Thursday, December 21, 2023

GENERAL TALKS - இது நம்ம வாழ்க்கையை பற்றி பொதுவாக தெரிந்துகொள்ள வேண்டிய கான்சேப்ட்


நிறைய நேரங்களில் வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பது என்பதை மிகவும் தவறாக புரிந்துகொள்கிறார்கள். இங்கே எந்த ஒரு காரணத்தை கொண்டும் அப்பாவியாக இருக்க கூடாது. இந்த உலகத்தில் நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்ட விஷயமாக இருந்தாலும் அதிகமாக தெரிந்துகொண்டு இருந்தால்தான் இங்கே நீங்கள் நல்லவர்களாகவும் இருக்க முடியும் ஆனால் கெட்டவர்களாகவும் இருக்க முடியும். வாழ்க்கை என்பது உங்களுடைய ஒரு ஒரு நாளிலும் அதிகமாக தெரிந்துகொள்வதில்தான் இருக்கிறது. நிறைய சோசியல் லேர்னிங் தேவைப்படும். இங்கே எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ முடியாது. குடும்பமோ நண்பர்களோ இருந்தால்தான் உங்களுடைய வாழ்க்கையை அடுத்து நகர்த்த முடியும் , தனியாக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கை முழுக்க மளிகை கடை , சலூன் கடை , ரேஷன் கடை இல்லாமலா வாழ முடியும் ? கஷ்டமாக இருக்கும் அல்லவா ? ஒரு காலத்தில் உணவு , உடை , இருப்பிடம், பொருட்கள் , உறவுகள் என்று எல்லா விஷயங்களுக்காகவும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து சண்டைபோட்டுக்கொண்டு இருந்த நாட்கள்தான் இப்போது பணம் இருப்பவர்களுக்கு எல்லாமே சொந்தம் என்னும் நிலைக்கு கொண்டுவந்து உள்ளது. இன்றைக்கு ஒரு விவசாயி சமுதாயத்துக்கு உணவு கொடுத்து அவருக்கான பணத்தை சம்பாதித்துககொள்கிறார், கட்டிடக்கலையில் வேலை செய்பவர் கட்டிடங்களை கட்டி அவருக்கான பணத்தை சம்பாதித்துககொள்கிறார். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பணத்தின் அடிப்படையிலான விஷயமாக மாறிவிட்டது. கறுப்பு பணம் அல்லது கிரிப்டோ போன்ற விஷயங்கள் நம்முடைய சமுதாயத்துக்கு எந்த ஒரு விஷயத்தையும் கொடுக்காமல் சமுதாயத்தை அவைகளுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றது. இதனால் சான்றோன் என்ற கருத்து எல்லாம் எப்போதோ மாறிவிட்டது , கல்வியும் , செல்வமும் , வீரமும் எல்லோருக்குமே ஆன அடிப்படை தகுதி என்றும் இவைகளில் ஒன்று குறைந்தாலும் கூட வாழ்க்கை கஷ்டமாக இருப்பதும் நிதர்சனம். இதனால் நல்லவர்களாக வாழ நினைப்பவர்கள் அவர்களுக்கு என்று ஒரு புனிதத்தன்மை கிரேயட் செய்து தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை கூட தெரிந்துகொள்ளாமல் அப்பாவியாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டாம். ஒரு பராக்டிக்கல் எக்ஸ்ப்ளேனேஷன் கொடுக்கவேண்டும் என்றால் பைரேட்ஸ் ஆஃப் கரேபியன் படங்களில் இடம்பெறும் கேப்டன் ஜாக் ஸ்பெரோ போல இருக்க வேண்டும், நல்லவர்களாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் திறமை மிகுந்த புத்திசாலியாகவும் இருக்க வேண்டும், வாழ்க்கை என்ற பாதையில் நல்லவர்கள் என்ற இடத்தில் வாழ்ந்தால் ஒரு அளவுகடந்த தனிமைதான் உங்களுக்கு மிஞ்சுகிறது. ஆனால் ஒரு சிறப்பன அறிவுத்திறன் மிக்க நபராக வாழ்ந்தால் உங்களுக்கு எல்லாமே கிடைக்கிறது. இதனால்தான் அறிவுத்திறன் என்பது முக்கியமானது. சிங்கத்தை காடுகளின் ராஜா என்று சொல்கிறோம். ஒரு நாள் சிங்கங்களுக்கு இண்டெலிஜன்ஸ் கிடைத்து இதுவரைக்கும் காடுகளை மனிதர்கள் அழித்த காரணங்களுக்காக சட்டப்படி வழக்கு தொடுத்து இன்டர்வியூக்களில் பக்கம் பக்கமாக பேசினால் அவைகளுக்கான சம உரிமை மற்றும் பலம் கிடைத்துவிடும் அல்லவா ? இதனால் உங்களுக்கு என்ன புரிகிறது ? நல்லவர்களாக இருந்தாலும் இண்டெலிஜன்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் ரொம்ப முக்கியமானது. அப்பாவி வாழ்க்கை உங்களை அறியாமை இருளில் மூழ்கடித்துவிடும். அறியாமை பின்னாட்களில் பெரும் துன்பம் கொடுத்துவிடும். இங்கே என்னுடைய கடைசி பெர்ஸனல் கருத்து என்னவென்றால் மனிதர்களில் எதையும் தெரிந்து கொள்ளாமல் அப்பாவி-நல்லவர் என்ற வாழ்க்கையை வாழ்பவர்கள் அவர்களின் இண்டெலிஜன்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு சிங்கங்களை போல வாழ்கிறார்கள், இது வருத்தப்படக்கூடிய விஷயமாகும். 



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...