சனி, 9 டிசம்பர், 2023

GENERAL TALKS - WHEN YOU SUPPORTING ONLY WHAT YOU LIKE - இந்த விஷயத்தையும் கவனிக்கவும் !!



இந்த உலகத்தில் உங்களுடைய விருப்பத்துக்கு மட்டுமே சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருப்பது ஒரு பிரச்சனை என்றால் இன்னொருவருடைய விருப்பத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்வது அதை விட பெரிய பிரச்சனை. இந்த உலகம் ஒரு வானவில் போன்றது , வானவில்லின் 7 வண்ணங்களில் ஒரு வண்ணம் உங்களுக்கு பிடிக்காத வண்ணம் என்றும் இப்போதே அதனை எடுத்துவிட வேண்டும் என்று சொல்வது நன்றாகவா இருக்கும் ? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுடைய பேர்ஸனல் மற்றபடி இன்னொருவர் தேர்ந்தெடுக்கும் விஷயத்தால் யாருக்குமே எந்த பாதிப்புமே இல்லை என்னும்பட்சத்தில் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. இந்த வாழ்க்கை என்னும் ஸ்பேஸ்-டைம் இணைப்பில் உங்களுடைய உயிர் கடைசிவரைக்குமே இருக்கப்போவது கிடையாது. வெறும் 30 முதல் 40 வருடங்கள் வரைக்கும்தான் உங்கள் வாழ்க்கை. உங்களுடைய வயதான காலத்தில் உங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவமே இருக்காது அப்படி இருக்கும்போது எப்படி உங்களால் இப்போது இன்னொருவருடைய விருப்பத்தை தவறு என்று சொல்ல முடிகிறது. உங்களுடைய லைக் பட்டன் இன்னொருவருடைய டிஸ்லைக் பட்டனாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மொத்தமாக தெரிந்துகொள்ளாமல் உங்களுடைய கமெண்ட்ஸ்ஸை கொட்டிவிட கூடாது. உங்களுடைய வார்த்தைகளில் என்னைக்குமே கவனம் வேண்டும். காரணம் என்னவென்றால் கொடுத்த வார்த்தையை மறுபடியும் வாங்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

generation not loving music