Monday, December 11, 2023

TO MAKE THIS MAGIC - TAMIL QUOTES - தமிழ் கருத்துக்கள் ! (P-1)

 


1. இந்த உலகத்தில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்யவும் காரணங்கள் தேவை இல்லை. 
2. ஒரு விஷயத்தில் தலைமையில் இருக்கும்போது கண்டிப்பாக தோல்விகளை தாங்கிக்கொள்ளவும் வலிகளை அனுபவிக்கவும் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் !
3. பொதுவாக மனிதர்கள் எப்போதுமே உங்களை நம்ப மாட்டார்கள். உங்களுடைய வெற்றியை நீங்கள் அடைந்தால் மட்டும்தான் உங்களை நம்புவார்கள்.
4, எப்போதுமே நிறைய பேரை உங்களுக்காக வேலை பார்க்க வைக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டு ஒரு பொதுவான முன்னேற்ற பாதையில் எல்லோரையும் செல்ல சொல்லுங்கள். 
5. பயந்து இருப்பதால் என்ன நடந்துவிடப்போகிறது ? எங்கே தவறு என்பதை கண்டறிந்து சரிசெய்யுங்கள். பாதி பிரச்சனை முடிந்துவிடும். 
6. இங்கே மற்றவர்களுக்கு பிடித்தவர்களாக இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை. மற்றவர்கள் மதிப்பு கொடுக்கும் மனிதனாக மாறுங்கள். 
7. உங்களுடைய அறிவை மட்டுமே நம்பி செயலில் இறங்கும்போது கடைசிவரைக்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்தால் பிரகாசமான வெற்றி வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது.
8. கோபம் எப்போதுமே மற்றவர்களை காயப்படுத்த பயன்படுத்தப்படுவது அல்ல. கோபம் என்பது மற்றவர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுவது.  
9. நல்லவர்கள் எந்த விஷயத்தையும் செய்யவில்லை என்றால் கெட்டவர்கள் மிகவும் சுலபமாக வென்றுவிடுவார்கள். 
10. தொடர்ந்து எழுதவேண்டும் என்றால் தொடர்ந்து நிறைய விஷயங்களை படிப்பதும் அவசியமாகிறது. 
11. வேலையை செய்யும்போது வெற்றிகரமாக வேலை முடிந்துவிடும் என்ற நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் காலம் எடுக்கும் முடிவுகள் நமது கைகளில் இல்லை. 
12. உங்களுடைய நம்பிக்கைகளுக்காக உயிரை கொடுக்க நினைக்காதீர்கள் , உங்களுடைய நம்பிக்கை தவறானதாக இருக்கலாம். 
13. இந்த உலகத்தில் நிறைய சந்தோஷங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. இந்த சந்தோஷங்களை அடைய உங்களின் அறிவை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
14. இந்த உலகத்தில் இன்றைக்கு ஈஸியாக பண்ணமுடியும் விஷயங்கள் பின்னாட்களில் கஷ்டமாக மாறிவிடலாம் அதனால் கவனமாக இன்றைய வெற்றிகளை இன்றைக்கே அடைந்துவிடுங்கள். 
15. இன்றைக்கு உங்கள் வாழ்க்கையின் இருளை இன்னொருவர் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனால் என்றைக்கு உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சூரியனை கொண்டு வந்தாலும் அந்த இருள் மறைந்துவிடும் என்றும் உங்களை தடுப்பவர்கள் ஆயிரம் பேர் வந்தாலும் அந்த சூரியனை மறையவைக்க முடியாது என்றும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...