Thursday, December 21, 2023

CINEMA TALKS - ENEMY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 இந்த படத்துடைய ப்ளஸ் பாய்ண்ட்டாக நான்‌ நினைப்பது ரொம்ப துல்லியமான‌ திரைக்கதைதான். இந்த படம் நம்ம தமிழ் சினிமா ஆடியன்ஸ்க்கு ரொம்பவுமே புதிதாக இருந்தது.சிங்கப்பூர் பகுதியில் அமைதியான டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் உரிமையாளராக இருக்கும் சோழன் அங்கே கஷ்டப்படும் நம்ம ஊர் மக்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு காதல் , குடும்பம் என்று ஒரு அன்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். ஆனால் எதிர்பாராமல் நடந்த விபத்துகள் எல்லாம் யாரோ ஒருவரால் திட்டமிட்டு நடத்தப்படும் அசம்பாவித செயல்கள் என்று கண்டுபிடிக்கும் சோழன் இந்த சம்பவங்களுக்கு எல்லாம் பின்னணியில் இருப்பது தன்னுடைய பழைய நண்பன் ராஜீவ்தான் என்று கண்டுபிடிக்கிறார். அசம்பாவித சம்பவங்களை தடுக்க திறமைமிகுந்த கொலைகாரன் ராஜீவை நேருக்கு நேராக எதிர்க்கும் செழியன் இந்த மோதலை எப்படி ஜெயிக்கிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். இந்த படம் ட்ரைய்லரில் நமக்கு உறுதிப்படுத்திய அந்த ஆர்யா வேர்சஸ் விஷால் சண்டைக்காட்சிகளில் குறைவைக்கவே இல்லை. வெளிநாட்டில் எடுத்த படம் என்பதால் காட்சிகளின் அமைப்பு அவ்வளவு பிரமாதமான முறையில் தொகுப்பு பண்ணப்பட்டு உள்ளது. ஒரு சில பாடல்கள் மற்றும் கம்பேரிஸன் பெஸ்ட் பின்னணி இசை என்றாலும் படத்துக்கு பொருந்துகிறது.  இந்த மாதிரி படங்கள் நம்ம தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும் படங்கள் என்று சொன்னால் அது கண்டிப்பாக பொருத்தமான கருத்துதான். இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...