Sunday, December 10, 2023

CINEMA TALKS - TAMIL EN ONDRU ALUTHAVUM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 சமீபத்திய செய்திகளின் படி மின்காந்த அலைகள் பூமியை தாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பதையும் சூரியனில் பூமியின் அளவை விட 70 மடங்கு பெரிய அளவில் கருப்பு பகுதிகள் தோன்றி சூரிய வெப்ப அலைகளை வெளியேற்றிக்கொண்டு இருப்பதையும் என்னால் நியூஸ்ஸில் படித்து தெரிந்துகொள்ள முடிகிறது. இப்போது இந்த படத்தின் ரேவ்யூவையும் படித்துவிடுங்கள். ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம்தான் , ஆனால் கமர்ஷியல் ஆடியன்ஸ்க்கு பிடிக்கும் அளவுக்கு எடுத்து இருக்கிறார்கள். இங்கே சென்னையில் நகுல் ஒரு பரில்லியன்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஸ்பெஷல்லிஸ்ட் ஒரு பக்கம் கல்லூரி ப்ராஜக்ட்க்காக கல்லூரி மாணவர்கள் இந்த இளம் அறிவியல் எக்ஸ்பெர்ட்டை அணுகும்போது அவருடைய திறன்கள் மூலமாக உருவாக்கப்படும் இந்த ப்ராஜக்ட் சூரிய மின்காந்த புயலால் மொபைல் ஃபோன் சிக்னல் கிடைக்காமல் இருக்கும் பிரச்சனையை சில நிமிடங்களில் சரி பண்ண முடியும் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் மொபைல் ஃபோன்களுக்கு சிக்னல் கிடைத்தால் ஒரு பக்கம் ஒரு டாக்ஸி டிரைவருடைய காரில் வைக்கப்பட்ட பிலாஸ்ட்டால் அசம்பாவிதம் நடந்துவிடும் , கிடைக்கவில்லை என்றால் கட்டிடங்களில் இடையில் சிக்கியிருக்கும் தினேஷ்ஷின் காதலியின் ஃபோன்னை கண்டுபிடித்து காதலியின் உயிரை காப்பாற்ற முடியாது. இந்த ஒரு வரிக்கதை ரொம்ப அருமையாக கிளைமாக்ஸ் வரைக்குமே கொண்டுபோகப்பட்டு இருக்கிறது. இந்த படம் நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்ப ஸ்பெஷல்லான படம். சொல்லப்போனால் இந்த மாதிரி கிரியேட்டிவ்வான கதைகளை மற்ற பொதுவாக கமர்ஷியல் படங்களில் வெளியீடுகளுக்கு மத்தியில் பார்ப்பது ரொம்பவுமே சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில் அவுட் ஆஃப் பாக்ஸ்ஸாக யோசித்து திரைக்கதையை நகர்த்தி இருப்பது வேற லெவல். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...