சென்னையில் அவருடைய குடும்பத்தோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார் ஓய்வு பெற்ற சினிமா சண்டைப்பயிற்சி நிபுணர் பவர் பாண்டியன் , ஒரு கட்டத்தில் அவரை சுற்றி நடக்கும் அநியாயங்களை நேரடியாக தட்டிக்கேட்க சண்டைபோட்டபொது அது பெரிய தகராறு என்று மாறுகிறது. இந்த விஷயம் காவல்துறை வரைக்குமே செல்லவே அவருடைய மகன் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் யோசித்துக்கொண்டு இருந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து வெளியே சென்றுவிடுகிறார். அவருடைய இளம் வயதில் காதலித்த பூந்தென்றலின் நினைவு வரவே சோசியல் மீடியாக்களின் மூலமாக பூந்தென்றலை கண்டுபிடித்து அவரோடு பேசிக்கொண்டு நேரத்தை செலவு செய்துகொண்டு இருக்கிறார். இந்த படம் ஒரு கியூட்டான ஸ்லைஸ் ஆஃப் லைஃப் ரொமான்டிக் டிராமா ! ராஜ்கிரண் மற்றும் ரேவதி அவர்களுடைய கதாப்பத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்துகொடுத்து இருக்கிறார்கள். நம்ம தமிழ் சினிமாவுக்கே உரிய அந்த மிக்ஸ் ஆஃப் ஜேனர்ஸ் கான்ஸெப்ட் இந்த படத்தின் திரைக்கதைக்கு கண்டிப்பாக ஹெல்ப் பண்ணி இருக்கிறது என்றே சொல்லலாம் , சப்போர்டிங் ஆக்டர்ஸ் , இசை மற்றும் பாடல்கள் , கோரியோகிராபி என்று எல்லா விஷயங்களுமே எதார்த்தமான இந்த படத்தின் கதையை நன்றாகவே மேம்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்த படம் ஃப்யூச்சர்ரில் வெளிவந்த தொண்ணூற்று ஆறு திரைப்படத்துக்கு இன்ஸ்பிரேஷன்னா என்று கேட்டால் அதுதான் இல்லை. இந்த படம் தனித்து ஒரு நல்ல ஃபேமிலியோடு பார்க்கும் படமாக வெற்றி அடைந்து இருக்கிறது. இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !
No comments:
Post a Comment