Friday, December 22, 2023

GENERAL TALKS - விமர்சனத்தை வைத்து தலையில் கட்டும் கலை !!


இன்றைய தேதிக்கு இணையத்தில் இருக்கும் விமர்சனங்களை கண்டிப்பாக நம்ப முடியாது. சமீபத்திய ரேஸ்ட்டாரன்ட்கள் எல்லாம் அவர்களுடைய ஹோட்டல் சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று நீங்கள் விமர்சனம் பதிவு பண்ணினால் சுமாராக 500/- ரூபாய் மதிப்பு உள்ள சாப்பாடு உங்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று சொல்லும் மார்க்கேட்டிங் ஐடியாவை பார்க்கலாம். ஒரு வகையில் நிஜமாகவே சாப்பாடு நன்றாக இருந்தால் அந்த உணவகத்துக்கு நல்ல மார்க்கேட்டிங் தேவைப்பட்டு இருக்கிறது. நிறைய கஸ்ட்டமர்கள் அந்த இடத்துக்கு வருகை தந்து இருக்கிறார்கள் அந்த இடத்தின் சாப்பாடு சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதுவே ஒரு வளர்ந்துவரும் ஹோட்டேல் பிஸினஸ்க்கு நல்ல விஷயம். இப்போது நான் பேசப்போகும் பிரச்சனை இந்த மாதிரியான கடைகளை பற்றி அல்ல. காடுகள் வலைத்தளம் போன்ற இன்டர்நெட் சேல்ஸ் வெப்சைட்களை பற்றிதான். இவைகள் பயங்கரமாக தரமற்ற ப்ராடக்ட்களை கொடுக்கிறார்கள். ப்ராடக்ட்கள் என்று சொல்வதை விட குப்பைகள் என்றே சொல்லலாம். ஒரு தரமான கம்பெனி ஐட்டம் என்று ஒரு பொருளை விற்று 1000/- இலாபம் பார்க்க முடியும் என்றால் அந்த கம்பெனி ப்ராடக்ட்களை விட்டுவிட்டு தரமற்ற பிளாஸ்டிக் ப்ராடக்ட்களை விற்று 3000/- வரை இலாபம் பார்க்க முடியும் என்றால் அந்த தரமற்ற ப்ராடக்ட்களை விற்றுவிடுகிறார்கள். கடைசியில் வாங்கிய நண்பர்கள் இந்த குப்பையை வாங்கியதுக்கு ஒரு கல்லை வாங்கி இருக்கலாம் அதாவது பிரயோஜனமாக இருந்து இருக்கும் என்று ஒரு முடிவு எடுக்கிறார்கள் !! அடிப்படையில் என்ன நடந்தது !! இப்போது இந்த விஷயத்தை ரொம்ப சிம்பிளாக சொல்லவேண்டும் என்று நினைத்ததால் ஒரு தரமான ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியை எடுத்துக்கொள்ளலாம். பல வருடங்களுக்கு முன்னால் இந்த வெப்சைட் அவர்களோடு வியாபார ஒப்பந்தம் பண்ணிய பின்னர் அவர்களுடைய தரமான ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் எப்போதுமே எங்களின் வெப்ஸைட்டில் எக்ஸ்க்ளுஸிவ்வாக கிடைக்கும் என்றும் பிராண்ட் தயாரிப்பாளர்களின் நேரடி நம்பிக்கை என்றும் கதையை விட்டு தரமான ப்ராடக்ட்ஸ்களை பேக்கேஜ் பண்ணி கஸ்டமர்களுக்கு அனுப்பி கஸ்டமர்களின் நன்மதிப்பை பெற்றுவிடுகிறார்கள். இப்போது கடையின் ஷோரூம் சென்று வாங்குவது என்பதை விட ஆன்லைன்னில் வாங்கிவிடலாம் என்று ஒரு நிலைமை வந்தபோது அந்த தரமான ப்ராடக்ட்கள் வெப்ஸைட்களில் இல்லை. மாறாக பிளாஸ்டிக் , இரும்பு , செம்பு எல்லாம் கலந்த மொக்கையான குப்பைக்கள்தான் பாதி விலைக்கு கிடைக்கிறது. ஒரு உதாரணத்துக்கு சொல்லவேண்டும் என்றால் உங்களுக்கு சான்டிஸ்க் மெமரி கார்டு மாதிரி தரமான நீடித்து உழைக்கும் மெமரி கார்டு வேண்டும் என்று ஆர்டர் பண்ணும்பொது புளூபிஷ் மெமரி கார்டு என்று உங்களுக்கு பேரே தெரியாத கம்பெனியில் இருந்து எல்லாம் மெமரி கார்டு பாதிவிலைக்கு கிடைக்கும் ஆனால் கம்பெனி ஐட்டம் கிடைக்காது என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதை விட மோசமான விஷயம் எங்கேயுமே பயன்படுத்த முடியாது என்று தெரிந்தும் 1000 ரூபாய் , 2000 ரூபாய் , 3000 ரூபாய் டிஸ்க்கவுண்ட் கூப்பன்களை விற்பதுதான். இந்த கூப்பன்களை வாங்கியவர்களால் வெப்ஸைட்டின் மூலை முடுக்கு என்று எங்கேயும் பயன்படுத்த முடியாது !! நீங்கள் அனுப்பிய பணம் இந்த வெப்சைட் கம்பெனியால் சாப்பிடப்பட்டு உங்களுடைய காசு கரைந்துவிட்டது. உங்களுக்கு கண்டிப்பாக உங்கள் பணம் கிடைக்காது என்றால் என்ன கொடுமை !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...