Saturday, December 9, 2023

GENERAL TALKS - TO BE TELL SOMETHING PERSONAL - ஒரு வலைப்பூ பதிவு !!

 


நான் வாழ்க்கையில் நிறைய விஷயங்களில் வெற்றி அடைந்து இருக்கிறேன். நான் வாழ்க்கையில் தோல்விகளும் அடைந்து இருந்தாலும் நான் வருத்தப்பட்டது இல்லை. என்னுடய வாழ்க்கையில் எப்போதுமே நான் செய்த சரியான செயல்களுக்காக சந்தோஷப்பட்டு என்னுடைய புகழ் பாடியதும் இல்லை. நான் பண்ணிய தவறுகளுக்கு நான் குற்ற உணர்வில் இருந்ததுமே இல்லை. ஒரு ஒரு முறையும் வெற்றி வாய்ப்பு 0.00 சதவீதம் என்றாலும் என்னுடைய செயல்களில் கடவுளுக்கு விருப்பம் இல்லாதது போல விதியே வந்து தடுத்தாலும் நான் காலத்தை உடைத்து ஸ்பேஸ்டைம் விதிகளை உடைத்து வெற்றி அடைந்துதான் இருக்கிறேன். என்னுடைய ஆசைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. என்னால் முடிந்தவரைக்குமே யாருக்குமே கஷ்டங்களை கொடுத்தது இல்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய தேவைகளை கடவுள் எப்படி தடுத்தாலுமே நான் அடைந்து உள்ளேன். இன்னைக்கு இந்த தேதியில் கூட நான் டைப் பண்ணும் லேப்டாப் கீபோர்ட் செத்துவிட்டது. இருந்தாலும் எக்ஸ்ட்ரா கீபோர்ட் வைத்து நான் வலைப்பூவில் பதிவுகளை பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். இது எல்லாமே இப்படித்தான் நடக்கும். சாகும் வரைக்குமே எல்லைகளை மீறக்கூடாது என்றால் வாழ்க்கை எதுக்காக இருக்கிறது ? இந்த எல்லைகளை கடந்துதான் ஆகவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட போராட்டமாக இருந்தாலும் சரி , உங்களுடைய உயிர் போக 100 சாதவீதம் வாய்ப்பு இருந்தாலும் பயப்படாமல் போராடுங்கள். உங்களுக்கு யாருமே சப்போர்ட் இல்லை என்றாலும் நீங்கள் சப்போர்ட் பண்ண வேண்டும். கடவுள் அவருக்கு பிடித்தவர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் பண்ணுவார் என்பதால் கடவுள் கண்டிப்பாக ஒரு உயிருக்கு ஆதரவாகவும் இன்னொரு உயிருக்கு எதிராகவும் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் அதனால் மிகவும் துல்லியமாக வாழ்க்கையில் உங்களுடைய இண்டென்ஸன்களின் அடிப்படையில் வாழவேண்டும். 
Countdown Timer

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...