Monday, December 18, 2023

CINEMA TALKS - ENNAI ARINDHAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


காவல் துறையில் சிறப்பு தனிப்படையில் இருக்கும் ACP சத்யா ஒரு கட்டத்தில் அண்டர்க்கவர் ஆபரேஷனாக ஒரு பெரிய க்ரைம் நெட்வொர்க்கையே உடைக்க வேண்டிய கட்டாயத்தில் நெட்வொர்க்குக்குள் வேலை பார்க்கும் விக்டர் என்ற ஒருவருடைய நண்பராக நடித்து அந்த கொடிய மாஃப்பியாவை தீர்த்துக்கட்டுகிறார். விக்டர் நேரடியாக சத்யாவை பழிவாங்கவே சத்யா குடும்பத்தை இழந்து அவருடைய மகளின் பாதுகாப்புக்காக தனியாக சென்றுவிடுகிறார். பின்னர் பலவருடங்களுக்கு பின்னால் சத்யாவை பழிவாங்க நினைக்கும் விக்டரிடம் இருந்து அவருடைய குடும்பத்தையும் சார்ந்தவர்களையும் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. இந்த படம் என்னுடைய பேர்ஸனல் பெஸ்ட் க்ரைம் பிலிம் என்று சொல்லலாம். இந்த படம் க்ரைம் ஆக்ஷன் படமாக மட்டுமே இல்லாமல் நமது தமிழ் சினிமாவுக்கான மாஸ் லெவல் காட்சிகள் எல்லாமே சேர்த்து கௌதம் அவர்களின் போன வொர்க்ஸ்களை சேர்த்து பார்க்கும்போது ரொம்பவே இன்னோவேட்டிவ்வான படம் என்றே சொல்லலாம். காமிரா வொர்க் பிரமாதம். ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துடைய திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுத்து பின்னணியில் சிறப்பாக வேலை செய்துள்ளது. கலர் பேலட்ஸ்ஸில் எடுக்கப்பட்ட க்ரைம் டிராமாக்களை சேர்த்து பார்க்கும்போது என்னை அறிந்தால் ரொம்ப ரொம்ப அருமையாக திரைக்கதை எழுதப்பட்டது காட்சியாக எடுக்கப்பட்ட ஒரு படம் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம். ஒரு சாலிட் இன்வெஸ்ட்டிகேஷன் ஆக்ஷன் எண்டர்டெயின்மெண்ட் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் !! இந்த மாதிரி நிறைய விமர்சனங்கள் தெரிந்துகொள்ள மறக்காமல் நம்முடைய தமிழ் இணையதளம் என்ற வலைத்தளத்தை புக்மார்க் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது ஃபேவரைட்ஸ்ஸில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள் !! 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...