Monday, December 18, 2023

CINEMA TALKS - SUNDARA PANDIYAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இங்கே நம்ம கிராமத்து லோக்கல் பகுதிகளில் மற்றும் டவுன் பகுதியில் நடக்கும் ஒரு எதார்த்தமான காதல் கதையாக இந்த படம் இருக்கிறது  ,கதாநாயகன்  சுந்தர பாண்டியன் பெரிய குடும்பத்தில் பிறந்த பையனாக மதிப்புடனும் மரியாதையுடனும் ஊர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் ஒரு இளைஞர், இவருடைய நண்பருக்கு காதலிக்க உதவி செய்யபோய் இவருக்கு அந்த காதல் ஸெட்டாகிவிட காதலை விட்டுக்கொடுத்த நண்பருக்கு ஒரு கோபம்  இருந்துகொண்டு இருக்கிறது, இப்போதுதான் கதையில் எதிர்பாராத திருப்பம் , காரணம் இல்லாமல் ஒரு சின்ன ஆக்ஸிடன்ட்டாக பஸ்ஸை விட்டு வெளியே விழுந்து காலமான ஒரு இளைஞரை தாக்கியதாக சுந்தர பாண்டியன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கைது வரை செல்லவே காதலித்த பெண்ணின் குடும்பத்திலும் திருமணம் அவசர அவசரமாக நடத்தப்படும் நிலைக்கு வருகிறது. சுந்தர பாண்டியன் பிரச்சனைகளை சமாளித்து காதலியின் கரத்தை பிடிப்பாரா என்பதுதான் படத்தின் கதை , படம் உண்மையில் மிகவும் பிரமாதமான படம் , கதையின் ப்ரொடக்ஷன் வேல்யூ மினிமம் என்றாலும் கேரக்டர் டெவலப்மெண்ட் மாக்ஸிமம் , இந்த படம் கண்டிப்பாக கிராமத்து படங்களில் ஒரு சிம்பிள் சஸ்பேன்ஸ் டிராமா படங்களை ரசிப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும், இந்த படத்தின் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் ஒரு முறை பாருங்கள். இந்த படத்தை இன்னுமே கவனமாக பார்த்தால் வன்முறையும் பழிவாங்கலும் எந்த வகையிலும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்ற சமூக கருத்து இந்த படத்தில் இருப்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இப்போது நமது வலைத்தளத்தின் விளம்பரத்தை பார்க்கலாம் : இந்திய வெப்ஸைட் வரலாற்றில் முதல் முறையாக திரைக்கு பல வருடங்களே ஆன படமாக இருந்தாலும் புத்தம்புதிய கருத்துக்களை சொல்லும் ஒரு வலைப்பூ NICE TAMIL BLOG எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, !!!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...