TED மற்றும் TED 2 - ஒரு பையன் அவனுடைய கிறிஸ்துமஸ் வேண்டுதலாக உயிரோடு இருக்கும் ஒரு டேடி பேர் பொம்மையை கேட்டுவிடுகிறான் ஆனால் அதிசயமான முறையில் அந்த டேடி பேர் பொம்மை உயிரோடு வந்துவிடுகிறது. இது ஒரு ஃபேமிலி படமாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அவனுடைய நண்பனாக இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும் பழகிவிட்டு நம்ம டெடிபேர் பண்ணும் கலாட்டாக்கள் இருக்கிறதே தாங்கவே முடியாத அளவுக்கு இருக்கும் , நிறைய போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் மேட்டர் ரேஃப்ரன்சஸ் இருப்பதால் இந்த படம் பெரியவர்கள் பார்க்க வேண்டிய படம். இந்த படத்துக்கு நேர் ஆப்போஸிட்டாக இரண்டு படங்களை சொல்ல சொன்னால் PADDINGTON 1 மற்றும் PADDINGTON 2 ஐ சொல்லலாம், இந்த படத்தில் நிறைய கலாய்க்கும் காட்சிகளில் காமெடி இருந்தாலும் அடிப்படையில் ஒரு உயிர் இல்லாத பொருளுக்கு உயிர் கிடைத்து மனிதர்கள் அளவுக்கு நம்மை போலவே இருந்தால் அந்த வாழ்க்கையில் பேர்ஸனலாக சந்திக்கும் பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்பதை ரொம்பவுமே நன்றாக சொல்லி இருப்பார்கள். மார்க் வால்பேர்க் மற்றும் சேத் மெக்ஃபாரலின் காம்பினேஷன் ஃபேன்டாஸ்டிக்காக இருக்கும், இந்த படங்களில் நிறைய காமெடிகள் கண்டிப்பாக அடல்ட்ஸ் ஒன்லி என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக அந்த லேப்டாப்பை உடைக்கும் காட்சி வேற லெவல். இந்த படங்களை பற்றி இன்னும் விரிவாக பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. தொடர்ந்து இந்த வலைப்பூவை ஃபாலோ செய்யுங்கள். இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment