Monday, December 11, 2023

TO MAKE THIS MAGIC - TAMIL QUOTES - தமிழ் கருத்துக்கள் - (P-2)

 16. இந்த உலகத்தில் நேர்மையான பாதையை தேர்ந்தெடுத்து செல்வது பெரிய விஷயம் இல்லை. உயரமான நிலையை கடைசியில் அடைவதுதான் பெரிய விஷயம். 

17. ஒரு செயலை நெகட்டிவ்வாக யோசித்து செய்யாமல் போஸிட்டிவ்வாக யோசித்து செய்வது கடினமானதுதான். ஆனால் யோசிக்காமல் கண்மூடித்தனமான மனதுடன் செய்ய வேண்டாம். 

18. உங்களுடைய வெற்றி என்னைக்குமே அடுத்தவர்களுடைய தோல்விதான். இன்னொருவரை தோற்கடிக்காமல் உங்களை வெற்றி அடையவைக்க முடியாது. இதனால் எப்போதுமே வெற்றியின் அருமையை புரிந்துகொள்ளுங்கள். 

19. ஒரு முடிவு எடுப்பதற்க்கு முன்னால் கலந்து ஆலோசனை பண்ணிவிட்டு முடிவு எடுப்பது என்பது எப்போதுமே தவறான செயல் கிடையாது. 

20. இந்த உலகம் என்னைக்குமே உங்களை விட நீங்கள் செய்யும் செயல்களைத்தான் அதிகமாக நேசிக்கிறது. சோஷியல் மீடியாக்களை விட்டுவிட்டு காலத்துக்கும் நிலைக்கும் செயல்களை செய்ய முயற்சிகளை எடுங்கள். 

21. மக்கள் எல்லோருமே பேர்ஃப்ஃபேக்ட்டாக செய்து முடிப்பதை விட செயல்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பவர்களைத்தான் அதிகமாக விரும்புகின்றனர். 

22. வேல்யூ இல்லாத விஷயங்களை வாங்கிப்போட்டால் செலவை செய்து இடத்தை நிரப்பிவிடலாம் ஆனால் கண்டிப்பாக வேல்யூ இல்லாத ஒரு விஷயத்தை இலாபகரமாக விற்றுவிட முடியாது. உங்களுக்கு நஷ்டம்தான் கிடைக்கும். 

23. பொருளை வாங்கியவர்களின் விமர்சனங்களை கருத்துக்களை தெரிந்துகொள்ளாமல் அதே பொருளை உங்கள் யோசனைகளையும் முடிவுகளையும் மட்டுமே பொறுத்து வாங்குவது கண்டிப்பாக தவறானது. 

24. இன்ஸ்டண்ட்டாக இம்பல்ஸிவ்வாக முடிவு எடுப்பதை விட நிதானமாக நேரம் கொடுத்து யோசித்து முடிவு எடுப்பது எவ்வளவோ சிறந்தது. 

25. உங்களுடைய அணியில் இருப்பவர்கள் உங்களுடைய வலிமை என்பதை உங்கள் அணியில் இருக்கும் அனைவருக்குமே எப்போதுமே நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 

26. இங்கே எப்போதுமே உங்களுடைய வேலையை நீங்கள் தாமதப்படுத்தி செய்தால் வேலை கடைசியில் உங்களை வைத்து செய்துவிடும். 

27. இங்கே வாழ்க்கையில் எல்லோருமே இதுதான் இம்பார்டண்ட் என்று கற்பனையான விஷயங்களை எல்லாம் கட்டிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு எத்தனை சொன்னாலும் உண்மையில் எது இம்பார்ட்டன்டான விஷயம் என்று புரியவைக்க முடியாது. 

28. இந்த உலகத்தின் மிகப்பெரிய சாபங்கள் தானும் முன்னேறாமல் அடுத்தவர்களையும் முன்னேற விடாமல் இருக்கும் முட்டாள்த்தனமான தலைமையாளர்கள்தான். 

29. ஒரு சமூகம் நசுக்கப்படும்போது முட்டாள்தனங்கள் எல்லாமே சரியானது என்று சொல்லப்படுகிறது. கண்கள் முன்னால் அறிவியல் தவறு என்று சொன்னாலும் மனதை கல்லாக மாற்றிக்கொண்டு கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

30. உங்களுடைய வாழ்க்கையில் வெளிச்சம் வேண்டும் என்றால் உங்களுக்கான சூரியனை கொள்ளையடித்து உங்களுடைய வாழ்க்கைக்குள் கொண்டுவந்துவிடுங்கள். சூரியனின் பாரம் தாங்க சக்தியும் வெப்பம் தாங்க திறனும் உங்களுக்கு இருந்தால் போதுமானது. 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...