Tuesday, December 5, 2023

CINEMA TALKS - NANBAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


இப்போதுதான் யாராவது தமிழ் சினிமாவை பார்க்க ஆரம்பிக்கிறார்கள் என்றாலும் கூட மற்ற படங்களில் இருந்து தனித்து நின்று சாதித்து காட்டும் படம் நண்பன் , ஒரு ஃபைட் ஸீன் இல்லாத விஜய் படத்தை பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய கமர்ஷியல் விஷயங்களை கண்டெய்னர் போல கொண்டு வந்து இறக்காமல் படத்துடைய கதை என்னவோ அந்த கதைக்கு தேவையாகவே எல்லா காட்சிகளுமே அமைக்கப்பட்டு உள்ளது. ஹிந்தியில் வெளிவந்த 3 இடியட்ஸ் என்ற படத்துடைய நேரடியாக வெளிவந்த அடாப்ஷன்தான் இந்த நண்பன் என்ற திரைப்படம், இந்த படம் ஃபிரண்ட்ஷிப்புடைய வேல்யூக்ககளையும் அதே நேரத்தில் நம்ம கல்வி பயிற்றுவிக்கும் முறையில் இருக்கும் முக்கியமான பிரச்சனைகளையும் சொல்லுகிறது. ஷங்கர் அவர்களின் படைப்பு என்பதால் ஸாங்க்ஸ் எல்லாமே சொல்லவே வேண்டாம். படத்துக்கு சம்மந்தமே இல்லாமல் போனாலும் ஸாங்க்ஸ் எல்லாமே சூப்பர் ஹிட்தான். இந்த படத்துடைய கதைக்கு வருவோம் , பஞ்சவன் பாரிவேந்தன் என்று கல்லூரிக்கு புதிதாக சேரும் மாணவர் எல்லா பாடங்களையுமே மனப்பாடம் பண்ணி எக்ஸாம்மில் வெற்றி அடைய வேண்டும் என்று மட்டுமே மாணவர்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பதை புரிந்துகொள்ளவுமே மற்றவர்களிடம் இருந்து தனித்து இருந்து அனைத்து சப்ஜெக்ட்களையும் புரிந்து படித்து எக்ஸாம்களில் முன்னணியில் வருகிறார். இவருடைய நண்பர்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணினாலும் கடைசிவரைக்கும் புரியாத புதிராகவே இருக்கிறார். வாழ்க்கையில் கட்டுப்பாடுகளையும் அதிகாரங்களையுமே நம்பும் கல்லூரி முதல்வர் விருமாண்டி சந்தனம் அவர்களுடைய நேரடியான எதிர்ப்புகளையும் மீறி எப்படி நமது கதாநாயகர்களும் நண்பர்களும் சாதித்து காட்டுகிறார்கள் என்பதே படத்தின் கதைக்களமாக உள்ளது. பின்னணி இசை வேற லெவல்; படத்தின் காட்சிகளை ஒரு படிக்கு மேலே கொண்டு போகிறது. நண்பன் படம் 1999 களின் இறுதி காலகட்டத்தில் நடப்பதால் அந்த காலத்து ரேட்ரோ ரெஸ்பெக்ட் ரேஃப்பரன்ஸஸ் இருப்பதும் படத்துக்கு இன்னுமே ஒரு பிளஸ் பாயிண்ட். பெரிய ப்ரொடக்ஷன் வேல்யூ கொடுத்து இருப்பது படத்துக்கு இன்னும் பிளஸ் பாயிண்ட். விஜய் , ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ரொம்ப பெஸ்ட்டான நடிப்புத்திறன் கொடுத்து இருக்கிறார்கள். சப்போர்டிங் கேரக்டர்ஸ்ஸாக வரும் சத்யராஜ் , சத்யன் , இலியானா என்று மற்றவர்களின் நடிப்புத்திறனும் இந்த படத்தில் பிரமாதமாகவே இருக்கும் என்பதால் கதாப்பாத்திரங்கள் வேறு ஒரு டைமன்ஷன்னில் இருப்பது போல நடந்துகொண்டாலும் நன்றாக கதையை புரிந்துகொள்ள முடிகிறது. ரொம்பவுமே ரசிக்கும்படியான படம் கண்டிப்பாக பாருங்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...