Tuesday, December 12, 2023

TO MAKE THIS MAGIC - TAMIL QUOTES - தமிழ் கருத்துக்கள் - (P-3)


31. ஒரு நிறுவனத்தின் தலைவர் அவருடைய ஒரே ஒருவருடைய உழைப்பால் மட்டும்தான் அந்த நிறுவனமே உருவானது என்று சொன்னால் அவரை விட முட்டாள் வேறு யாருமே இல்லை என்று பொருள். எப்போதுமே வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய கிரெடிட்ஸ்ஸை கொடுக்க வேண்டும். 

32. இந்த உலகத்திலே பதில் கிடைக்காமல் எல்லோருமே வெறுத்துப்போன ஒரு குழப்பமான கேள்வி "கடவுள் நினைத்தால் ஒரு நொடியில் வாழ்க்கையை மாற்றிவிட முடிந்தாலும் எதனால் அவர் செய்ய மறுக்கிறார் ?" என்ற கேள்விதான். 

33. இந்த வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்றால் உங்களுடைய வாழ்க்கையின் பெரிய பயனுள்ள கனவை விட்டுவிடுங்கள், உங்களின் பயனற்ற குட்டி குட்டி கனவுகளை நிறைவேற்ற உதவுவேன் என்று சொல்லிதான் ஏமாற்றுகிறது. 

34. முன்னேற வேண்டும் என்று நினைக்கும் எவருமே இன்ஸ்பைரேஷனை தேடிக்கொண்டு இருப்பதை விட இன்போர்மெஷனை தெரிந்துகொண்டு அடுத்தடுத்த செயல்களை செய்வது ரொம்ப நல்ல விஷயம். 

35. இன்றைய தேதிக்கு உலகத்தில் பணமும் , பொருளும் , அதிகாரமும் இருக்கும் மக்கள் என்ன சொன்னாலும் அது சட்டமாக மாறுகிறது. இது பிரச்சனை இல்லை. பிரச்சனை என்னவென்றால் அவர்கள் பணக்கஷ்டத்தில் இருப்பவர்களை உடல் அளவிலும் மன அளவிலும் அதிகம் காயபடுத்தி சோர்வு அடைய வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 

36. உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு. இன்னொருவர் உங்களுடைய வாழ்க்கையை மாற்றுவார்கள் என்று நம்பிக்கொண்டு தொடங்கிய இடத்திலேயே இருக்க வேண்டாம். 

37. ஸுடோசயின்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. சயின்ஸ் அடிப்படையில் சாத்தியம் இல்லை என்றாலும் கடைசிவரைக்கும் சயின்ஸ் போலவே வெளியில் இருந்து தோன்றும் அந்த போலியான கருத்துக்களை கடவுளை போல கொஞ்சம் மனிதர்கள் நம்பிக்கொண்டு இருப்பார்கள். 

38. இன்னொருவருக்கு கிடைக்கும் வெற்றியை பார்த்து பொறாமைப்படவேண்டாம். கடைசி காலத்தில் வெற்றியை யாருமே கொண்டுபோக முடியாது. அனுபவங்களை மட்டும்தான் கொண்டுபோக முடியும். 

39. கருத்துக்கள் ஆயிரம் சொல்லலாம் ஆனால் எல்லா கருத்துக்களுமே காலத்தால் மாறிக்கொண்டே இருக்கும் . இந்த வகையில் காலத்துக்கு ஏற்றார் போல அப்டேட் ஆவதுதான் ரொம்ப ரொம்ப கடினமான விஷயம். 

40. கௌரவம் என்ற விஷயம் மட்டும் ஒரு குழந்தையாக பிறக்கும்போதே மனதுக்குள் பதிந்துவிடுகிறது பின்னாட்களில் உடல் நலிந்து போகும்போதுதான் நம்மை விட்டு போகிறது. 

41. காலத்தில் நீங்கள் மாற்றங்களை கொண்டுவரவில்லை என்றால் காலம் எப்போதுமே உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை பண்ணிக்கொண்டும் உங்களுக்கு பாதிப்புகளை கொடுக்கும் செயல்களை செய்துகொண்டுமதான் இருக்கும். 

42. இந்த உலகத்தில் நீங்கள் வெற்றி அடைந்தால் உங்களுக்காக உங்களுடைய வெற்றிக்காக சந்தோஷப்படுவார்கள் என்று யாரையும் எதிர்பார்க்க வேண்டாம். இங்கே எல்லோருக்குமே வெற்றி பொதுவான விஷயம். உங்களை தவிர்த்து மற்றவர்களால் தொடமுடியாமல் இருந்த விஷயத்தை நீங்கள் தொட்டு இருப்பதால் உங்களுக்காக நீங்கள் மட்டும் சந்தோஷபட்டால் அதுவே போதுமானது !

43. ஒரு சிறந்த வேலையை செய்து முடித்துவிட்டால் பாராட்டு கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டாம் எப்போதுமே இன்னும் நிறைய சிறந்த வேலைகளை தேர்ந்தெடுத்து செய்துகொண்டு இருங்கள். முன்னேற்றம் பாராட்டை விடவும் முக்கியமானது !

44. கேள்விகள் கேட்பது ஒரு நுணுக்கமான கலை. இங்கே அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் தவிர மற்ற எந்த துறைகளிலும் கேள்விகளை கேட்பவர்களுக்கு போதுமான சப்போர்ட் கிடைப்பதே இல்லை. 

45.  பொதுவாக கருத்துக்களை சொல்லும்போது சந்தோஷம் , தூக்கம் , வெற்றி , தோல்வி , வாழ்க்கை , இழப்பு , இலாபம் , நஷ்டம் , இந்த மாதிரி உயிரற்ற செயல்களை உயிருள்ளவைகளை போல மென்ஷன் பண்ணுவது குழப்பமாகத்தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து இந்த விஷயங்கள் உண்மையான வாழ்க்கையில் கொடுத்துக்கொண்டு இருக்கும் மாற்றங்கள் இந்த விஷயங்களுக்கு எல்லாமே உண்மையில் உயிர் இருக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது !

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...