Sunday, December 24, 2023

GENERAL TALKS - கற்பனைகளை வாங்குவதும் விற்பதும் எந்த வகையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்தாது !!

 இன்றைக்கு தேதிக்கு இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஃபோகஸ் பண்ண வேண்டும் நம்ம இளைஞர்களுக்கு வேலை செய்து சம்பாதிக்கவும் தொழில் செய்து முன்னுக்கு வரவுமே நிறைய சப்போர்ட் பண்ண வேண்டும். இருந்தாலும் இப்போது இருக்கும் புதிய கலாச்சாரம் கண்டிப்பாக இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு சப்போர்ட் பண்ணாது என்று நினைக்கிறேன். அது என்ன கலாச்சாரம் என்று கேட்கின்றீர்களா ? கற்பனைகளை வாங்கவுமே விற்கவுமே இருக்கும் ஒரு கலாச்சாரம். இந்த கிரிப்ட்டோ கரன்சி என்றால் கணக்குகளை மட்டுமே ஒரு விலை கொடுத்து வாங்குவது விற்பது. இதனால் உலகம் முழுக்க கம்ப்யூட்டர்கள் , பிராஸஸர்கள் , கிராபிக்ஸ் கார்டுகளுடைய விலை அதிகமானதை பார்க்கலாம். இந்த விஷயத்தினால் அல்லது இந்த விஷயத்தை தொழிலாக செய்வதால் உண்மையான உலகத்துக்கு என்ன கிடைக்கிறது ? மக்களுக்கு போதுமான உணவு கிடைக்குமா ? இல்லை , ஒரு மருத்துவமனை கட்டிடம் கிடைக்குமா ? இல்லை. மக்களுக்கு உடைகள் , பொருட்கள் , இன்ஃபர்மேஷன் என்று எந்த வகையான சேவைகளையும் இந்த தொழில்நுட்பம் செய்யவில்லை என்றால் இந்த தொழில்நுட்பததுக்காக எதுக்கு உலகம் முழுவதும் உற்பத்தி ஆகக்கூடிய மின்சாரத்தின் (127 டேரா வாட் - 30-01-2023 இன் கணக்கெடுப்பு) பெரும் பகுதி கிரிப்டோகரன்சியை கண்டுபிடிக்கவும் விற்கவும் வாங்கவுமே செலவு செய்யப்படவேண்டும். இந்த வகையில் பயன்படுத்தப்பட்ட நிலக்கரி வேஸ்ட்தான். இந்த மின்சாரத்தை மிச்சம் பண்ணினால் உலகம் முழுக்க நிறைய விவசாய தேவைகள் மற்றும் தொழில் துறை தேவைகளுக்கு பயன்படுத்தலாம். கிராமங்களுக்கு இலவசமாக பல வருடங்களுக்கு மின்சாரம் கொடுக்கலாம். ஆனால் மிஞ்சி மிஞ்சி போனால் இந்த கற்பனை விற்றல் வாங்கல் உலகத்துக்கு எதுவுமே பண்ணியது போல தெரியவில்லை. உலக பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை பற்றி ஒரு பகுதி எழுதும்போது கிரிப்டோ எந்த வகையில் பிரயோஜனப்படுகிறது என்றும் தெரிந்துகொள்ளுங்கள் என்று பல கட்டுரைகள் இணையத்தில் இருக்காதான் செய்கிறது ஆனால் இவைகள் நடைமுறையில் நம்முடைய பொருளாதாரத்துக்கு பிரயோஜனமாக இருந்ததா என்பது கண்டிப்பாக நீங்களுமே யோசிக்க வேண்டும். இன்னொரு பக்கம் AI உருவாக்கிய இணைய பேஜ் இன்ஸ்ட்டாகிராமில் வருமானத்தை குவித்துக்கொண்டு இருக்கிறதாம். மக்கள் உண்மையான பொருட்களை விற்று வாங்குவதை விட்டுவிட்டு இதுபோன்ற கற்பனைகளை மட்டுமே விற்று வாங்கினால் உண்மையாக வேலை செய்தவன் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவான் ஆனால் வேலையே செய்யாதவன் சந்தோஷமாக சம்பாதித்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்துகொண்டு இருப்பான். இதுபோல நிலை இன்னும் தொடர்ந்துகொண்டு இருந்தால் உலகம் முழுக்க போர்கள் நடந்து உலகமே சுடுகாடாக மாறிவிடும். கண்டிப்பாக இதுபோன்ற விஷயங்களை தடுக்க வேண்டும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...