Thursday, December 7, 2023

GENERAL TALKS - கால வரம்பு என்பது கண்டிப்பாக தேவை - TAMIL ARTICLE




 பொதுவாக நீங்கள் எந்த செயல்களை செய்ய நினைத்தாலும் அந்த செயல்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு செயலை செய்ய கால வரம்பு இல்லை என்றால் அந்த செயலை பிராக்டிக்கலாக செய்யும்போது இண்டெக்ரேஷன் பத்தாது. இன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் செய்ய விரும்பும் செயலில் அடுத்தடுத்த 200 ஸ்டெப்கள் என்ன ? பிளான் A என்ன ? பிளான் B என்ன ? பிளான் C என்ன ? பிளான் D என்ன ? என்று எல்லாமே செய்துவிடுங்கள். ஒரு எக்ஸ்ஸாப்பில்க்கு ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் சாப்பாடு சாப்பிடுவதை எடுத்துக்கொள்ளலாமே , சாப்பாடை குறைவாக சாப்பிடுவது உடல்நலத்துக்கு நன்மையை கொடுக்காது , அதே நேரத்தில் சாப்பாடை தேவையான அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதோ அல்லது அதிக நேரம் பயன்படுத்துவதோ அதுவுமே பிரச்சனை ஆனதுதான். இந்த வாழ்க்கை நான் நிறைய போஸ்ட்களில் சொன்னது போல ஒரு மிகப்பெரிய கொடூரமான போர்க்களம். இங்கே உங்களுக்கு சப்போர்ட் என்று 10 வருடம் வரைக்கும் கூட ஆட்கள் இருப்பார்கள் ஆனால் இவர்கள்தான் உங்களுடைய வாழ்க்கையின் பார்ட்னர் என்று தப்பாக முடிவு பண்ண கூடாது. வெறும் ஒரு செகண்ட் போதும் வாழ்க்கை அவர்களின் வலது கையால் உங்கள் நெஞ்சை கத்தியால் குத்த வைக்கும். இங்கே எல்லா விஷயங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும். இங்கே முட்டாள்கள் போல சொப்பு விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டு இருக்க கூடாது, அறிவுக்கூர்மை நிறைந்த சாதனையாளர்களை போல நேரடியாக அடித்து நொறுக்க வேண்டும். இந்த வாழ்க்கையில் யாரையுமே நம்பக்கூடாது என்பது எனது கருத்து அல்ல, வெறும் 60 முதல் 100 ஆண்டுகள் வரைக்கும்தான் இந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நமது மண்டைக்குள் இருக்கும் மூளையை கொஞ்சமாவது பயன்படுத்தி அடுத்த கட்ட வேலைகளை பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இங்கே நமது மூளைக்குள் இருக்கும் கருவிகளை தடுக்க நிறைய காரணிகள் (ஃபேக்டர்ஸ்) இருக்கிறது. அவற்றில் ரொம்ப முக்கியமான காரணிதான் காரணம் இல்லாமல் அதிக நேரம் அல்லது கால வரையில்லாமல் ஒரு வேலையை செய்வது. உங்கள் காலத்துக்கு மதிப்பு இல்லை என்று முட்டாள்தனமாக நினைக்க வேண்டாம் , இன்றைக்கு என்னுடைய கணக்குப்படி உங்களுக்கு 24 மணி நேரம் முழுமையாக உயிரோடு இருக்க வேண்டும் என்றால் 300 ரூபாய்க்கான தண்ணீர் / 220 ரூபாய் அளவுக்கான சாப்பாடு / உடைகள் / இடத்துக்கான வாடகை / 30 ரூபாய் அளவுக்கான மின்சாரம் / மற்றும் 100 ரூபாய் அளவுக்கான பொருட்கள் என்று ஒரு தினத்துக்கு குறைந்தது ஒரு மனிதனுக்கு 1000 ரூபாய் தேவைப்படுகிறது. உங்களுடைய வாழும் நேரத்தையே நீங்கள் காசு கொடுத்துதான் வாங்குகிறீர்கள் என்பதால் உங்களுடைய வாழ்க்கையை கவனமாக வாழ வேண்டும், உங்களிடம் ஐந்து இலக்க தொகை இருந்தால் என்ன பண்ண வேண்டும் என்றும் யோசிக்க வேண்டும் , அதே சமயம் நீங்கள் வெறும் பூச்சியமாக இருந்தாலும் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று முடிவு எடுக்க வேண்டும், வாழ்க்கை இப்படித்தான் வேலை செய்யும், இந்த வாழ்க்கையின் ஸ்பேஸ்டைம் விதிமுறைகளை மாற்றிவிடலாம் என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ? 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...