Thursday, December 7, 2023

CINEMA TALKS - SNAKE IN EAGLE SHADOW MOVIE- TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


ஸ்னேக் இன் தி ஈகில்ஸ் ஷாடோ - பொதுவாக குங் பூ முறை சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு ஆக்ஷன் ஆட்வேன்ச்சர் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுடைய பட்டியலில் இடம்பெற வேண்டிய படம் , ஜாக்கி சான் அவர்களின் ஸ்வாரஸ்யமான மார்ஷியல் ஆர்ட்ஸ் காமெடி படங்களை இந்த கதையில் பார்க்கலாம். இந்த படங்கள் ரொம்ப காலத்துக்கு முன்னால் வெளிவந்த படங்கள் என்றாலும் கதையை டயலாக்காக பேசி கொள்ளாமல் கிளைமாக்ஸ் வரைக்குமே ஒரு சிம்பிள் ஆன கதையை சிறப்பாக எக்ஸ்ஸிக்கியூஷன் கொடுத்து கொண்டு சென்று இருக்கிறார்கள். கதைக்கு வரலாமா ? இங்கே பாம்பு முறை குங் பூ மாஸ்டர் கஷ்டப்பட்டு சண்டை போட்டாலும் கழுகு முறை குங் பூ சண்டையை போதும் மாஸ்டரை தோற்கடிக்க முடியவில்லை. இங்கே கழுகு முறை குங் பூ மாஸ்டர் இந்த பாம்பு முறை குங் பூவை கற்றுக்கொண்டு மற்ற குங் பூ தெரிந்தவர்களை தோற்கடிக்கிறார் அல்லது தீர்த்துக்கட்டுகிறார். இப்போது தனித்து தலைமறைவாக இருக்கும் அந்த மாஸ்டர் ஒரு மட்டமான குங் பூ சண்டை பயிற்சி அமைப்பில் கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் கதாநாயகரை பார்த்து அவருக்கு தனக்கு தெரிந்த குங் பூ கலையை சொல்லிக்கொடுக்கிறார் அடுத்து வில்லங்களால் இவர்கள் கண்டறியப்படவே எப்படி சதிகளை கடந்து மேலே வருகிறார்கள் என்பதை ஸ்வாரஸ்யமாக சொல்லி இருப்பதால் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம், இந்த மாதிரியான மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எனக்கு பேர்ஸனல் ஃபேவரட் என்பதால் எனக்கு இந்த படம் நன்றாக இருக்கிறது. ஜெனரல் ஆடியன்ஸ்க்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் சண்டை காட்சிகள் பிரமாதமாக இருக்கும் அவைகளுக்காக பார்க்கலாம் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...