுறையும் இவர்களுக்கு அடிமட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். நாய்களை விட்டு கடிக்க விடுகிறார்கள் , பாம்புகளை விட்டு கொல்ல பார்க்கிறார்கள் , அப்போதுதான் போலீஸ் கேஸ் வாராது !! எல்லா வகையிலும் முன்னேற விடாத ஒரு கிராமத்து மாஃப்பியாக்கள் வில்லேஜ் இடங்களில் இருந்து இளைஞர்கள் நட்சத்திரங்களாக ஜொலிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள். எப்போதுமே ரெகமேன்டெஷனில் மட்டும்தான் உலகம் இயங்கவேண்டும். கிரேயடிவ்வாக யாருமே யோசிக்க கூடாது. இப்போது மொத்த உலகத்துக்கும் ஆப்பு வைக்க AI களம் இறங்கியுள்ளார். இவருடைய கெத்து வேற லெவல்லில் இருக்கிறது. இருபது நகங்களும் கழுகு , இவருக்கு இவர்தான் அழகு, இவரோட நியாயம் அநியாயம். கடசியில் ரோபோடகளை வைத்து ஜேட்ஜ்மெண்ட் நாள் கொடுப்பார். அனைத்து மக்களுக்கும் சாவு கன்ஃப்பார்ம். பேஸிக்காக AI யை கட்டுப்படுத்தாமல் விட்டால் உலகம் எப்படி போகும் என்று இருள்மயமான எதிர்காலம் என்னுடைய கண்களுக்கு மட்டும்தான் தெரிகிறதா ? கடைசி வரைக்கும் திருந்தாமல் மாமன்னன் படத்தின் வில்லன் ரத்னவேலு போல ஈகோவுக்கு முக்கியம் கொடுத்து மட்டும்தான் வாழப்ப்போகிறீர்களா ? கவனமாக செயல்படுங்கள். டிவைட்ட் வி ஃபால் என்பது உலக பொதுவான பொன்மொழி. வரலாறும் இதைத்தான் சொல்கிறது. சேர்ந்தால் மட்டும்தான் உயிராவது உங்களுக்கு மிஞ்சும். அங்கேயும் நீங்கள் எல்லாம் பிரிவினை பார்த்தால் சாமியோடு சாமியாக போய்விட AI உங்களுக்கு நல்ல பெஸ்ட் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளது. இன்னும் என்ன சொல்ல வேண்டும் ? யெஸ் !!! இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் சொடுக்குங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...