ஒரு படத்துடைய வெற்றி பின்னாட்களில் அந்த படத்துக்கான மதிப்பு மரியாதை அதிகரிப்பதை பொறுத்து அமையாது. (மயக்கம் என்ன ? . அன்பே சிவம் , ஆயிரத்தில் ஒருவன்) - வெளிவந்த அந்த நாளில் எப்படி பாக்ஸ் ஆபீஸ் கொடுத்து வெற்றி அடைந்தது என்பதை பொறுத்துதான் அமையும் !! (பொல்லாதவன் , லவ் டுடே , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்) . இப்போது இந்த படங்களுக்கு விமர்சனங்கள் முக்கியமா ? இது பற்றி இணையத்தில் நிறைய கருத்துக்களை பார்க்கும்போது விமர்சனங்கள் பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறிவிட்டது என்றுதான் சொல்ல முடியும். அடிப்படையில் ஒரு படம் நமக்கு பிடிக்காது என்றாலும், இன்னும் சொல்லப்போனால் அந்த படத்தையே வெறுக்கிறேன் என்றாலும் பாக்ஸ் ஆபீஸ்ஸில் வெளுத்துக்கட்டி வெற்றி அடைந்து சக்கப்போடு போட்டுவிடும். எனக்கு அப்படி ஒரு ஆச்சரியமான படமாக இருந்த படம் BEAUTY AND THE BEAST -2017 வேர்ஷன் !! இந்த படத்துல அப்படி என்ன இருக்குன்னு பாக்ஸ் ஆபீஸ் தாறு மாறாக கலெக்ஷன் பண்ணி இருக்கிறது என்று இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியாவில்லை. இந்த படம் சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நானும் இந்த படத்தை விட பெஸ்ட் படம் என்று 1000 படங்களை முன்வைக்கலாம் ஆனால் இந்த படம் சக்ஸஸ் ஆக காரணம் என்ன ? இந்த படத்துக்கான டார்கேட் ஆடியன்ஸ்ஸை பிடிப்பதுதான் !! இது சம்மந்தமாக ஒரு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கு என்ன விஷயம் தேவை என்றால் இங்கே என்னுடைய ஃபைனல் கருத்து என்னவென்றால் 3 அடிப்படையான விஷயங்கள் தேவை
1. சிறப்பான பிலிம் மேக்கிங் !
2. அளவுக்கு அதிகமான ஆடியன்ஸ் சப்போர்ட் !
3. மிகப்பெரிய வெளியீடு மற்றும் மார்க்கேட்டிங் !
= பாக்ஸ் ஆஃப்பிஸ் வெற்றி !!!
வேறு எதுவுமே சொல்வதற்கு இல்லைப்பா !!
இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள். அடுத்த போஸ்ட் படிக்கவும், நெக்ஸ்ட் பேஜ் கிளிக் பண்ணுங்கள் !!
No comments:
Post a Comment