நினைத்தது யாரோ பொறுத்தவரைக்கும் ரொம்ப கிரியேட்டிவ்வான ஒரு லவ் ஸ்டோரி, இந்த படத்தில் ஜெனியூனான ஒரு புத்தகம் படிக்கும் நாவல் ரசிகர்களுக்கு இருக்கும் ரசனையுடன் ஒரு காதல் கதை சென்றுக்கொண்டு இருக்கும். இன்றைக்கு தேதிக்கு நிறைய கமர்ஷியல் படங்கள் இந்த அளவுக்கு கிரியேட்டிவ்வான அவுட் ஆஃப் பாக்ஸ் லெவல் திரைக்கதைகளை கொடுப்பது இல்லை. இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் கண்டிப்பாக ரேலேட்டபில் பாக்ஸ் ஆபீஸ் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி படைப்புதான். இங்கே இயக்குனர் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களியும் படத்தில் கொடுத்து இருக்கிறார். இந்த படத்துடைய கதைக்கு வரலாம் . காதலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் தனித்தனியாக காதலால் வாழ்க்கையில் கசப்பான விஷயங்களை மட்டுமே பார்த்து வாழ்க்கையை தொலைத்து இருக்கிறார்கள். காதல் மேல் இருக்கும் வெறுப்பு இவர்களிடம் அதிகமாக இருப்பதால் காதலை சப்போர்ட் பண்ணும் யாராக இருந்தாலும் அவர்களை திட்ட ஆரம்பிக்கிறார்கள். மேலும் காதலை எதிர்த்து ஃபேஸ்புக் , பிளாக் , மீடியா என்று எல்லா இடங்களிலும் வெறுப்பு கருத்துக்களை கொடுக்கிறார்கள். இங்கே இதே போல இன்டர்வியூ பண்ண ஒரு இயக்குனரிடம் கேட்கும்போது கதையின் திரைக்கதை வேற லெவல்லில் செல்கிறது ! அந்த இயக்குனர் அவருடைய சொந்த காதல் கதையை சொல்கிறார், இப்போது அந்த இயக்குனர் காதலில் வெற்றி அடைந்தாரா ? அல்லது விதி வெற்றி அடைந்ததா என்பதுதான் படத்தின் படத்தொகுப்பு. இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். புது ஜெனெரேஷன் விஷயங்களை தவிர்த்து இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த ஒரு நல்ல படத்தை பார்த்த உணர்வு உங்களுக்கு இந்த படம் பார்த்தால் கிடைக்கும். இந்த படத்துடைய கிளைமாக்ஸ் டிவிஸ்ட் வேற லெவல். படத்தை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் !! காதலித்து கண்ணீர் விடுவதற்கு பெயர் வாழ்க்கை இல்லை. நம்ம வாழ்க்கையில் நம்முடைய வெற்றியை அடைந்து வானத்தில் பறந்து செல்ல வேண்டும் என்று ஒரு கருத்து சொல்லும் இந்த படம் அதே நேரத்தில் காதல் என்பது கல்யாணத்தில் முடிந்தால் மட்டுமே வெற்றி அல்ல ஒருவர் வாழ்க்கை மேல் ஒருவர் அக்கறை எடுத்துக்கொண்டு முன்னேற்றம் அடைய வைப்பதும் வெற்றிதான் என்ற இன்னொரு தரமான கருத்தை சொல்கிறது.
No comments:
Post a Comment