இன்னைக்கு தேதிக்கு ஒரு ஒரு நாளும் நம்முடைய கடந்த காலத்தை நாம் விட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். நம்மை மட்டும் சொல்லி தவறு இல்லை. இன்றைக்கு நிறைய செடி கொடிகள் மற்றும் மூலிகைகள் உள்ளது ஆனால் அவைகளின் பெயர்களையும் பயன்பாடுகளையும் எதனால் நாம் தெரிந்து வைத்துக்கொள்வது இல்லை ? இதுக்கான காரணம் நமது தற்போதைய கலாச்சாரம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோம் என்பதுதான். இமாஜின் பண்ணி பாருங்களேன் இந்த உலகத்தில் அறிவியல் அடிப்படையில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டால் உங்களுக்கு நிறைய நிஜவாழ்க்கை தகவல்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பொழுதுபோக்கு அடிப்படையில் ஆனது. இவைகளில் காட்டப்படும் கதாப்பாத்திரங்கள் மற்றும் இடங்கள் கற்பனையான விஷயம் மட்டுமே. இவைகளை நாம் நினைவில் வைத்துக்கொண்டு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்போது எல்லாம் கார்போஹெய்ட்ரேட் நிறைந்த சாப்பாட்டை தினம் தினம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதால் அடிப்படையில் தானியங்களை மறந்தேவிட்டோம். நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் நமது உணவு பட்டியலில் இருந்து காணாமல் சென்றுக்கொண்டு இருக்கிறது என்றால் சிறுதானியங்கள் நமது உணவுப்பட்டியலில் இல்லவே இல்லை. இன்னொரு பக்கம் ஆயில் நிறைந்த உடல் நல பாதிப்பை கொடுக்கும் உணவுகளும் இருக்கிறது. அதுவுமே இல்லாமல் சத்துக்கள் இல்லாத வேறு எந்த சிறப்பான விஷயங்களும் இல்லாத ஒரே ஒரு மூலப்பொருள் இருக்கும் விஷயத்தை சாப்பிடுவது பொதுவாகவே ஆரோக்கியம் இல்லாத ஒரு விஷயம்தான்.
No comments:
Post a Comment