Friday, December 22, 2023

CINEMA TALKS - VISARANAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !


இந்த படம் கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய படம் , இந்த படத்தில் செய்யாத தவறுகளுக்காக நான்கு அப்பாவி இளைஞர்கள் கைது பண்ணப்படுகிறார்கள். ஆனால் கைது பண்ணப்பட்ட பின்னால்தான் புரிகிறது அங்கே இருக்கும் பாதுகாப்பு துறையினர் இவர்களை கொள்ளைக்காரர்கள் கொலைகாரர்கள் என்று வேண்டுமென்றே குற்றம் சாட்டி சிறையில் அடைத்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கவைக்க பார்க்கிறார்கள் என்ற விஷயம். இருந்தாலும் எப்படியோ தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியால் கோர்ட்டில் நிரபராதி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வெளியே கொண்டுவரும் இந்த இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கப்போக்கும் பேராபத்து என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை. படத்தை சென்டிமெண்ட்டாக கொண்டுபோகாமல் நேரடியாக நேருக்கு நேராக மோதும் துணிவான பயம் இல்லாத நேரடியாக இளைஞர்களாக வாழ்க்கையை எதிர்த்து போராடுவதாக கதாப்பத்திரங்களை கொடுத்து இருப்பது ரொம்பவுமே அருமையான விஷயம். இன்டர்வேல்க்கு பின்னால் கதை வேகமாக நகர்கிறது சமுத்திரக்கனி , தினேஷ் , கிஷோர் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் என்று முக்கியமான கதாப்பாத்திரங்களை மிகவும் பிரமாதமாக கொண்டுவந்து இருக்கிறார்கள். இந்த படம் வாழ்க்கையின் பயமுறுத்தும் இன்னொரு பக்கத்தையும் நேரடியாக அந்த பக்கத்தை எதிர்த்து சண்டைபோடுவதையும் அவ்வளவு ரியல்லிஸ்டிக் நேரேஷனில் காட்டியுள்ளது. நிறைய படங்களால் இந்த நுணுக்கமான விஷயத்தை செய்ய முடியாது.  இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...