இந்த உலகத்தில் ஒரு சில பேர்தான் வாழ்க்கையில் என்ன கஷ்டம் வந்தாலும் எதிர்த்து நின்று போராடி சண்டை போட்டு ஜெயிப்பார்கள். அப்படிபட்ட ஒரு கேரக்டர்தான் இந்த படத்தில் சூர்யா நடித்துக்கொடுத்துள்ள நிஜ வாழ்க்கை விமான பயண நிறுவனத்தின் உரிமையாளர் நெடுமாறன் ராஜலிங்கம் என்ற கதாப்பத்திரம். இந்த படம் ஃபேன்டாஸ்டிக்காக இருக்கிறது. கதை அடிப்படையிலும் இல்லையென்றால் விஷுவல்லாகவும் இந்த படம் ஃபேன்டாஸ்டிக். இந்த படமும் சார்ப்பட்டா பரம்பரை படமும் தியேட்டர் ரிலீஸ் ஆகியிருந்தால் நம்ம தமிழ் சினிமாவில்லேயே ரொம்ப பெரிய மாற்றமே நடந்து இருக்கும். இந்த படத்தில் ஃபைட் ஸீன்கள் எல்லாமே கிடையாது. ஸாங்க்ஸ் கூட கதைக்கு தேவைப்பட்டதால்தான் இருந்தது. எல்லா கதாப்பத்திரங்களுக்கும் நிறைய இம்பார்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நெடுமாறன் கனவுகளை விட்டுக்கொடுக்காமல் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் அரசியல் தலைவர்கள் , ஃபைனான்ஸ் கொடுத்த கடன்காரர்கள் , என்று எல்லோரையும் சமாளித்து மேலே வருவது எல்லாமே வேற லெவல் என்றால் அவருடைய எமோஷனல்லான பாகத்தோடு நாமும் இணைந்து பயணிக்கும் அளவுக்கு ரொம்ப அருமையான இண்டென்ஷன்ஸ்ஸில் எடுக்கப்பட்ட சிறப்பான காட்சிகளை கொண்ட தரமான படம் இந்த படம். உங்களுக்கு நம்ம தமிழ் சினிமா பிடிக்கும் என்றால் கண்டிப்பாக ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஒரு படம்தான் இந்த சூரரை போற்று என்ற திரைப்படம்.
No comments:
Post a Comment