இந்த படம் என்ன காரணத்தால் நம்ம தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படம் என்று சொல்லவேண்டும் என்றால் நிறைய காரணங்கள் இருக்கிறது, மோகன் லால் மற்றும் பிரகாஷ் ராஜ் அவர்களின் ரொம்ப எக்ஸ்ஸலண்ட்டான நடிப்பு திறன் , ஒரு மக்களின் அபிமானமுள்ள கதாநாயகராகவும் ஒரு அரசியல் நுணுக்கமுள்ள கவிஞராகவும் இருக்கும் இரண்டு நண்பர்கள் அரசியலுக்கு போகும்போது அந்த புதிய வாழ்க்கை எப்படி இவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிப்போடுகிறது, இந்த அரசியல் போட்டி என்னென்ன வெற்றி தோல்விகளை உள்ளடக்கிய அனுபவங்களை கொடுக்கிறது , ஐஸ்வர்யாராய் அவர்களுடைய கதாப்பாத்திரத்தின் மேச்சுரிட்டி என்று நிறைய விஷயங்கள் ஒரு பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் மணிரத்னம் அவர்களின் படைப்பாக இந்த படத்தை ஆடியன்ஸ்க்கு கொடுத்தது என்றால் அதனை வேற லெவல் ஸ்டாண்டர்ட்ஸ்க்கு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இந்த படம் வேற லெவல் பொலிட்டிக்கல் கான்ஸ்பைரஸி படம், படம் பார்க்கும் ஒரு ஒரு நொடியும் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களை ஆர்வமாக பார்க்க வைக்கும். இந்த படத்தின் நிறைய காட்சிகள் நிஜ வாழ்க்கை அரசியல் தலைவர்களாக இருந்த MGR , கலைஞர் , அம்மா அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் என்பதால் வெளியீடப்பட்ட நாட்களில் நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் இப்போது இந்த படத்துக்கு நம்ம தமிழ் சினிமா ஆடியன்ஸிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த வலைப்பூவில் இருக்கும் போஸ்ட்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இந்த வலைப்பூவை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment