ரொம்ப நாட்களுக்கு பின்னால் அந்த கிளாஸ்ஸிக் சூப்பர் ஸ்டார்ரின் கெத்தான மாஸ் ஆன நேரடியான ஆக்ஷன் பார்க்கவேண்டும் என்றால் உங்களுக்காக இருக்கும் ரொம்ப பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் படம்தான் பேட்ட என்ற இந்த திரைப்படம். புது ஜெனெரேஷன் இயக்குனராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தில் வேற லெவல்லில் காமிரா வொர்க் சினிமாட்டோக்ராபி கொடுத்து இருப்பார். அதனாலேயே நிறைய படங்கள் பெரிய பட்ஜெட் கொடுத்து கடைசியில் எடுத்த ஸீன்களையே திரும்ப திரும்ப எடுத்து கொடுத்த கதையாக இந்த படம் இல்லை (ஒரு எக்ஸாம்பில்க்கு சொல்லவேண்டும் என்றால் சமீபத்திய ஹாலிவுட் படம் பிக் பிரதர் இன் கல்கத்தா படத்தையே சொல்லலாமே !) இந்த படம் எனக்கு பேர்ஸனலாக பிடித்து இருந்தது. லொகேஷன் சாய்ஸ், சூப்பர் ஸ்டார் கெத்து. படத்தின் ஒரு ஒரு சண்டை காட்சியிலும் மாஸ் எல்லாமே வேற லெவல். கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணி இருக்கலாம் ஆனால் படத்துடைய மொத்த கதையையும் சேர்த்து பார்க்கும்போது டிஸப்பாயிண்ட்மேன்ட்டாக இல்லை. இந்த படம் கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூவில் ஒரு முக்கியமான மேஜர் ப்ரொடக்ஷன். புதுமைக்கு நிறைய இடம் கொடுத்த ஒரு பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் படம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதன் காரணமாதான் அல்சர் எளிதில் குணப்படுத்த முடியாதது. !!!
வயிற்றின் உள் சுவரில் உருவாகும் புண்கள் (ULCERS) குணமடைவது மிகவும் கடினம். காரணம், அவை மனித உடலில் மிகக் கடுமையான சூழலில் இருக்கின்றன எப்...
-
சுவாமி விவேகானந்தர் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் ஆற்றிய புகழ்பெற்ற உரையின் தமிழாக்கம் (சுருக்கமாகவும் விரிவாகவும்) க...
-
வறுமையில் வாழ்வது ஒரு மனிதரின் மனதையும் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கக்கூடும். உணவு, வீடு, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்க...
4 கருத்துகள்:
100 தடவை பாத்துருக்கேன், மீண்டும் பார்க்கும்போது நிறுத்த முடியல; வடிவேலு நடித்த தோல்வி பட காமெடியை புகழ்ந்த பார்த்திபன்!
நடிகர் வடிவேலு நடித்த படத்தின் காமெடியை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் ரஜினி - வடிவேலு காம்போ மிகவும் வரவேற்பை பெற்ற காம்போவாக இருந்தது. எல்லா படங்களிலும் வடிவேலுவை நடிக்க வைக்க இயக்குனர் போட்டு போட்டனர். காமெடியில் ஜாம்பவானாக வலம் வந்த வடிவேலு ’இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படம் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து ’இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்க்காத விதமாக தோல்வி அடைந்தது. இதற்கிடையே வடிவேலு அரசியலுக்குள் சென்றதால் சிறிது காலம் சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்தார். பின்னார் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்த வடிவேலுவிற்கு அப்படமும் பெரிய வெற்றியை தரவில்லை.
கதாநாயகனாக நடித்த வடிவேலு இனி காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார். இதையடுத்து, ‘தெனாலி ராமன்’, ‘எலி’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், இதில் எந்த படமும் வெற்றி பெறவில்லை. எல்லாம் தோல்வியை மட்டுமே சந்தித்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினி கடைசி படமான ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வடிவேலுவிற்கு புகழையும் தேடித் தந்தது.
தொடர்ந்து, பகத் ஃபாசில் நடித்த ‘மாரீசன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தார். சொல்லப்போனால் நடிகர் வடிவேலுவிற்கு தற்போது மார்க்கெட் இல்லை என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமல்லாமல், வடிவேலு கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வடிவேலு நடித்த ‘எலி’ படத்தின் காமெடியை நடிகர் பார்த்திபன் புகழ்ந்து பேசியுள்ளார்.
கலாட்டா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “எலி படத்தில் வடிவேலு வங்கியில் கொள்ளையடிக்க செல்லும் காட்சியில் அவரும் கிருஷ்ண மூர்த்தியும் செய்த காமெடியை நான் ஒரு 100 தடவை பார்த்திருப்பேன். மறுபடியும் அந்த காமெடியை பார்க்கிறேன், என்னால் நிறுத்தவே முடியவில்லை. அவர்கள் இருவரின் நடிப்பு நன்றாக இருக்கும்” என்றார்.
'தப்புசார் வேண்டாம்..' ரஜினிகாந்த் ஐடியாவை ஏற்க மறுத்த சுந்தர்.சி - நடந்தது என்ன?
அருணாச்சலம் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தின் யோசனை ஒன்றை இயக்குனர் சுந்தர்.சி நிராகரித்தது ஏன்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் அருணாச்சலம். 30 நாளில் 300 கோடியை செலவு செய்தால் ரூபாய் 3 ஆயிரம் கோடி கிடைக்கும் என்பதே படத்தின் மையக்கரு ஆகும்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் லாஜிக் பார்க்காமல் எடுக்கச் சொன்ன ஒரு காட்சி குறித்து கீழே விரிவாக காணலாம். இதுதொடர்பாக, படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
ரஜினி சொன்ன ஐடியா:
"அந்த ரூமை காலி பண்ற காட்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். திடீர்னு ரஜினி சார் சொன்னாரு, நான் படுத்துருக்கேன். கதைப்படி இரவு 12 மணி. அந்த மேனேஜர் வந்து எழுப்பட்டும். சார் உங்க டைம் முடிஞ்சுருச்சு. நீங்க ரூமை காலி பண்ணனும்னு சொல்லட்டும்.
தப்பா இருக்குது என்ற சுந்தர்.சி:
அப்போ நான் சார்கிட்ட சொன்னேன். என்ன சார் இது? ஒரு உடுப்பி ஓட்டல்ல கூட 100 ரூபாய் ரூம்ல தங்குனாலும் ஒரு மேனேஜர் வந்து எழுப்பி வெளியில போங்கனு சொல்ல மாட்டான். இது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல். இங்க போய் ரூமை விட்டு நீங்க வெளியில போகனும்னு சொன்னா தப்பா இருக்கும் சார். வேண்டாம்னு சொன்னேன்.
அப்போ அவரு சொன்னாரு. இந்த இடத்துல நாம சென்டிமென்ட்தான் பாக்கனும். லாஜிக் எல்லாம் பாத்தா சீன் எடுபடாது. நீங்க எடுங்க. யாராது இந்த சீன் வந்து என்னடா 5 ஸ்டார் ஹோட்டல்ல வந்து எழுப்புறானேனு தப்பித் தவறி வந்து கேட்டா? அப்போ நீங்க என்கிட்ட சொல்லுங்க. நான் உங்ககிட்ட தோல்வியை ஒத்துக்குறேனு சொல்லுனு ரஜினி சார் சொன்னாரு.
ஒருத்தர்கூட கேள்வி கேட்கல:
அவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும். எடுப்போம்னு எடுத்தேன். இந்த நிமிஷம் வரைக்கும் யாருமே கேட்டது இல்ல என்கிட்ட. ஏன்னா? 5 ஸ்டார் ஹோட்டல்ல ரஜினி சாரை மேனேஜர் எழுப்புனாரு. போக சொல்லுவாரு. தலைமகனே கலங்காதே பேக்ரவுண்ட்ல பாடல் போகும். படம் பாக்கும்போது ஆச்சரியமா இருந்துச்சு. என்ன ஒருத்தவங்க கூட இந்த மாதிரி கேள்வி கேட்க மாட்டோங்குறாங்கனு தோணுச்சு.
இவ்வாறு அவர் பேசினார்.
ரஜினி, செளந்தர்யா, ரம்பா, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரகுவரன், விசு, வி.கே.ராமசாமி, நிழல்கள் ரவி, கிட்டி, ஜனகராஜ், செந்தில், ராஜா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். கிரேஸி மோகன் வசனம் எழுதிய இந்த படத்தில் யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருப்பார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றி:
சாய் சுரேஷ் எடிட்டிங் செய்திருப்பார். தேவா இசையமைத்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும். ஆங்கிலத்தில் வெளியான ப்ரூவ்ஸ்டர் மில்லியன்ஸ் என்ற நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
பாட்ஷா, முத்து என்ற மாபெரும் வெற்றிப்படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த இந்த அருணாச்சலம் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 1997ம் ஆண்டு வெளியான இந்த படம் அப்போது இளம் இயக்குனராக இருந்த சுந்தர்.சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
தனது கடைசி படமாக ஜனநாயகன்
திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசியபோது நன்றின்னு சொல்லிட்டு போறவன் கிடையாது நான் நன்றி கடனை அடைச்சிட்டு போறவன் என்று சொன்னீங்க. கொஞ்சம் மனசாட்சிய தொட்டு சொல்லுங்க நீங்க நன்றின்னு சொல்லனும்னு உண்மையிலே நினைச்சா ஆர்பி சவுத்ரி என்று ஒரு புரொடியூசர் இருந்தாரு அவரைக் கூப்பிட்டு நன்றி ன்னு சொல்லி இருக்கணும். டைரக்டர் விக்ரமனை கூப்பிட்டு நன்றி சொல்லி இருக்கணும். உங்கள ஹீரோவா வச்சு மொத மொத வெளியில ஒரு ப்ரொடியூசர் உங்க கம்பெனி இல்லாமல் படம் எடுத்தாங்க இல்ல அந்த ப்ரொடியூசரை கூப்பிட்டு நன்றின்னு சொல்லி இருக்கணும்.
நீங்க யார் படத்தைப் பார்த்துட்டு அந்த படத்துல நடிச்ச அந்த ஹீரோ போலே நடிச்சு காட்டி அப்பா நான் நல்லா நடிக்கிறேன் என்ன வச்சு படம் எடுங்கப்பா என்று சொன்னிங்களோ அந்த ஹீரோவ பேரச் சொல்லியே அடுத்தடுத்து வளந்து எப்போ யார் பார்த்தாலும் நான் அவரோட தம்பி அவர் இல்லாம நான் இல்லைன்னு சொல்லியே வந்தீங்க ஆனா கடைசியில அவருக்கு ஒரு நன்றிங்க கூட சொல்லலையே மலேசியா ஞாபகம் வந்தால் என் நண்பர் அஜித் நடித்த பில்லா படத்தின் ஞாபகம் வந்துச்சு சொன்னீங்களே ஏன் நீங்க தலைவர்னு எப்போதும் சொல்லிக்கிட்டே இருந்த அந்த ஹீரோ நடிச்ச இன்னொரு படமும் இருக்கு அத சொல்லலையே. நன்றி மறந்திட்டு நன்றி கடனை அடைச்சிட்டு போறேன்னு சொல்றீங்க ஒன்னும் புரியல அது உங்களுக்கே சரின்னு பட்டா சரி.
பணம் பேர் ரெண்டையும் சினிமா தரும் அந்த சினிமால நீங்க இரண்டையுமே சம்பாதிச்சீங்க இறைவனால். அதையும் மீறி இப்போது ஒரு துறைக்கு நீங்க போயிருக்கீங்க அதுக்கு வாழ்த்துக்கள். ஆனா அந்த துறையை நீங்க தேர்ந்து எடுத்ததுக்கு காரணம் பணம் அல்ல... அதையும் தாண்டிய பதவி மோகம். மக்கள் சேவை செய்ய எத்தனையோ வழி இருக்கிறது.
நன்றாக யோசித்து பார்த்தால் பேட்ட படத்தில் சொல்லப்பட்ட கருத்து ஒன்றுதான், குடும்பத்துக்காக பழிவாங்க வேண்டும் குடும்பத்துக்காக சண்டை போட வேண்டும் எந்த பகையும் விட்டு வைக்காமல் முடித்து விட வேண்டும், பகையை விட்டு வைத்தால் எப்பொழுது வேண்டுமென்றாலும் நமது பகுதியில் வந்து தாக்கலாம் உஷாராக இருக்க வேண்டும், நல்ல ரிவென்ஜ் ஸ்டோரிதான், கதை ரொம்ப சிம்பிளானது, கேமரா வொர்க், நடிப்பு, இசை, ப்ரொடக்ஷன் வேல்யூ இதுபோன்ற விஷயங்கள் இந்த படத்துக்கு பிளஸ் பாயிண்ட் என்று சொல்லலாம் 🤦♂️🤦♂️🤦♂️
கருத்துரையிடுக