இங்க்லிஷ் ரொமான்டிக் படங்கள் என்றால் உங்களுக்கு பிடிக்குமா அப்படியென்றால் இந்த படத்தையும் நீங்கள் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம், கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழும் ஒரு அப்பா அவருடைய மகளுக்கு அவருடைய காதலித்த நாட்களை சொல்லி கிளைமாக்ஸ்ஸில் என்ன நடந்தது என்று ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைக்கிறார் அப்படித்தான் படம் நகர்ந்துகொண்டு இருக்கிறது. நல்ல கேரக்டர் டிசைன் , சிறப்பான ஆக்டிங் மற்றும் பெஸ்ட் ப்ரோடக்ஷன் வேல்யூவோடு நல்ல காமிரா வொர்க் என்று நிறைய காரணங்கள் இருந்தாலும் பொதுவான ஹாலிவுட் சினிமா கலாச்சாரத்தில் நன்றாகவே எடுத்து இருக்கும் படம் இந்த டெஃப்னட்லி மேபி என்பதால் ஒரு மீடியம் ரொமான்டிக் காமெடி பிலிமாக இந்த படம் வெளிவந்த காலத்தில் நல்ல கலெக்ஷன்னை கொடுத்தது என்றால் கண்டிப்பாக மிகை ஆகாது. இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். இந்த வலைப்பூவை கண்டிப்பாக சந்தா பண்ணிக்கொள்ளுங்கள் !! இப்போதைக்கு டெவலப்மேன்ட்டில் இருக்கும் வலைப்பூ GOINPAST.BLOGSPOT.COM - க்கு சப்ஸ்க்ரைப் பண்ணிக்கொள்ளுங்கள் !!
1 கருத்து:
வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் இந்த சங்கடத்தை அனுபவித்திருப்பீர்கள். நாம் ஒன்று..கைலி கட்டி ஹாயாக வீட்டில் அமர்ந்திருப்போம். அல்லது வெளியே சென்று அல்லோல கல்லோலப்பட்டு வீட்டு வாசலை அப்போதுதான் மிதித்திருப்போம். அந்த நேரத்தில் விருந்தாளிகள் வந்துவிடுவர். ஏதாவது விசேஷத்துக்கு பத்திரிகை வைப்பதற்கு வந்திருப்பார்கள் என்று வையுங்கள். பத்திரிகையோடு ஸ்வீட்பாக்ஸ் கொண்டு வந்திருந்தாலும் பரவாயில்லை என்று மன்னிக்கலாம். ஆனால் மஞ்சா குங்கத்தோடு வெறும் பத்திரிகையை கொடுப்பர். மஞ்சாவை அள்ளி சாப்பிடத்தான் முடியுமா! அல்லது குங்கத்தை குடிக்கத்தான் முடியுமா! ஆனாலும் அவர்களை நல்லமுறையில் உபசரித்து அனுப்புவது கடமையாகிவிடும். அடலஸண்ட் வயதில் இருந்தபோது அம்மா என்னை உசுப்புவார். 'டேய் போடா.. போய் சர்பத்து கிர்பத்து ஏதாச்சும் வாங்கினு வா' என்று. நான் அம்மாவின் முகத்தையும் விருந்தாளிகளின் முகத்தையும் மாறி மாறி பார்ப்பேன். அம்மாவைப் பார்க்கும்போது 'இந்த மொகரக்கட்டைங்களுக்கு சர்பத் ஒரு கேடா!?' என்று கேட்பது போலவும், விருந்தாளிகளை பார்க்கும்போது ' வாயில கொழுக்கட்டையாடா வச்சினு இருக்கீங்க! வாயத்தொறந்து சொல்லுங்களேண்டா.. நாங்க இப்பத்தான் கூல்ட்ரிங்க் சாப்டு வந்தோம்! உங்களுக்கு எந்த சிரமமும் வேணாம்.." என்று அவர்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பது போலவும் எனது பார்வை இருக்கும்.
ஆனாலும் 'குடுத்தா குடிப்போம்' என்கிற மாதிரியான உடல் பாவணையில் 'வேணாம் வேணாம்' என்று உதட்டளவிற்கு சொல்வார்கள். நான் அப்படியும் காசு எடுத்துக்கொண்டு வாசற்படியிலேயே நிற்பேன் 'இப்பவாச்சும் அடிச்சு சொல்லுங்களேண்டா.. எதுவும் வானாம்னு!' என்று மனதளவில் ஏங்குவேன். ஆனால் அதற்கு வாய்ப்பே இருக்காது. சில்லென்று ஐஸ் போட்டு மிரிண்டாவையோ மாஸாவையோ உரிஞ்சி குடிக்காமல் அந்த இடத்தை விட்டு நகரமாட்டார்கள் இந்த வீணாப்போன விருந்தாளிகள்
கருத்துரையிடுக