நான் தமிழ் சினிமாவில் நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் கண்டிப்பாக இந்த மாதிரி ஒரு ஸிம்பில்லாக இருந்தாலும் நல்ல பொடன்ஷியல் கொடுத்த படத்தை பார்த்தது இல்லை , இருவர் உள்ளம் என்ற சிவாஜி கனேஷன் அவர்கள் நடித்த ஒரு கிளாஸ்ஸிக் படத்துக்கு நேரடியான அடுத்த பாகம்தான் இந்த ஒன்ஸ் மோர் என்ற திரைப்படம் , விஜய் எப்போதுமே சந்தோஷமாக இருக்கும் நிறைய சொத்துக்கள் இருக்கும் பணக்கார இளைஞர் , இவருக்கு அப்பா எப்போதுமே நிறைய சப்போர்ட் என்பதால் வாழ்க்கையில் கவலைகள் இல்லாமல் பார்த்த பெண்களிடம் எல்லாம் பிரியமாக பேசிக்கொண்டு நட்பு வரை மட்டுமே இன்று பழகிக்கொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் முதல் அதிர்ச்சியாக வெளிநாட்டில் இருக்கும் அவருடைய அப்பா காலமாகிவிட்டார் என்று தகவல் தெரிந்துகொள்ள கம்பெனியின் நிலையையும் நம்பி வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் காப்பாற்ற அவருடைய அப்பாவாக நடிக்க செல்வம் என்ற ஆதரவற்ற இல்லத்தில் வாழும் மனிதரை உதவி கேட்டு அப்பாவாக நடிக்கவைக்கிறார் , ஒரு தோழி இவருடைய கலகலப்பான ரொமான்ஸ் பேச்சுக்களை காதல் என்று எடுத்துக்கொண்டு பின்னாட்களில் உண்மை தெரியவரும்போது அவசரப்பட்டு தோழி வாழ்க்கையை முடித்துக்கொள்ளவே அப்போது கூட காதல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள முடியாத கதாநாயகர் அவருக்கு உதவி பண்ணிய செல்வம் அவர்களின் காதலை சேர்த்துவைக்க முயற்சி பண்ணும்பொது நடக்கும் சம்பவங்களால் கொஞ்சம் கொஞ்சமாக காதலை தெரிந்துகொள்கிறார் , இனிமேல் அவருடைய வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன ? அதுதான் படத்தின் கதைக்களம் , ஒருவரிக்கதையை பின்னணி வைத்து கமேர்ஷியல் படமாக இல்லாமல் படத்தின் திரைக்கதை வலுவாக உள்ளது , பொதுவாக இயக்குனர் சந்திரசேகர் அவர்களின் படங்களில் இருக்கும் கிளைமாக்ஸ்ஸில் கதாநாயகர்களையே காலி பண்ணும் காட்சிகள் இந்த படத்தில் இல்லாதது ஒரு பெரிய விஷயம் , விஜய் , சிம்ரன் , மணிவண்ணன் , என்று சிறப்பான ஸ்டார் கெஸ்ட் இருந்தாலும் கௌரவ தோற்றத்தில் நமது நடிகர் திலகம் நம்முடைய மனதை கவருகிறார். ஜப்பானில் கல்யாண ராமன் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளிவந்த ஃபர்ஸ்ட் லாங் டைம் ஸீக்வல் எனக்கு தெரிந்து இந்த படம்தான். வெளிவந்த பாயிண்ட் ஆஃப் டைம்மில் இந்த படம் மிகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. நல்ல வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது . பாடல்கள் ரொம்பவே பிரமாதம். மொத்தத்தில் ஒரு பெஸ்ட் படம்.
No comments:
Post a Comment